நாங்கள் என் சிறுவயதிலேயே அப்பாவின் வேலை நிமித்தமாக சென்னைக்கு வந்துவிட்டோம்.
ஆனால் என்னுடைய மனமோ எங்கள் கிராம்த்தையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது. அத்ற்கு முழு காரணமும் ்அப்பா தான்.
என் அப்பா, ஒரு நாளைக்கு ப்பல முறை கிராமத்தையும் அங்கிருக்கும் ஆலயமூர்த்தியின் அழகையும் வர்ணிப்பார்.
அவருடைய வார்த்தைகளில் ஏக்கமும் கண்களில் பல சமயம் கண்ணீரும் கூட வந்திருக்கிறது.
அவர் மனதளவில் கிராமத்தில்தான் வாழ்ந்தார்.அந்த ஊரின் காவிரியில் தான் குளித்தார்.
“அந்த கோயில் அம்பிகையின் கண்களை பாக்கனுமே ஆஹா… கருணை பிரவாகமா இருக்கும் கண்ணாச்சே அவளுக்கு … பணத்தை தேடி ஓடின்டு இருக்கற என்னோட மனசே அம்மா அம்மானு ஏங்கர்தே…. அந்த காலத்துல பக்தியை மட்டுமே தன்னோட உயிர் மூச்சாக கொண்டபெரியவாள்றாம் அவளே கதினு அவ கூடவே அங்கயே வாழ்ந்திருப்பா.”
்அப்பா பரவசமான மனநிலையில் சொல்லிக்கொண்டே இருப்பார்.
அல்லி மலர் கள் நிறைந்த குளமும், சிவாலயமும் தெருக்களும் ஏதோ கனவு போல எனக்குத் தோன்றும்.
மேலும் அவர் அடிக்கடி சொல்லும் இன்னொரு விஷயமும் எனக்குள் பிரமிப்பை ஏறபடுத்தி இருந்தது.
அதுதான்…
பூங்கோட் ட்த்தில் சுப்பராம சாஸ்திரிகளாத்தில் இருக்கும் ஒரு திவ்வியமான ஶ்ரீராமபட்டாபிஷேக படம்.
அந்த படத்தைப்பற்றி வாய்க்கு வாய் சொல்லிக்கொண்டேயிருப்பார் அப்பா.
அந்தமாதிரி ஒரு படத்தைப் பாரதபூமியில் எங்கு தேடினாலும் கிடைக்காதம்மா!
அவ்வளவு வரப்பிரசாதமா அமைந்த சித்திரம் அது '
என்று மெய்ம் மற்ந்து அவர் சொல்லும்போதெல்லாம் இப்பொழுதே பூந்தோட்டம் போய் அந்தச் சித்திரத்தைப் பார்த்துவிட மாட்டோமாஎன்ற ஆவல் எழும்.
ஐந்தாறு வருஷங்களுக்குமுன் எங்கள் பூர்வீக சொத்து சம்மந்தமாக எங்களுடைய
சொந்த கிராமமான பூந்தோட்டத்திற்கு போகவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது.
அப்பாவுடன் நானும் அடம்பிடித்து கிளம்பிவிட்டேன்.
உண்மையாகவே பூந்தோட்டத்தை அடைந்தபோது, எங்கே பார்த்தாலும் ராம படங்களாகவே என் கண்முன் மின்னி மறைந்தன.
அங்கே போனதுமே கோயிலுக்குப் போய் ஈஷ்வரனையும் அம்பிகையையும் தரிசனம் செய்தோம்.
அம்பிகையின் கண்கள் அப்பாவின் வர்ணனைகளை உண்மைதான் என்று விளக்கிகொண்டிருந்தன்.
என் கண்களில் கண்ணீர் தானாகவே பெருக அம்மா
ஜெகதம்பா லோகமாதா என்று
எதையுமே வேண்டிக்கொள்ளத்தோன்றாமல் அப்படியே அவளழகில் எனைமறந்து நின்றுவிட்டேன்.
பிறகு அருமையான தரிசனம் கிடைத்த மனநிறைவுடன் ்அப்பா நிலம் சம்மந்தப்பட்ட வேலைகளைத் தொடங்கப் போனார்.
நான்விடவில்லை அந்த ராமர் பட்டாபிஷேகப்படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தேன்.
என் தொந்தரவு - ஆசைகூட என்று கூடச் சொல்லலாம் - பொறுக்க முடியா மல் மற்ற வேலைகளைத் தள்ளிப் போட்டுக்கொண்டுஅப்பர என்னைச் சுப்பராம சாஸ்திரிகளாத்துக்கு அழைத்துப் போனார்.
அதிகாலைப் பொழுது அப்பொழுது சூரிய உதயம்ஆகவில்லை..
சிவாலயத்தில் இருந்து பூஜையின் மணி ஓசை கேட்டது. பசுக்களும் கன்றுகளுமாக தெருவில் வரிசையாக சென்றுகொண்டிருந்தன.
அந்த அதிகாலையில் ஒவ்விரு வீட்டு வாசலிலும் அழகிய கோலங்களும் மாடத்தில் விளக்குகளுமாக தெய்வாம்சம் அங்கேநிரம்பியிருந்தது.
இப்படிப்பட்ட ஊரில் நாம் வாழவில்லையே என்றுஎன் மனம் ஏங்கியது.
நாங்கள் சென்றநேரம் சுப்பராம சாஸ்திரியார் கண கணவென்று மணியடித்து பூஜை செய்துகொண்டிருந்தார்.
்அப்பா பயபக்தியோடு மேல் வேஷ்டியை இடுப்பில் சுற்றிக்கொண்டு உள்ளே போனார்.
அவர் நான் தேடிவந்த ராமர் பட்டாபிஷேக படத்துக்குத்தான் பூஜை செய்துகொண்டிருந்தார்.
மின்சார விளக்கே இல்லாத ஒதுக்குப்புறமான அந்த அறையில் குத்துவிளக்கின் ஒளியில் அந்த மிக அழகிய த்த்ரூபமான ராமர்பட்டாபிஷேக படத்தின் அழகு அந்த அறை முழுவதும் பரவி எனக்குள்
சிலிர்ப்பை தந்தது. அந்தப் படத்திலிருந்த தெய்வாம்சம் எனக்குள் அந்த அம்பிகையின் தரிசனம் போலவே இனம்புரியாத சந்தோஷமும்மனநிறைவும் அளித்துக் கொண்டிருந்தது.
அந்த சாஸ்திரிகள் மிகவும் வயதானவர்.அனுபவம் மிக்கவர்.
புநீ ராமனிடம் கொண் டிருந்த அளவற்ற் பிர்ேமையால் அவர் முகம் பிரகாசமாக இருந்தது..
அவர் மௌனமாக தியானத்தில் ஆழ்ந்தார்.
நாங்களோ மெய்மறந்து மாயலோகத்தில் கட்டுன்டு கிடப்பது போல அந்த படத்தின் அழகில் மயங்கிகிடந்தோம்.
தியானத்திலிருந்து கண் விழித்த சாஸ்திரிகள்.
“வாப்பா ராமச்சந்திரா” என்றார் மிகுந்த அன்புடன்.
“இவதான் உன் பொண்ணா” என்றும் கேட்டார்.
அவரையும் படத்தையும் கீழே விழுந்து நமஸ்காரம் செய்தோம்.
“ஆமாம் மாமா,ராமர் படத்தை சேவிக்கனும்னு ரொம்ப ஆசைப் பட்டா “ அப்பா சொன்னதும்.
' பக்கத்துல போய்ப் பாரும்மா! சின்ன வயசுலயே பக்தி ஏற்படர்து நல்லதும்மா. நீ ராமன் அருள் பெற்றுத் தீர்க்க சுமங்கலியாய் இரு ' என்றுஆசீர்வதித்தார். சாஸ்திரிகள் மனம் பக்தியால் பக்குவம் அடைந்திருக்கிறது என்பதை அவர் பேச்சும் வினயமும் காண்பித்துவிட்டன. m
என்னுடைய ஆர்வத்தை பார்த்த அவர் அந்தப் படம் யார் வரைந்தது என்று சொல்ல ஆரம்பித்தார்.
'ஏ றக்குறைய ஐம்பது வருஷங்களுக்குமுன் என்னோட அத் தான்் கோபால சாஸ்திரிகள் வரைஞ்ச படம் இது.
கோபாலன் என்னேவிடப் பத்து வயது மூத்தவன்.
சிறுவயசுலேந்தே படங்கள் எழுதுவதில் நல்ல திறமைசாலி.
சிறு வயசுலேந்தே கவிதை, ஒவியம் இரண்டிலுமே ஆர்வம் அதிகம.கவிச்சக்ரவர்த்தி கம்பனோட ராமாயணக் கவிதைகளை படிச்சிட்டு
கண்ணை மூடின்டு உக்காருவான்.கண்லேந்து ஜலமா பெருகும்.அப்படி ரசிப்பான்.
அவனுக்கு கவிதைகளை ரசிக்க முடிந்ததே தவிரக் சொந்தமா எழுத வரல.
இப்படித்தான் ஒரு நாள் கம்பனோட கவிதைய ஆழ்ந்து படிச்சின்டு இருந்தான்.
காட்டுல ஶ்ரீராமன் விஸ்வாமித்திரரோட தாடகைய சம்ஹாரம் பண்ணப் போற காட்சியதான் கவிதையா படிச்சின்டுஇருந்தான்.
திடீர்னு என்ன தோணித்தோ தெரியல்ல ?அப்படியே
சித்திரமாக வரைஞ்சுட்டான்.
இளஞ் சூரியன்போல் இருக்கும் சூரிய குல சிங் கங்களைத் தன்னோட சித்திரத்தில் பார்த்துப் பார்த்து பூரிச்சிப்போய் அன்னிக்கிபூராவும் க்ண் ணிர் பெருக்கின்டே இருந்தான்.
அவனுன்ட ஒரு விசேஷ குணமும் உண்டு. தன்னேவிடப் பெரியவா விஷயம் தெரிஞ்சவா நிறைய பேர் இருக்கா,
அவாளைவிட தான் எந்த வித்த்திலும் ஒசத்தி கிடையாதுனு நினைப்பான்.
தன்னோட வித்தையை ஒருநாளுமே பெருமையாவே நினைக்க மாட்டான்.”
என்று சொல்லி நிறுத்திவிட்டு
என்னை பார்த்தார்.
பிறகு
“இந்த அறை ஒதுக்குப்புறமான பூஜைக்கு லாயக்கில்லாத அறைதான்.
ஆனா இங்கயே தான் நான் பூஜை பண்ணின்டு இருக்கேன்.
நான் ஏன் இங்கயே பூஜை பண்றேங்கர்தயும் உனக்கு சொல்றேன்.”
என்று என்னைப் பார்த்து அவர் சொன்னதும் ஆர்வம் அதிகமானது எனக்கு.கைகளைக் கூப்பிக் கொண்டேன்.இப்படிப்பட்ட விஷயங்களை கேட்க என்ன புண்ணியம் செய்தேனோ என்று மகிழ்ச்சியில் காதுகளை தீட்டிக் கொண்டேன்.
“என் அத்தான் கோபாலன் இந்த அறையில் தான் தனிமையில் சித்திரங்கள வரைவான். என்னை மட்டும் அனுமதிப்பான்.
கவிச்சக்ரவர்த்தி கம்பனோட கவிதைகளைப் படிக்கர்தும் அவைகளுக்கு தகுந்த சித்திரங்கள் வரையர்தும,அதை பார்த்துக் அவனேகண்ணிர் பெருக்கி மெய்ம்மறந்து போறதுமா இருப்பான்.
இதுவே அவனோட தினசரித் தொழிலாவேப் போச்சு.
ஆனால்…இப்படி இருந்தால் பிழைக்க முடியாதேனு
ஆத்துல இருக்கிற பெரியவாள்ளாம் எங்க ரெண்டுபேரயும் கடிஞ்சிப்பா.
மத்த பிள்ளைகள் போல “வேலைக்குப் போய் பிழைங்கோளேன்னு” சொல்லுவா.
நான் அத்தைக்கு பயந்து வேலைக்குப் போக ஆரம்பித்தேன்.
அவன் வரமாட்டான்.
“பையனுக்குக் காலா காலத்தில் ஒரு கால்கட்டைக் போடனும். படம் வரைவதே கதியாகக் கிடக்கறான், அவன் எதிர்காலம் என்னவாகும் நீங்களோ அவனை கவனிக்கர்தே இல்லயே “ என்று தன் பர்த்தாவிடம் சொல்லின்டே இருந்தா அத்தை.
' அவனவன் கர்மாவின்படி மட்டும்தான் எல்லமே நடக்கும் . நீயும் நானும் எதுக்கு சங்கடப்படனும்?
எல்லாம் அவன் பாத்துப்பான்”
என்று அத்திம்பேர் அங்கிருந்த பெருமாள் படத்தை கைகாட்டி அத்தைக்குத் தேறுதல் சொன்னாலும் ்அத்தை வேதனைப்பட்டாள்.
ஒரு சமயம் கோபாலன் அவனோட மனச கொள்ளை கொண்ட அந்த ஶ்ரீ ராமனை கல்யாண கோலத்தில்
வரைஞ்சின்டுருந்தான்..
சரியாக அந்தசமயத்தில ஆச்சர்யப்படும்படியா
சிர்காழியைச் சேர்ந்த மிராசுதார் ஒருவர்
தன்னோட புத்ரிய இந்த ஶ்ரீராம பக்தனுக்குக் கொடுக்க மிகுந்த விருப்பபட்டு தாமாகவே முன் வந்தார். கல்யாணம் வெகு விமரிசையாகநடந்தது. கோபாலன் மனைவி ஸ்வர்ணம் அசல் தங்கம் தான்.
தன் பர்த்தா வரையும் ஓவியங்களிக்கு கூடவே இருந்து ஏதாவது திருத்தங்கள் கூட சொல்லுவாள்.
ஆனால் திருமணம் ஆகியும் பிள்ளை மாறலன்னதும்
" பிள்ளை சரியில்லே' என்ற ஏக்கத்தால் அத்தையும் அத்திம்பேரும் அடுத்தடுத்துச் சில வருஷங்களில் இறந்து விட்டார்கள்.
ஊரிலிருந்த சொத்துக்களைக் கூட பராமரிக்கல அவன்.எந்த ஆசாபாசமும் அவன் மனசுல இல்ல.அவனுக்கு குழந்தைகளும் இல்ல. ஆனா எப்போதும் கம்பனோட கவிதைகளை மட்டும் படிச்சின்டே அத சித்திரமா வரைஞ்சின்டே தான் இருந்தான்.வேற எந்த சிந்தனையுமில்ல அவனுக்கு”என்று சொல்லிக் கொண்டே சாஸ்திரிகள் படத்தைப் பார்த்து யோசனையில் ஆழ்ந்தார்.
அந்த மற்ற படங்களெல்லாம் இப்போ எங்கே?' என்று ஆவலுடன் கேட்டேன்.
அம்மா! மத்த படங்கள எல்லாம் தனக்கு வேணும்னு கேட்டவாளுக்கு தாராளமாக்க் கொடுத்துவிட்டான்.
குழந்தை இல்லை என்பது ஸ்வர்ணத்திற்கு குறையாகத்தான்் இருந்தது.
வழக்கம் போல் அந்த வருஷமும் ஶ்ரீ ராமநவமி உத்ஸவம் ஆரம்பமாச்சு
கோபாலன் ஆத்துலயே ராமாய னக் காலகேஷபமும் நடந்தது.
புராணிகர் சொல்ற கம்பனின் கவிதைச் சுவையை ஊர்ல இருக்கவா எல்லாரும் இவாத்துக்கு வந்து கேட்டு சந்தோஷப்பட்டுன்டு இருந்தா.
ஆனால்பு…ராணிகருக்கு அடுத்தாற்போல் இருக்கும் இந்த ஒதுப்புறமான அறையில் தான் கோபாலன் இருப்பான்.
வெளில வரமாட்டான்.உள்ளேர்ந்தே கேப்பான்.
புராணிகர் ஒவ்வொரு கவி தையையும் விளக்கிச் சொல்லும்போது அவன் மெய்ம்மறந்து போவான்.
அவனுடைய கை வரைய ஆரம்பிக்கும். அது என்ன வரையர்துனு அவனுக்கே தெரியாது
கவிதை இன் பத்தில் மூழ்கி இருப்பான் அவன். அந்த சித்திரங்கள் கதைகளை நேர்லயே பாக்கறா மாதிரி அழகு சொட்ட அமையும்.
மறுநாள் பட்டாபிஷேக வைபவம்.
முதல்நாள் இராத்திரிலேந்தே கோபால னின் பேச்சு, செயல் எல்லாமே ரொம்ப அதிசயமாக இருந்துது.
வீட் டில் ஸ்வர்ணம்மட்டும் பட்டாபிஷேக வைபவத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் பண்ணின்டு இருந்தா. கோபால வழக்கம்போலவேஅறையிலிருந்து வெளியே வரவில்லை.
அது அவள் மனத்திற்குக் ரொம்ப வருத்தமாயிருந்ததுனு அவளை பாத்ததும் எனக்கு புரிந்தது.
பட்டாபிஷேக வைபவம் சுப வேளே யில் ஆரம்ப மாயிற்று.
ஹரே ராம்’ ஹரே ராம் னு
- என்று ராம நாம்ம் வீடு பூராவும் ஒலிச்சிது
- கோபாலன் எழுந்து வெளியே வந்தான்.
- பிரமிச்சு நின்னான்.
- பட்டாபிஷேகத்திற்காக வைத்திருந்த படத்தைப் பார்த்துப் சந்தோஷமா சிரிச்சான். திரும்பவும் உள்ளே போக திரும்பினான்..
' கோபால இப்படி உட்காரப்பா னு புராணி கர் அன்போட கூப்பிட்டார்.
ஆனா . அவன் சிரிச்சின்டே அறைக்குள்ள போய் கதவைத் தாப்பா போட்டான்.
இரவு வைபவங் களும் முடிஞ்சிது.
ஸ்வர்ணம் தன் பர்த்தாவுக்கு கையில பால் எடுத்துன்டு அறைக் கத வைத் தட்டினா.
யார் ? ஸ்வர்ணமா ? வா’ அப்படீன்னு கோபாலன் அவள் கையைப் பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டுபோய்க் கதவைத் மறுபடியும்மூடிட்டான்
இங் தச் செய்கை எனக்கு ஆச்சர்யமா இருந்துது.
மறுநாள் அதிகாலை நேரம் ஸ்வர்ணம் அயர்ந்து தூங்கிட்டா .
அறையில் ஏதோ பேச்சு சத்தம் கேட்டது.
திடுக்கென்று கண் தொறந்து பார்த்தாள்.
அங்கே கோபாலன் அவன் வரைந்திருந்த பட்டாபிஷேகப் படத்தோட திரையை நீக்கிவிட்டு
தலைமேல் கைகூப்பிக் கண்கள் நீரைச் சொரிய நின்றுகொண்டு
ஜெய் ஶ்ரீராம்
ஜெய் ஶ்ரீராம்
ஜெய் ஶ்ரீராம்
என்று ராம மந்திரத்தை ஜபம் பண்ணின்டு இருந்தான்.
திடீரென்று
இந்தப் பட்டாபிஷேகப்படத்திலிருந்து பேரோளி வந்துது.அவ்வளவுதான்
' ராமா நானும் வரேன்னு ' என்று சொல்லின்டே கோபாலன் தடதடனு படத்துக்கிட்டபோய் மூர்ச்சையாகி கீழே விழப்போனான். அதுக்குள்ள ஸ்வர்ணம் அவனைத் தன் மடியில் தாங்கின்டுட்டா.
ஆனால்…' ஶ்ரீராம சங்கீர்தனத்திலயே கோபாலன் பகவானை அடைந்தான்். அந்த உத்தமியும் அவனை பிரிஞ்சி அதிகநாள் உயிர்வாழல.
“ஸ்வர்ணம் அவளோட உயிர்பிரியர நேரத்தில எங்கிட்ட சொன்னாள்
“இந்த உலகத்துல இருக்க ஐச் வர்யம் அத்தனையும் இந்தப் படத்துக்கு ஈடாக ஆகாது.
என் பர்த்தா அவருக்கு கிடைத்த வரப்பிரசாதத்தால் தான் புரீ ராமனின் பட்டாபிஷேகக் கோலத்தைக் தன் மனசாலேயே கண்டு களிச்சு எழுதின சித்திரம் இது. உங்களன்ட நம்பிக்கை யோட குடுக்கறேனு “ என்று சொல்லி எங்கிட்ட குடுத்தா.
" அந்தப் பக்த தம்பதிகளின் ஆசியால இந்த படத்திற்கு இதுவரை ஒரு குறையும் வரல.
நான் முத லிலேயே சொன்னேன்ே இல்லயாம்மா?
ஒதுக்குப்புற மாக இருந்தாலும் பூஜைக்கு இந்த அறை உபயோகிக்க காரணமே
என் அத்தான்் பல அருமையான படங்களே எழுதியதும் இங்கேதான்் அவன் ஆத்மா ஈச்வ ர&ன அடைந்த்தும் இங்கதான். இந்த அறையின் மகத்துவம் கொஞ்ச நஞ்சமல்ல” என்று ஆனந்தபாஷ்பம் பொழியக் கூறி முடி க்,கார் சாஸ்திரிகள்.
No comments:
Post a Comment