Friday, August 26, 2022

அன்பின் வடிவம் உருண்டை



அந்தபெரிய ஆஸ்பத்திரியில் நிறைய நோயாளிகள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர்.

அங்கே டாக்டர்களும் நர்சுகளும்  வழக்கமாக அணிந்துகொள்ளும் யூனிபார்ம் பேண்ட் சட்டைக்கும்  மேல் அவர்களுக்கே ஒருவரைஒருவர் அடையாளம் புரிந்து கொள்ளமுடியாதபடி கவச உடை அணிந்து பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.


அந்த ஆஸ்பத்திரியின் சீஃப் டாக்டர் இராமநாதன் பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணர்.அதுமட்டுமல்ல பல தொண்டுநிறுவனங்களுக்காக இலவசமாக அறுவை சிகிச்சைகள் செய்து பல ஏழைகளின் வீட்டில் விளக்கேற்றி வைத்திருக்கிறார்.

தொண்டுள்ளம் படைத்த டாக்டர் இராமநாதன்  அடிக்கடி மீட்டிங்குகள் நடத்தி போர்க்களத்தில்  வீர்ர்களுக்கு எழுச்சியூட்டுவது போலபிற டாகடர்களுக்கும் செவிலியர்களுக்கும் நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்தார்.


எதிரிகளின் கைப்பிடியிலிருந்து  தன்னுடைய தாய் மண்ணைக்காக்க  தன்னுயிரை மதிக்காமல்  போராடும் ராணுவ வீர்ர்களைப் போல  அந்த கொடிய வைரஸிலிருந்து  எப்படியாவது நோயாளிகளை 

காப்பாற்றிவிடவேண்டும் என்று   மருத்துவர்கள் போராடிக் கொண்டிருந்தனர்.


கண்களில் வழியும் கண்ணீருடன் தன் அன்புக்குரியவர்களை தாக்கிக் கொண்டிருக்கும் அந்த கொடிய வைரஸை சபித்துக்கொண்டு  ஏதாவது அற்புதம் நிகழந்துவிடாதா என்ற ஏக்கத்துடன் நோயாளிகளின்   உறவினர்களும் நண்பர்களும்  ஆஸ்பத்திரியின் பிரதானநுழைவாயிலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கே காத்திருந்தவர்களில் சேகரும் ஒருவன்.ஆனால் மற்றவர்களைப்போல் இல்லாமல்

மனம் நிறைய மகிழ்ச்சியும் குதூகலமுமாக தன் ஆட்டோவில் காத்திருந்தான் அவன்.

போன வாரம் தான் அந்த  சேகருக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது.சற்று சிக்கலான பிரசவம் தான்.சிசேரியன் செய்துதான் பிரசவம்நடந்ததுஎல்லாம் நல்லபடியாக முடிந்து இன்றுதான் டிஸ்சார்ஜ்.


சேகர் யார் என்று பார்க்கலாம்.

சேகர் ஒரு ஆட்டோ ஓட்டுனர்அவனுடைய அப்பா நைட் வாட்ச்மேன்அம்மா ஒரு அபார்ட்மென்டில் நான்கைந்து வீடுகளில்  வீட்டுவேலைகள் செய்துவந்தார்.

இவர்கள் மூவருடைய  வருமானத்தில்  குடும்பம் நன்றாகவே நடந்தது..


இந்த வைரஸ் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களில் சேகரின் குடும்பமும் ஒன்று.

அந்த குடும்பத்தில் மூவருக்கும் ஒரே சமயத்தில் வேலைபோய்விட்டது.ஆறுமாதங்களாக வேலையே இல்லை.சேகரின் மனைவி  முழுகாமல் இருந்தாள்..

பிரசவதேதி வேறு நெருங்கிவிட்டதால் என்ன செய்வதென்று புரியாமல் விழித்த அவன் தன் ஒன்றுவிட்ட அண்ணன் அருளிடம்உதவிகேட்டான்.அருள் டாகடர் இராமநாதனின் கார் டிரைவர்டாக்டரிடம் சேகரின் கஷ்டமான குடும்ப சூழ்நிலையை விளக்கமாகசொல்லி உதவிகேட்டான் அருள்.

டாக்டரின் சிபாரிசால்  ஒரு ரூபாய்கூட பணம் கொடுக்காமல் இந்த பெரிய மருத்துவ மனையிலேயே தன் மனைவியை சேர்த்திருந்தான்சேகர்.


அருளிடம் மனைவியின் ஆஸ்பத்திரி செலவுக்கு ஆட்டோவை விற்றாவது பணம் கொடுப்பதாக சொன்னான் சேகர்.ஆனால் டாகடர்பணம் வாங்க மறுத்துவிட்டாராம்.


இந்த மிக மோசமான சூழ்நிலையில் தன் குழந்தையையும் மனைவியையும் கடவுள் போல காப்பாற்றிக் கொடுத்த டாக்டர் ராமநாதனைநேரில் பார்தது நன்றி சொல்லக்கூட வழியில்லாமல் சேகரை இந்த வைரஸ் பரவல் தடுத்துவிட்டது.


சேகர் குடும்பத்தார் டாக்டருக்கு  இந்த நன்றிக்கடனை  எப்படி செலுத்தமுடியும் என்று எத்தனை யோசித்துப் பார்ததபோதும் ஒருவழியும் புலப்படவில்லை.

இந்த வைரஸ் போய்விடுமா இல்லை இதே நிலைதானா என்ற அச்சமே அவர்களை முடிவெடுக்க முடியாமல் தடுத்தது.


சேகரின் அம்மாவும் அப்பாவும் வீட்டில் இரண்டு குத்துவிளக்கை முருகன் படத்தின் முன்னால்  ஏற்றிவைத்து அந்த டாக்டரும் அவரின்குடும்பத்தாரும் நோயற்று நீண்ட காலம் வாழவேண்டும் என்று மனமுருகி பிராரத்தனை செய்தனர்.


சேகர் குடியிருந்த அந்த வீட்டு சொந்தக்கார்ருக்கு குழந்தைகள் இல்லை.

இந்த ஒரு வீடு மட்டும் தான் அவர்களுடைய சொத்தாக இருந்தது

அவர்களுடைய வீட்டுக்கு பின்புறமாக கட்டியிருந்த அந்த சிறிய வீட்டில் 

ஒரு அறையும் சற்று நீளமான  ஹாலும் அந்த ஹாலிலேயே ஒரு பக்கமாக ஸ்லாப் போட்டு சமைக்க மட்டும் பயன்படுத்தும்படி இருந்தது.

பாத்திரங்களை வெளியில் தான் தேயக்கவேண்டும்.ஆனாலும் குடும்பத்தில் மூத்தமகனான சேகர் அவன்  மனைவி அம்மா அப்பா மற்றும்இரண்டு தம்பிகள் ஆகியோர் அந்த சிறிய பின்பக்கத்து போர்ஷனில் மகிழ்ச்சியாகவே இருந்தனர்.


வீட்டு உரிமையாளருக்கு    இந்த வாடகை முக்கியமான வருமானமாக இருந்தது .அதனால் ரொம்ப கறாராக ப்பேசி முதல் ஐந்துதேதிக்குள் இவர்களிடம் வாடகை வசூல் செய்துவிடுவார் அவர்.

ஆனால் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக  இவர்களிடம் வாடகையே கேட்கவில்லை.கரண்ட் பில்லுக்கு மட்டும் போன் செய்துபணம் கேட்டார்.

அவ்வப்போது போனில் மட்டும் பேசுவார்..

வெளியே போய்விட்டு வந்தால் கைகால்களை சோப்பு போட்டு அலம்பவேண்டும் என்றும் அரிசி இருக்கிறதா?ஏதாவது உதவிதேவைப்பட்டால் சொல்லுங்கள் என்றும் அக்கறையுடன் பேசினார்.


இந்த உலகம் நல்லவர்களால் இயங்குவதை சேகரால் புரிந்து கொள்ள முடிந்தது.


புதிதாக வீட்டிற்கு  வந்த ஆண் குழந்தையால் அவர்களின் பசித்த வயிறு சந்தோஷத்தில் நிறைந்திருந்தது.


ஆனால் பெரிய சேமிப்பு எதுவுமில்லாத வானம் பார்தத பூமியாய் அன்றாட உழைப்பை மட்டுமே நம்பி கௌரவமாக வாழ்நத சேகர்குடும்பத்தினரின்  நிலை மோசமாகிக் கொண்டே வந்தது.

என்னடா பண்றது சேகர் இப்படி ஆயிட்டுது உலகம்போகப் போக எப்படி சமாளிப்பது” என்று கைகளை பிசைந்தாள் அம்மா.


அன்றும் பலத்த யோசனையுடன் மல்லாந்து பார்த்து படுத்துக் கொண்டிருந்தான் சேகர்.


தீடீரென்று அழுகுரல் சத்தம் கேட்டது.

வெளியே வந்து பார்த்தான் சேகர்.


வீட்டுக்கு சொந்தக்கார்ரின் மனைவி போனில் அழுதுகொண்டிருந்தாள்.

தம்பி கவலப்படாதடா.கடவுள் உன்னக் காப்பாத்துவார்டா.உன் பொண்டாட்டிக்கு ஒண்ணும் ஆகாதுடா.”

என்னது மூக்குல குழா சொருகியிருக்கங்களா என்னடா சொல்ற.திடீர்னு அவளுக்கு எப்படிடா கொரோனா வந்துது.அடக்கடவுளேஉங்க அபார்ட்மென்ட்ல எல்லாருக்கும் கொரோனாவாஎன்னடா சொல்றஎன்னங்க   இங்க வாங்க என் தம்பிகிட்ட பேசுங்க ஒரேதலசுத்துது” சொல்லிவிட்டு தடாலென்று அவள் கீழே விழும் சத்தம் கேட்டது.குடுகுடுவென்று ஓடி கதவைத் தட்டினான் சேகர்.கதவைத்திறந்த வீட்டுசொந்தக்கார்ர் கண்ணீருடன் நின்றிருந்தார்.உடம்பெல்லாம் வியர்த்து கொட்ட கீழே விழுந்து கிடந்தாள் அவர் மனைவி.

சற்றும் தாமதிக்காமல் வீட்டு சொந்தக்கார்ரும் சேகரும் அவனுடைய அம்மாவும் சேர்ந்து மயங்கிக்கிடந்த அவளை தூக்கி ஆட்டோவில்போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினர்.


சரியான சமயத்தில் வந்திருந்ததால் ஹார்ட்அட்டாக் ஏற்பட்டு மயங்கி இருந்தவளின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது.கொரோனாநேரமாக இருந்தாலும் சேகர்  ஆஸ்பத்திரி வாசலிலேயே தவம் போல கிடக்கும் வீட்டு சொந்தக்கார்ருக்கு அம்மா சமைத்துக் கொடுத்தஉணவை வற்புறுத்தி சாப்பிடவைத்தான்.

ஏறகனவே அந்த அம்மாளுக்கு  பீபி சுகர் ப்ரச்ணைகள் இருந்ததால் பத்து நாட்கள் ஓடிவிட்டன.பிறகுதான் நார்மல் வார்டுக்கே கொண்டுவந்துவிட்டார்கள்.


மனைவி பிழைத்தாலும் இப்போது பணப்ரச்ணையில் மாட்டிக் கொண்டார் வீட்டு சொந்தக்கார்ர்.

சேமிப்பைத் தாண்டிய பெரிய பில்லாக வந்துவிட்டதால்  எப்படி கொடுப்பது என்று பயந்துபோய்விட்டார்அவருடைய மைத்துனரும்ஏற்கனவே ஆஸ்பத்திரியில் மனைவியின் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.அவரிடமும் இந்த சமயத்தில் பண உதவிகேட்கதயக்கமாக இருந்தது அவருக்கு.


 அங்கே அந்த ஆஸ்பத்திரியின் வெளியே மரத்தடியில் இவரைத் தவிர இன்னும் சிலர் உட்கார்ந்திருந்தனர்.

அவர்களில் ஒரு முதியவர் இவருக்கு யோசனை சொன்னார்.

 “என்னய்யா இது ஆஸ்பத்திரி பில்லை பாத்தா ரொம்ப பயமால்ல இருக்கு.நமக்கு இதய வலி வந்துடும் போல இருக்கே.

இங்க வரலனா நோயாளிய பிழைக்க வைக்க முடியாது

வந்தாலோ எவ்ளோ பணக்காரனா இருந்தாலும் பணம் பத்தமாடேங்குது.

ஆனாபணமில்லா ஏழையான எங்களுக்கு நோயக் குடுத்துட்டியே.ஒரு ரூபா கூட கடன் வாங்கினதில்ல.அந்த நர்ஸம்மா கால்லவிழுந்து அழுதுபில்லை  குறைக்கப் கேக்கப்போறேன்.நேத்து ஒரு வயசானவரு இப்படித்தான் செஞ்சாறுஅவருக்கு கொஞ்சம்குறைச்சாங்களாம்.நீங்களும் கேட்டுப் பாருங்க.” என்று பேசினார்.

ஆனால் வீட்டு சொந்தக்கார்ருக்கு இப்படிப் பட்ட மோசமான வைரஸ் பரவும் சூழ்நிலையில்

சரியான சமயத்தில்  சிகிச்சை அளித்து தன்  மனைவியின் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்த மருத்துவரின் தொகையை குறைக்க மனம்ஒப்பவில்லை.


 அவர் சேகரை அழைத்தார்.

” யாரிடமாவது ஒரு லட்சம் கடன் வாங்கித் தரமுடியுமாப்பா.” என்று கண்ணீர் பெருக கேட்டார்.


சேகருக்கு திக்கென்றது.இவனை நம்பி ஒரு இலட்சம் யார் கொடுப்பார்கள்?

இருந்தாலும் “கண்டிப்பா கேக்கறேன் ங்க” என்று தைரியம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தான்.


அம்மாவிடம் நடந்ததை சொன்னான்.

சேகரின் மனைவி தன் தாய் வீட்டில் கொடுத்த தங்க காது தோடுகளையும் வளையல்களையும் தாலிக் கொடியையும் தர அவளாகவேமுன் வந்தாள்.


சேகரின் அம்மா “சேகர் ,வாங்கிக்கோடா.பின்னாடி சம்பாதிச்சா திரும்பவும் நகைகளை வாங்கிக்காலாம்ஆனா நமக்கு இந்தகஷ்டமான நேரத்துல வாடகை கேட்டு  வீட்டை காலி பண்ணுங்கனு விரட்டி விடாம அடைக்கலம் கொடுத்தவங்களுக்குஉதவனும்டா.அவர்கிட்ட சொல்லுடா… ஐயா..நம்ம பணம் தான் அதனால வட்டியும் குடுக்க வேண்டாம்.திருப்பி கொடுக்கர்த பத்தியும்  கவலப் படவேண்டாம்னும் சொல்லிடு. ” என்று சமாதானம் சொன்னாள்.

அதைவிட வேறு சொத்தே அவர்களிடம் இல்லாத்தால் மனைவியின் கழுத்தில் மஞ்சள் கயிறைகட்டிவிட்டு அடகு கடை நோக்கிஓடினான் சேகர்.


நகையை விற்ற பணத்தை வீட்டு சொந்தக்கார்ரிடம் கொடுத்துவிட்டு அது தன் மனைவியின் நகையை விற்ற பணம்தான் என்றவிவரத்தையும் அம்மா சொன்னதையும்  சொன்னான்.சரியான நேரத்தில் தன் மனைவியை  உயிர்பிழைக்க அடுக்கடுக்கான உதவிகள்செய்யும்  சேகரைக் கட்டியணைத்து கண்கலங்க தன் நன்றியை தெரிவித்தார் அவர்.


ஆனால் சேகரின் மனம் நிறையவில்லை.அவன் தனக்கு கடவுள் போல உதவி செய்த அந்த டாக்டர் இராமநாதனைப் பற்றி நினைத்தான்.

அவ்வளவு பெரிய மருத்துவமனையில் அந்த வைரஸ் பரவஉம் நேரத்தில் கூட தன்னிடம்  ஒருபைசா கூட வாங்காமல்  உதவி செய்தடாக்டருக்கு எந்த கைம்மாறும் செய்ய முடியாமல் ஏன் பாதங்களில் விழுந்து நன்றி கூட  சொல்ல முடியாமல் போய்விட்டதே என்றுவருந்தினான்.


ஆனால்

அவன் மனைவிக்கு இலவசமாக சிகிச்சையளித்தது டாக்டர் இராமநானின் மருமகள் லீலா தான் என்பதையும்,

இந்த ஆஸ்பத்திரியிலும் கூட டாக்டர் இராமநாதன் தான் எமர்ஜென்சி கேசான சேகர் வீட்டு  உரிமையாளரின் மனைவிக்கு  இருதயஅறுவை சிகிச்சை அளித்திருந்தார்  என்பதையும் அதனால்  சேகரின் மனைவியின் நகைவிற்ற பணம் ஒரு லட்சம் ரூபாய் கூட டாக்டர்இராமநாதனின்  அக்கவுன்ட்க்குத் தான் போகின்றது என்றும் அவனிடம் யார் சொல்வது?









No comments:

Post a Comment