பிடிக்காத விஷயம் லேட்டஸ்ட்
விளையாட்டு போல கணவனுடன் சிங்கப்பூர் வந்து ஏறக்குறைய மூன்று வருடங்கள் ஓடிவிட்டன.முதன் முதலில் தன் சொந்த ஊரைவிட்டு வெளிநாடு வந்திருக்கிறாள்.தூய்மையான அழகான சுற்றுப்புறங்கள். வீட்டை விட்டு வெளியே வந்தாலே மனதில் உற்சாகம் பிறந்துவிடும் ல்லிதாவிற்கு.தற்போது பஸ்ஸுக்காக காத்திருக்கிறாள். அழகிய அகலமான அந்த சாலையில் வாகனங்கள் பறந்து கொண்டிருக்கின்றன.
இன்னும் ஆறு நிமிடங்களில பஸ் வந்துவிடும்.உட்கார சீட் கிடைக்குமோ என்று ஐபோனில்transport app ல் பார்த்துக்கொண்டிருந்தாள் ல்லிதா.இருக்கைகள் இருக்கின்றன என்று அது பச்சை வண்ணம் காட்டியது.
பஸ் ஸ்டான்டிலும் அதிக கூட்டம் இல்லை.வெயில் சுரீரென்றது.
முகத்தில் அணிந்திருந்த முக்கவசத்தால் மூச்சு காற்று மூக்குக் கண்ணாடியில் பனிபோல படிந்து எதையும் பார்க்க முடியாமல் தொந்தரவுசெயத்து.
கைக்குட்டையை எடுத்து கண்ணாடியை கழட்டி வியர்வை சூழ்ந்த கண்களையும் பிறகு கண்ணாடியையும நன்கு தொடைத்துவிட்டு மீண்டும் அணிந்து கொண்டாள்.அப்பாடா என்று வந்த பெருமூச்சை மீண்டும் கண்ணாடியை
கழட்டவேண்டியதாகிவிடுமோ என்ற பயத்தில் மெதுவான மூச்சாக மாற்றினாள்.
பஸ் வந்துவிட்டது.கூட்டமேயில்லை.கையிலிருந்த கார்டை டேப் செயதுவிட்டு காலியாக இருந்த பஸ்ஸிற்குள வசதியான இடமாக தேர்ந்தெடுத்துக் கொண்டு உட்கார்ந்து ஏசியை முகத்திற்கு நேராக படும்படிதிருப்பிவிட்டு கொண்டாள். பஸ் அடுத்த ஸ்டாப்பிற்கே வந்துவிட்டது.
இங்கும் கூட்டம் இல்லை.யாரோ இருவர் ஏறினர்.அதில் ஒருத்திதான் பாகீரதி.
இவளைப் பார்த்ததும் பக்கத்தில் வந்தாள்.கையிலிருந்த காய்கறி பைகளை காலடியில் வைத்துவிட்டு புன்னகையுடன்பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
“என்ன எப்படி இருக்க” ல்லிதாவின் புன்னகை மாஸ்கைத் தாண்டி அவள் மலர்ந்த கண்களில் காட்டிக் கொடுத்தன.
“ நல்லா இருக்கேன்டீ.நீ நல்லா இருக்கியா? ஊர்ல நாம ரெண்டு பேரும் ஒரே ஆபிஸ்ல வேல பாத்தோம்.
ஒரே பஸ்லதான் வீட்டுக்குப் போவோம்.ஆபிஸ் முடிஞ்சி கிளம்பும்போது முன்னபின்ன ஆனாலும் எனக்காக நீயும் உனக்காக நானும் காத்திருப்போம்.ஒரு நாள் நீ லிவு போட்டாலும் உன்ன பாக்காம எனக்கு போரடிச்சிடும்.முன்கூட்டியே சொன்னா நானும் லீவு போடுவேனேனு உங்கிட்டசண்டை போடுவேன்.
அப்புறம் என் கல்யாணம் முடிஞ்சி இங்க வந்துட்டேன். நீ மட்டும் உன் பையன் காலேஜ் போற வரைக்கும் அங்கயே வேல பாத்திருக்கத் தனியா.நான் இல்லாத குறை தெரியாம உன் புகுந்தவீடும் மூணே ஸ்டாப்ல ஆபிஸ் இருக்கற மாதிரி அமைஞ்சிதுனு சொன்ன.
இப்போ பாரு நாம ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து ப்லாக்லயே இருக்கோம். ஆனா ஒரு மாசத்துக்கு மேல ஆகுது உன்ன பாத்து.மருமக ஆபிஸ் போறா. என் பேத்திங்க ரெண்டும் ஸ்கூல் போயிருக்குங்க.
அதான் காய்கறி அதுங்களுக்கு கொஞ்சம் ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கினேன்.அடுத்தது அவங்கள ஸ்கூல்லேந்து கூட்டிட்டு வரணும்.மாத்தி மாத்தி வேல சரியா இருக்கு.
ஆமாம் நீ எப்படி இருக்க. பட்டுப்புடவை கட்டி இருக்கயே எதாவது விசேஷமா எங்க போயிட்டு வர? என்று படபடவென்று பேசினாள்.
“நான் நல்லா இருக்கேன்.இன்னிக்கு என் பையனோட கல்யாண நாள்.அதான் கோயிலுக்கு போயிட்டுவரேன்.” பழைய ஞாபகங்கள் தந்த மகிழ்ச்சியில் வார்த்தைகளில் உற்சாகம் கொப்பளிக்கப் பேசினாள் ல்லிதா.
“ஆமாம் உன்ன நேர்ல பாத்துகேக்கனும்னு நினைச்சேன். எதோ ஊர்ல இருக்க வீட்ட வித்துட்டு அமெரிக்கால உன் பையனோடவே செட்டிலாகறேனு போன்ல சொன்னியே.என்னாச்சு?” என்று கேள்வி மேல்கேள்வியாக அடுக்கினாள் வந்ததும் வராத்துமாக.
“அமெரிக்காவுக்கு வரச்சொல்லி கூப்பிட்டுக்கிட்டேதான் இருக்காங்க.
ஆனா வீடு விக்க எனக்குத் தான் இஷ்டமில்ல.
என் வீட்ல அவங்க எல்லாரும் ஒரே கட்சியா இருக்காங்க.நான் தான் பிடிவாதமா இருக்கேன். அந்த வீடு எங்களோட கனவு வீடு.எதுக்கு விக்கனும்.
கொஞ்சநாள் பையன் கூட இருந்துட்டு மறுபடியும் சொந்த ஊருக்கே வந்து வாழனும்னு ஆசையா இருக்கு.” ல்லிதாவின் குரலில் ஏக்கம் தெரிந்தது.
அடுத்தடுத்த ஸ்டாப்பில் கூட்டமாக நிறையபேர் வந்து ஏறியதால் இவர்கள் பேசுவதை சற்று குறைத்துவிட்டு வேடிக்கைபார்த்தனர்.பிறகு
“எனக்கு என்ன சொல்றதுனே தெரியல ல்லிதா.நாம எப்பவுமே பசங்க கூட இருக்கர்துதான் நல்லது. அவங்க முன்னுக்குவர நம்மால முடிஞ்ச அளவு நாமதானே உதவணும்? நாலும் தெரிஞ்சவ நீ இப்படி பிடிவாதம் பிடிக்கர்துதான் எனக்குப் புரியலடீ.
நீங்க இங்க இருக்கும்போதே வீட்டை வித்துட்டா எதிர் காலத்துல உன் பிள்ளைக்கும் அலைச்சலா இருக்காதுனு நினைக்கறாங்களோஎன்னவோ? என்றாள் பாகீரதி உரிமையுடன்.
“ மாமா ஆசையா வாங்கின வீடு.மாமா மாமி அந்த வீட்டை ரொம்ப நேசிச்சாங்க.
அவங்க சந்தோஷமா வாழ்ந்த வீட்ல வாழர்து மனசுக்கு இதமா இருக்கும்னு தோணுதுடீ.
என் பையனோட முதல் பிறந்த நாளன்னிக்கி தான் அந்த வீட்டை ரிஜிஸ்டர் பண்ணோம்.என்னை பொறுத்தவரைக்கும் அந்த வீடுஎன்னோட ரெண்டாவது குழந்தை. ரொம்ப ராசியான வீடு. என்றாள் ல்லிதா.
ல்லிதா அந்த வீட்டை எவ்வளவு நேசிக்கிறாள் என்பது புரிந்தது.அதற்கு மேல் எதுவும் பேசாமல் ல்லிதாவின் முகத்தில் ஓடும் கவலைரேகைகளை இரக்கத்துடன் பார்த்தாள் பாகீரதி.
பிறகு “சென்டிமென்டலா நினைச்சி கவல படாத ல்லிதா . நீ தப்பா நினைக்கலன்னா நான் ஒரு யோசனை சொல்லவா?” என்று தயக்கத்துடன் கேட்டுவிட்டு நிறுத்தினாள் பாகீரதி.
“தாரளமா சொல்லு” என்றாள் ல்லிதா
“ஊர்ல என் தங்கச்சி வீட்டுக்கார்ர் பேங்க்ல வேல பாக்கறார்.
அவருக்கோ ஊர் ஊரா மாத்தலாயிட்டேஇருக்கும்.
ஆரம்பத்துல அவளுக்கு ஜாலியா இருந்துது.போக போக தன் கணவருக்கும் மத்தவங்க மாதிரி ஒரே இடத்தில வேலயா இருந்தா…. நமக்குனு நாலு பேர் தெரிஞ்சவங்கஇருப்பாங்க.இப்படி நல்ல பழகினப்புறம் பிரிஞ்சி போற நாடோடி வாழ்க்கையா போச்சேனு ஒரே வருத்தமா இருந்துதாம்.ஆனா வேற வழி இல்லயே….அதனால
்சசீ ்சீ இந்தப் பழம் புளிக்கும்னு கதைல்லாம் வருமே அந்த மாதிரி .
ஒரு ஊர்லேந்து மாத்தலாகும்போது அந்த ஊர்ல அவளுக்கு நடந்த பிடிக்காத விஷயத்தை மட்டுமே அடிக்கடி நினைப்பாளாம்.அப்புறம் அந்த ஊர் பிடிக்காமயே போயிடுமாம். ஒரு வேளை உனக்கும் நீ வாங்கின வீட்டுல எதாவது உனக்கு பிடிக்காத விஷயம் நடந்திருந்தா அதையே நினைச்சிப்பாரு.”என்றாள் அக்கறையுடன் பாகீரதி.
அதறகுள்இ ருவரும் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது.கூட்டத்தை விலக்கிக் கொண்டு பஸ்ஸிலிருந்துஇறங்கினர்.
எதுவுமே பேசாமல் யோசனையாக நடந்த ல்லிதாவை பேச்சுக் கொடுத்து தொந்தரவு செய்யாமல் அமைதியாக பின் தொடர்ந்தாள் பாகீரதி.
முதலில் ல்லிதாவின் ப்லாக் வந்தது.யோசித்துக் கொண்டிருந்த ல்லிதா தன்ப்லாக் வாசலில் நின்றுவிட்டாள்.
பாகீரதி அவளுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.
“நீ சொல்றதும் நல்ல யோசனை தான் யோசித்து பாக்கறேன்.ஒரு நாள் கண்டிப்பா வீட்டுக்கு வரணும்” என்றாள்.ல்லிதா.
நிம்மதி பெருமூச்சு விட்ட பாகீரதி “கண்டிப்பா வரேன் ல்லிதா.அப்போ நான் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு தன் பிரண்டுக்கு ஒரு சின்ன யோசனை கொடுக்க முடிந்த நிம்மதியில் புன்னகையுடன் தன் வீட்டை நோக்கிநடந்தாள்.
ல்லிதாவுக்கு அன்றிரவு முழுக்க யோசனைதான்.
பெற்றோருக்கு ஒரே பையனான தன் கணவருடன் வாழ்க்கையை துவங்கிய போது குடியிருந்த 450 சதுர அடி வாடகை வீட்டைப்பற்றிநினைத்தாள்.
வாசல் கதவை திறந்தால் எதோ நம் வீட்டிலேயே இன்னொரு ரூமுக்கு போவது போல எதிர் வீடும்
இரண்டு பக்கத்து வீடுகளும் மிக அருகில் இருக்கும்.
வீட்டிற்குள் ஒரு படுக்கை அறை கொஞ்சம் பெரிய ஹால் சின்ன சமையலறை.
அதை அடுத்த சின்ன பால்கனி. கிச்சனுக்கும் பெட்ரூமுக்கும் நடுவே குளியலறையும் கழிப்பறையும் இணைந்து ஒரே ரூமாக இருக்கும்.
மாமனார் மாமியார் ஹாலில் இருந்தாலும் அவர்களுடைய பீரோ மற்றும் லலிதாவுக்காக மாமனார் வாங்கிய பீரோ ஆகிய இரண்டும் மற்றும் சில சூட்கேசுகளும் பெட்ரூமில் ஆக்கரமிப்பு செய்து கொண்டிருக்கும்.அதனால் கட்டில் போட இடமில்லாதல் மெத்தையை தரையில் விரித்து தான்படுக்கமுடியும்.
ஹாலில் சமைலறையை ஒட்டிய சுவரோரமாக பெரிய பூஜை அலமாரியை வைத்திருப்பார் மாமனார். மாமனார் மாமியார் இருவருமே அதிகாலையில் எழுந்து குளித்துவிடுவார்கள்.
பூஜை அலமாரியை திறந்து மாமியார் விளக்கேற்றியதும் பிள்ளையார் ,முருகர் ,திருப்பதி வெங்கடாசலபதி எல்லாருக்கும அந்தந்த நாளுக்கான ச்லோகங்களை ச்சொல்லி வாழைப்பழங்கள் வாங்கி வைத்து ஊதுவத்தி மணக்க தினமும் பூஜை செய்வார் மாமனார்.
மாமியார்ச மையலை ஆரம்பித்துவிடுவார்.
ல்லிதாவும் சீக்கிரமே குளித்துவிட்டு மாமியாருக்கு ஒத்தாசை செய்வாள்.
பூஜை முடிந்த ஒரு மணிநேரம் கழித்து விளக்கை மாமியார்கு ளிரவைத்துவிட்டு பூஜை அலமாரியை மூடிவைத்துவிடுவார்.
அலமாரிக்கு எதிரே ஜன்னல் பக்கமாக fridge இருக்கும்.பக்கத்தில் குடிதண்ணீர் குடங்கள்..
அதற்கு கொஞ்சம் தள்ளி டேபிள் சேருடன் இருக்கும்.பக்கத்தில் சிறிய புத்தக அலமாரியில் மேல் இரண்டு தட்டில் புத்தகங்களும் கீழே சீப்பு பவுடர் தேங்காய் எண்ணெய்.மாமனாரின் மூக்குக் கண்ணாடி.ஒரு தகர டப்பாவில் கண்ணாடி வளையல்கள் பொட்டுகள் ஹேர்பின்கள் எல்லாம் வைப்பட்டிருக்கும்.
எதிர் பக்கத்தில் அதாவது வாசல்கதவுக்கும் பெட்ரூம் சுவருக்கும் நடுவில் டீவி ஸ்டான்டில் டீவி,சுவற்றில் முகம் பார்க்கும் கண்ணாடி. பக்கத்தில் டெலிபோன். ஒரு பக்கம் யாராவது வந்தால்உபயோகப்படுத்த சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மடக்குநாற்காலிகள்.வாசல் கதவுக்கு பின்னால் செருப்பு ஸ்டான்ட்.
இவற்றுக்கு நடுவில் அந்த ஹாலில் மீதம் இருக்கும் இடத்தில் மாமியார் மாமனார் உறங்குவது
அனைவரும் தரையில் அமர்ந்து சாப்பிடுவது ,டீவி பார்ப்பது , எல்லாமே நடக்கும்.
காலை ஐந்து மணிக்கு முக்கால் மணிநேரம் மட்டுமே குழாயில் தண்ணீர் வரும்.பிறகு வராது.அப்போதே எழுந்து பெரிய டப்புகளில் மாமியாரும் மாமனாரும் தண்ணீர்பிடிப்பார்கள்.
ல்லிதாவும் வேலைக்குப் போவதற்கு வசதியாக பஸ் ஸ்டாப் ரெயில்வே ஸ்டேஷன் எல்லாமே அருகிலேயே இருந்தது.
சொந்த மாமா மகனைத் தான் திருமணம் செய்திருந்தாள் ல்லிதா.
கல்யாணத்திற்கு முன்பே ல்லிதாவிற்கு அப்பா இல்லை. அம்மாவும் ஒரு அண்ணனும் இருந்தார்கள். லலிதாவின் அம்மா தன் மகனுடன் கிராமத்தில் இருந்தாள்.
மாமாவும் மாமியும் ரொம்ப விருப்பப்பட்டு தன் ஒரே பிள்ளைக்கு ல்லிதாவை திருமணம் செய்ய எந்த சீதனமும் எதிர்பார்க்காமல் கல்யாண செலவுகூடஅவர்களே செய்தார்கள்.
இவர்களை கடைசிவரை கூடவே இருந்து காப்பாற்றவேண்டும் என்று மனதில் ல்லிதா உறுதிஎடுத்திருந்தாள்.ஆனால் அவளுக்கு அந்த விஷயத்தில் கூட அவர்கள் அனுசரனையாகத்தான் இருந்தனர்.
Plus two முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக வெளிநாடு கிளம்பிய பேரன் அங்கேயே வேலையும் வாங்கி விட்டான்.
அதனால்தாத்தாவே வரன் பார்த்து அவனுக்கும் திருமணமும் செய்துவைத்துவிட்டார். ல்லிதாவின் மகனும் மருமகளும் வெளிநாட்டிற்கே போய்விட்டார்கள்.
அத்துடன் எங்கள் கடமை முடிந்தது என்றுநினைத்துவிட்டது போல இருவருமே
ஆறுமாத்திற்குள் ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேர்ந்தஉவிட்டார்கள்.
மாமியார் மாமனார் நினைவு வந்ததும் பெருமூச்சு விட்டாள் ல்லிதா.
மீண்டும் அவள் மனம் அந்த 450 சதுர அடி வீட்டையே சுற்றி வந்தது.
லலிதாவின் வயிற்றில் மகேஷ்இருப்பது கரன்பர்ம் ஆனதிலிருந்து ஒவ்வொரு மாதமும் அதிசயங்கிள் நடக்க ஆரம்பித்தன்.
அலுவலகத்தில் பதவி உயர்வு ,பிரபல கம்பெனியிலிருந்து எதிர்பாராத அழைப்பு,
பெரய சம்பளம் பல நாடுகளுக்கும் பயணம் செய்ய வேண்டிய நிலை என்றுல்லிதாவின் கணவர் உயர்ந்து கொண்டே போனார்.
ல்லிதாவும் பளபளவென்று தோற்றம்அளிக்க ஆரம்பித்தாள்.
அக்கம்பக்கம் இருப்பவர்கள் ல்லிதாவின் வயிற்றில் இருப்பது மகாலஷ்மிதான் என்றார்கள்.
பெண் குழந்தை தான் பிறக்கும் என்றார்கள்.
ஆனால் மிக அழகிய ஆண் குழந்தையாக பிறந்த மகேஷைப் பார்த்து தாத்தாவும் பாட்டியும்
பெருமிதம் அடைந்தார்கள்.ல்லிதா வந்த நேரம் என்று அவளை தலையில் வைத்து கொண்டாடினார்கள்.
பேரனுக்கு தினமும் திருஷ்டி சுற்றஆரம்பித்தனர்.
அதுவரை வசதியாகத் தெரிந்த 450 சதுரடி வீடு மகேஷ் தவழ ஆரம்பித்ததும் யோசிக்கவைத்தது.
“வீடு வாங்கிடுப்பா “ என்றார் மாமனார்.
சொன்னதோடு மட்டும் இல்லாமல் விடாப்பிடியாக வீட்டு லோனில் 1500 சதுரஅடியில் இரண்டு அடுக்காக இருந்த அழகிய தனி வீட்டை வாங்க வைத்தார். சரியாக மகேஷின் முதல் பிறந்த நாளன்றுரெஜஸ்ட்ரேஷன் முடிந்து விட்டது.வாங்கிய பிறகும் ரெனோவேஷன் செய்தார்கள்.
கீழே கார் பார்க்கும் அத்ற்குபின்னால் ஆபிஸ் ஸ்பேஸ் மாடியில் இரண்டு படுக்கையறை பெரிய சமையலறை பூஜை அறைமற்றும் ஹால் இரண்டு பால்கனி இரண்டு குளியல் மற்றும் கழிப்பறைகள் என்று மிக அழகான அமைப்பான வீடு.
பக்கத்திலேயே பஸ் ஸ்டாப் ரயில்வே ஸ்டேஷன் எல்லாமே இருந்தது.அந்த வீட்டை பற்றி நினைத்தாலே எல்லா வித்த்திலும் மிகவும் பிடித்த விஷயமாகவே தோன்றியது ல்லிதாவிற்கு.
மாமனாரும் மாமியாரும் அந்த வீட்டை கோயில் போல மதித்தார்கள்.
அதிகாலையில் மாமனார் பக்கத்தில் துணையிருக்க தானே முறைவாசல் செய்து தெருவில் பெரிய கோலம் போடுவார் மாமியார்.
அந்த வீட்டில்தாள் ஒவ்வொரு வெள்ளிக்கிழைமையும் மகாலஷ்மிக்கு குத்துவிளக்கு பூஜை செய்ய ஆரம்பித்தார்மாமியார்.
பூஜை அறை தனியாக இருந்ததால் காலையில் ஏற்றிய விளக்கு இரவு வரையிலும் ஒளி வீசிக் கொண்டிருந்தது.
தினமும் மொட்டை மாடியில் காக்காவுக்கு சோறுவைப்பார் மாமனார்.வாட்டர் டேங்க் பக்கத்தில் துளசிச் செடி வைத்து தினமும் குளித்தபிறகு ல்லிதா நீரூற்றுவாள்.
மொடமொடவென்று காய்ந்த துணிகளை சாயந்திரம் மாமனார்தான் மாடியிலிருந்து எடுத்து வருவார். பேரனுடன் மொட்டைமாடியில் அவர்களால் கொஞ்சி விளையாட முடிந்தது.
ல்லிதாவின் கணவன் மாதக் கணக்கில் வெளிநாடுகளில் தங்குவதாலும் மாமனார் மாமியார் குழந்தையை அக்கறையுடன் வளர்ப்பதாலும் ல்லிதாவாலும் நிம்மதியாக வேலைக்குப் போக முடிந்தது.
கீழே ஆபிஸை வாடகைக்கு விட்டதால் அவர்கள் தரும் வாடகையை பக்தியுடன் பூஜை அறையில் வைத்துவிட்டுத் தான் பீரோவுக்குள் வைப்பார் மாமியார். நினைக்க நினைக்க எல்லாமே அவளுக்கு பிடித்த விஷயமாகவே இருந்தது.மனதின் ஏக்கம் அதிகரித்தது.
மேலும் யோசித்தாள் ல்லிதா.
மகன் மருமகள் குழந்தை மூவரும் படுக்க பெரிய கட்டில் மெத்தை,டர்ஸ்ஸிங் டேபிள்
வாசலை ஒட்டிய ஹாலில் டிவி முன் உட்கார சோபா
கிச்சன் பக்கமாக டைனிங் டேபிள் எல்லாமே கிரகப்ரவேசம் முடிந்ததுமே வாங்கிவிட்டார் மாமனார்.
அந்த வீட்டின் கிரகப்ரவேசம் கலயாணம் போல அல்லவா நடந்தது.
இப்போது கிரகப்ரவேசத்தைப் பற்றி நினைத்தாள் ல்லிதா.
கிரகப்ரவேசத்திற்கு எல்லோரும் வந்திருந்தார்கள்.
மகேஷ்அங்கே விஐபியாக இருந்தான்.
சாப்பாடு கேட்டரிங் நடந்து கொண்டிருந்தது.குழந்தைகள் மாடிக்கும் கீழுக்குமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். பெரியவர்கள்ஹாலில் போடபட்டிருந்த மடக்கு நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள்.
ஒரு படுக்கை அறையில் தட்டுகளில் பட்சணங்கள் பழங்கள் தேங்காய்கள் தால்பூலப்பைகள் சென்டு சென்டாக் பூக்கள் மீந்துபோன மாவிலைகள் எல்லாம் இருந்தன.
இன்னோர் அறையில் வந்தவர்களின் சூட்கேசுகள் துணிகள் எல்லாம் இருந்தன்.
ஹோம்ம் குண்டத்தின் முன் இருந்த மணைகளில் ல்லிதா கணவனும் அமரந்திருக்க எதிரே மகேஷை மடியில் வைத்துக்மாமனாரும் மாமியாரும் வந்திருந்தவர்களுடன் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவழியாக ஹோம்ம் நல்ல படியாக முடிந்தது.
மாமியாரும் மாமனாரும் மகேஷை ல்லிதா இடம் கொடுத்துவிட்டு
வந்தவர்களை விசாரித்து சாப்பிட வைக்கப் போய்விட்னர்.
வந்தவர்கள் அனைவரும் உறவினர்கள்தான் தன் சித்திகளே நாத்தனாராக அமைந்திருந்ததால் ல்லிதா சகஜமாக குழந்தைக்குசாதம் சிறிது பிசைந்து கொண்டு எங்கு ஊட்டுவது என்று புரியமல் மாடிப்படிக்கு வந்தாள். அங்கே யாரோ அழுவது போலக் குரல்கேட்டது.ஓசை கீழே இருந்து வந்தது.
பழகிய குரலாக அது இருந்ததால் எட்டிப் பார்த்தாள்.
படிக்கட்டுக்கு முடிவில் இருந்த சிறிய இடத்தில் சித்தி மகள் தாரிணி கண்களைதுடைத்துக் கொண்டிருந்தாள்.
படிக்கட்டுகள் மறைத்ததால் அவள் யாரிடம் பேசுகிறாள் என்று தெரியவில்லை.
ஆனால் பேசுவது நன்றாக கேட்டது.
“உன்னதான் மாமா எனக்கு ரொம்ப புடிக்கும்.உன்ன கல்யாணம் பண்ண முடியலயேன்ற வருத்தத்திலதான் நான் உன் கல்யாணத்துக்கே வரல மாமா” என்ற அழுது கொண்டே பேசினாள். ல்லிதா சீரியசாக கவனித்தாள்.
“ அழாத தாரிணி இந்த உலகத்துலயே உன்னைத் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். என் அப்பாகிட்ட சொல்லி உங்க வீட்ல பொண்ணு கேக்கத்தான் சொன்னேன. அப்போ எனக்கு சம்பளம் குறைச்சலா இருந்துது.
அதனால தான் உன் அப்பா வசதியில்லாத வீட்டுல என் பொண்ணை குடுக்க மாட்டேனு பிடிவாதமா சொல்லிட்டாரு. உறவுக்குள்ள ப்ரச்னை வச்சிக்க கூடாதுனுதான் என் அப்பா அம்மா இப்படி ஒரு முடிவெடுத்தாங்க. இப்போ எனக்கு இருக்கிற வசதி அப்பவே இருந்திருந்தா…
உன் அழகில் கால் தூசி பெறாத இந்த ல்லிதாவப்போய் கட்டியிருப்பேனா?. ” தன் கணவனின் கரகரத்த குரலைகேட்டு திடுக்கிட்டாள் ல்லிதா.
அப்பாவின் குரலைக் அடையாளம் கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில்
“அப்பா” என்று மகேஷ் அழைத்துவிட்டான்.ல்லிதா வந்ததை கவனிக்காத தாரிணி யாரோ எவரோ என்று பயந்து அவன் பிடிக்குள் இருந்த தன் கைகளை உதறிவிட்டு அங்கிருந்து வேகமாக ஓடிவிட்டாள். தன்மனைவி கவனித்துவிட்டதை அறியாத கணவன் அப்போதுதான் அவள் அங்கே வந்திருப்பதாக நினைத்து எதுவுமே அறியாதவன் போன்ற பாவனையில் மாடியேறிவந்துமகேஷை கைகளில் வாங்கினான்.
மீண்டும் “அப்பா…” என்று சொல்லிஅப்பாவின் சட்டை பையில் கைகளை நூழைத்தான் மகேஷ்.
மகேஷின் கன்னங்களில் முத்தம் கொடுத்துக் கொண்டே
“ எப்படி சொன்ன அப்பா.. இன்னொரு தடவ சொல்லு அப்பா… சொல்லு” என்று கொஞ்சினான்.
ல்லிதாவிற்கு மனம் வேதனையாக இருந்தது.
அவனைப் பொறுத்தவரை அவன் மனதில் தான்ஒரு அழையா விருந்தாளியோ என்று தோன்றியது?
துக்கம் தொண்டையை அடைத்தது.
குழந்தையையும் சாப்பாட்டுக் கிண்ணத்தையும் அவனிடமே கொடுத்துவிட்டு உள்ளே வந்தாள்.
சமைலறையில் ஓடி ஓடி உழைக்கும் மாமியாரை்ப் பார்த்தாள்.
மகன் மற்றும் மருமகளின் சம்பளப்பணத்தை வாங்கி பொறுப்புடன் ஒவ்வொருவரின் தேவைகளையும் அறிந்து பூர்த்தி செய்துவிட்டு தன்தேவைகளை குறைத்துக் கொண்டு குடும்பத்தை நிர்வாகம் செய்யும் நடத்தும் மாமனாரையும் நினைத்தாள்.
மனம் சற்று லேசானது.
மனதில் எதோ தோன்ற மீண்டும் மாடிப்படிக்கு வந்து எட்டிப் பார்த்தாள்.
கீழே கார் பார்க்கில் அவனையே பார்த்துக் கொண்டு ஓரமாக நின்றிருந்த தாரிணியை சிறிதும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய செல்ல மகனுக்கு ஓடிஓடிவிளையாட்டுக்காட்டி சோறூட்டும் கணவனைப் பார்த்தாள். அவனுக்குள்ளிருந்த பொறுப்பான தந்தையை அவள் கவனிக்கத் தவறவில்லை.
கணவனுக்கு மகேஷ் மேல் இருக்கும் பாசம் நிச்சயமாக அவன் மனதை மாற்றிவிடும் என்று தோன்றியது.
அந்த அசைக்க முடியாத நம்பிக்கையால் அந்த நிகழ்ச்சியை ப்பற்றி கணவனிடம் இன்றுவரை எதுவுமே கேட்காமல் இருந்தவள் காலப்போக்கில் மறந்தும் போயிருந்தாள் .
இப்போது மீண்டும் அதெல்லாம் நினைவிற்கு வந்ததும் ல்லிதாவிற்கு மனம் பாரமாகிவிட்டது..
தூக்கம் வராமல் புரண்டாள்.
காலையில் எழுந்ததுமே
“சரிங்க அந்த வீட்டை வித்துட்டு அமெரிக்காவே போயிடலாம்” என்றாள் கணவனிடம்.
“காலங்காத்தால நல்ல சேதி சொல்லியிருக்க.
மகனும் மருமகளும் இப்போதூங்கிட்ருப்பாங்க.
இன்னிக்கு இராத்திரியே போன்பண்ணி சொல்லிடறேன்.
ஆனா… அவ்வளவு பிடிவாதமா இருந்தியே எப்படி ஒரு இராத்திரில முடிவு பண்ணின.புத்தருக்கு போதி மரத்தடில ஞானம் பொறந்த மாதிரி உனக்கு எங்க ஞானம் பொறந்துது னு சொல்லவேயில்லயே” என்று கிண்டலடித்தான் கணவன்.
“எனக்கு எப்போ எந்த இடத்துல ஞானம் பொறந்துதுனு சரியா உங்களுக்கு புரியற மாதிரி சொல்லனும்னா
நம்ம வீட்டு கிரகப்ரவேசம் முடிஞ்சி சாப்பாட்டு பந்தி ஆரம்பிக்கர்துக்கு முன்னாடி…மாடிப்படிக்குக் கீழ தாரிணியோட அழுற சத்தத்தை கேட்டபுறம் தான் எனக்கு ஞானமே பொறந்தது ” என்று கணவனை நேருக்கு நேர் பார்த்து ல்லிதா சொன்னதும் .பளிரென்று கன்னத்தில் யாரோ அறைந்தது போல துடித்தான் கணவன்.
No comments:
Post a Comment