ல்லிதா பல வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்கு ரயிலில் பயணம் செய்கிறாள்.
இன்று அலுவலகத்தில் இருந்தபோது அப்பாவிற்கு உடம்பு சரியில்லை என்று போன் வந்ததும் ஏனோ அப்பாவைப் போய் பார்க்கவேண்டும் நினைத்துக் கிளம்பிவிட்டாள் ல்லிதா.
அம்மாவிடம்கூட சொல்லவில்லை அவள்.
அப்பாவைப் போலவே ஜாடையில் ல்லிதா இருந்தாள்.
சட்டென்று யாராலும் நெருங்கிவிட முடியாதபடி முகத்தில் ஒரு இறுக்கம். சிறிய கண்கள்.
அதை மறைக்கும்படியான வித்த்தில் பெரிய கன்னங்கள் கண்களை ஒட்டி சதைபிடித்திருக்கும்.
இதற்காக முகத்தை தினமும் மசாஜ் செய்து கொண்டே யிருப்பாள்.
சற்று நீளமான முகம்.அடர்த்தி குறைந்த தலைமுடி எண்ணெய் தடவினாலும் சற்று செம்பட்டை நிறமாக இருக்கும்.அழுந்த வாரினால்அடர்த்தி குறைவாக தெரியும் என்பதால் எப்பொழுதுமே சற்று தளர்ச்சியாக பின்னல் போட்டுக் கொள்வாள்.குரலும் சற்று உரக்கத்தான்வரும்.
இந்த தோற்றம் அவளுக்கு என்றுமே குறையாக தோன்றியதில்லை.
வாழ்க்கை அவளுக்கு விட்டு வைத்த வடுக்களை விட இவை குறைவுதான் என்று நினைத்துக் கோண்டாள்.
அலுவலகத்தில் அவள் சம்பாதித்திருக்கும் நல்ல பெயருக்கு முன்னால் இவைகள் ஒன்றுமே இல்லை.
தாயின் சிக்கன நடவடிக்கைகளுக்கு தோள் கொடுத்து கணக்கு வழக்குகுளில் தெளிவான முடிவுகளை கண்டிருந்த ல்லிதா.அந்தஅறிவை சற்று விஸ்தரித்து ஒருவருடத்திலேயே கம்பெனியின்
வரவுசெலவுகளில் சில மாற்றங்களுக்கு ஆலோசனை சொன்னாள்.
அவளுடைய ஆலோசனைகளையும் மேனேஜர் காதுகொடுத்து கேட்டார்.
அதன் விளைவு, அக்கவுன்ட் அசிஸ்டென்ட் ஆக சேர்ந்தவள் நான்கே வருடங்களில் பர்சனல் செகடரியாக பதவி உயர்வு பெற்றாள்.
இன்று கை நிறைய பணம் வந்தாலும் தன் குடியிருப்பை ்அம்மா மாற்றவிடவில்லை. சில சங்கடங்கள் இருந்தாலும் பக்கத்தில் காய்கறிமார்க்கட் ரயில்வே ஸ்டேஷன் கடைகள் ஆஸ்பிடல் எல்லாம் இருப்பதால் இரவும் பகலும் கலகலவென்று இருந்த அந்த இடம்பாதுகாப்பாகவும் அடுத்தவரிடம் உதவி கேட்டு நிற்காமல் அம்மாவால் சுலபமாக தனித்து இயங்கும்படியாகவும் இருந்தது.
எல்லோரிடமும் அளவாக பேசுவது அம்மாவின் வழக்கம்.தினமும் அதிகாலையில் மஞ்சள் பூசிக் குளித்துவிட்டு நெற்றி நிறையகுங்கும்மும் அடர்த்தியான நீண்ட கூந்தலை அழுத்தி வாரி பின்னல் போட்டிருக்கிறாள். ஒரு நரை கூடக் கிடையாது.அழகானகண்கள்.சந்தன நிறம்.வரைந்தது போன்ற உதடுகள்.அம்மா ரொம்ப அழகு.நினைத்ததும் பெருமையாக இருந்தது ல்லிதாவுக்கு.
ரயிலில் அமரந்ததுமே அவசரவசரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தன் வாழ்க்கையைப் பற்றி நிதானமாக யோசித்துப் பார்க்கிறாள்ல்லிதா.
அம்மா மற்றும் திருமணமாகி போய்விட்ட இரண்டு அக்காக்கள் இதுதான் அவள் குடும்பம்.
ஒரு பிரபலமான கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு அம்மாவும் அவளும் ஒருவருக்கொருவர் ஆதரவாய் வாழ்கின்றனர்.
வாழ்க்கை பரவாயில்லை ரகம் தான்.நானூத்தைம்பது சதுர அடியில் ஒரு பெட்ரும் கொண்ட வாடகை வீடு.
காலை 5 மணிக்கு குழாயில் தண்ணீர் வரும்.பெரிய பீப்பாயில் நிரப்பிக் கொள்ள வேண்டும்.
அரைமணி நேரம் தான் என்பதால் அதிகாலையிலேயே குளித்துவிட்டு பிறகு சூடாக காபி குடித்து விட்டு சமையல் வேலை தொடங்கிசிம்பிளாக ஒருமணி நேரத்தில் முடிந்து விடும்.
ஒன்பது மணி ஆபிசுக்கு நடந்து போனால் பதினைந்து நிமிட தூரம் தான்.
இத்றகு இவ்வளவு சீக்கிரம் போக வேண்டுமா என்ன என்று யோசித்துவிட்டு,
காலையிலேயே பகவத் கீதா வகுப்பிற்கு போக ஆரம்பித்துவிட்டாள் ல்லிதா.
பிறகு வீடுவந்து சாப்பிட்டுவிட்டு லஞ்ச் பாக்ஸுடன் கிளம்பினால் இரவு ஏழு மணிக்குள் வீடு வந்து சேருவாள். அம்மா ஆயிரத்தெட்டுகன்டிஷன்கள் போடுவாள்.ஆனால் ல்லிதா அதற்கெல்லாம் பழகிவிட்டாள்.பாவம் அம்மா.அவளே அப்பாவாகவும் குடும்பத்தைகாப்பாற்றுகிறாளே..
ரயிலில் வீடுகளும் மரங்களும் எதிர்பக்கம் வேகமாக ஓடும் அழகை ரசிக்க அவளுக்கு மனமில்லை.கட்டியிருந்த காட்டன் புடவை கூடபாரமாக இருந்தது அவளுக்கு.
இவள் மனதைப் போலவே அவள் பயணம் செய்யும் பெட்டியும் காலியாக இருந்தது.
பொதுவாக இரவில் ல்லிதா பயணம் செய்வதில்லை.அப்பாவைப் பற்றிய செய்தி தெரிந்ததும்
அம்மாவிடம் தோழிக்கு திருமணம் என்று பொய் சொல்லிவிட்டு இரவு ரயிலைப் பிடித்து வந்திருக்கிறாள்.
அவள் மனம் பலவாறு யோசித்தது.
பழைய ஞாபகங்கள் பெரும்பாலும் சந்தோஷமாகவே இருக்கின்றன. ஒரு வேளை வெறும் ஞாபகம் தானே என்று மனது பெரிதாகஅலட்டிக் கொள்வதில்லையோ என்னவோ?
ஒவ்வொருவரின் குழந்தைப் பருவமும் இப்போதுள்ள பருவமும் கிட்டத்தட்ட வேறு வேறு ஜன்மங்கள் போல தெரிகின்றன்.ரொம்பவும்கஷ்டப்பட்டு வளர்ந்து பெரியவர்களானாலும் அதை நினைத்துப் பார்க்கும் போது அவ்வளவு பாரமாக தெரிவதில்லை.
அப்பாவைப் பிரிந்து அம்மா பட்ட துயரங்கள்.அவர்களுக்குள் இருந்த சின்ன சின்ன ச்ச்சரவுகள்
குடும்பத்தையே பிரிக்கும் என்று கற்பனைகூட அவள் செய்ததில்லை.
வீட்டு வாடகை கரன்ட் பில் மளிகை பாக்கி போக அம்மாவிடம் சொற்ப தொகையைக் கொடுப்பார் அப்பா.
அந்தப் பணத்தை வாங்கிக் கண்களில் ஒத்திக் கொண்டு குடும்பத்தை க் கூடுமானவரை குழந்தைகளின் வயிறு நிரம்பாவிட்டாலும்மனநிறைவுடன் குறை தெரியாமல் வளர்த்து வந்தாள் அம்மா.
அந்த கிராமத்தில் அக்கம்பக்கம் எல்லொருமே சகஜமாக த்தான் இருப்பார்கள்.
ல்லிதாவின் அஅப்பா யாருடனும் பேச மாட்டார்.
தனியாகவே இருப்பார்.ஆனால் வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் அவர் உதடுகள் எதோ ஒரு சினிமா பாடலை முணுமுணுத்துக்கொண்டுஇருக்கும் சிலசமயங்களில் ரேடியோவில் வரும் சினிமா பாடல்களுக்கு
தானும் பாடிக் கொண்டே சின்னதாக தலையாட்டி விசிலடிப்பார். ஆஜானுபாகுவான தோற்றம்.
பத்தாம் வகுப்பிற்கு சேரப்போன நேரத்தில் தான் ல்லிதாவின் தலையில் விழுந்த மிகப்பெரிய இடி அது.
பெரிய அக்கா காலேஜ் முடித்து வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்தாள்.
இரண்டாவது அக்கா ப்லஸ்டூவில் நல்ல மார்க் வாங்கியிருந்தாள்.
அம்மா அப்பாவை விட்டு பிரியும் அளவிற்கு என்ன நடந்துவிட்டது என்பதுதான் இன்றுவரை புரியாத புதிராக இருந்தது ல்லிதாவிற்கு.
அக்காவிற்கு சென்னையில் பெரிய கம்பெனியில் வேலைகிடைத்துவிட்டது.
திடீரென்று அப்பா வீட்டை விட்டு வெளியேறினார்.அம்மா எதிர்க்கவில்லை.இருவரும் நன்கு புரிந்துகொண்ட பிரிவுதான்.
அப்பாவைப் பிரிந்து ஊரிலிருந்து மூன்று பெண்குழந்தைகளுடன் சென்னை வந்த அம்மா முதலில் சில வீடுகளில் சமையல் வேலைகள்செய்தாள்.அக்கா ல்லிதாவை பள்ளியில் சேர்த்துவிட்டு இரண்டாவது அக்காவை டீச்சர் டரெயினிங் படிக்க வைத்தாள்.
நான்கு வருடங்கள் கடும் சிரமத்துடன் சமாளித்த அம்மா
இரண்டாவது அக்காவிற்கு வேலை கிடைத்ததும்
முதல் அக்காவிற்கு தனியாகவே நல்ல வரன் பார்த்து திருமணம் செய்துவைத்தாள்.
பிறகு பெரிய அக்காவின் மாமனார் வங்கிக் கடன் வாங்கிக் கொடுத்ததால் சிறிய அறையை வாடகைக்கு பிடித்து அங்கு சமைத்துஅலுவலகங்களுக்கு மதிய உணவு சப்ளை செய்யும் பிஸினஸ் ஆரம்பித்து இரு பெண்களையும் வேலைக்கு அமரத்திக் கொண்டாள்அம்மா.
ல்லிதாவை படிப்பை பார்த்துக் கொண்டே தன் பிஸினஸின் வரவு செலவையும் கவனிக்கவைத்தாள்.
இன்றுவரை அம்மாவிற்கு நல்லபெயர் தான்.அப்பாவால் கிடைத்த சூடு அம்மாவிற்கு தனித்து வாழ கற்றுக் கொடுத்திருக்கிறது.
ல்லிதாவின் முதல் அக்காவின் கணவனின் ஒன்றுவிட்ட தம்பியே டீச்சர் வேலை பார்க்கும் இரண்டாவது அக்காவிற்கும் மாப்பிள்ளையாக அமைந்து அந்த த்திருமணமும் நல்லபடியாக முடிந்துவிட்டது.
இதையெல்லாம் நிதானமாக யோசித்துக் கொண்டிருந்த ல்லிதா அப்படியே உறங்கிவிட்டாள்.திடீரென்று கணவிழித்தபோது அவள்இறங்கவேண்டிய இடத்தை இரயில் நெருங்கிக் கொண்டிருந்தது.முகம் அலம்பிக் கொண்டு இறங்கத்தயாரானாள. இரயில் நின்றதும்இறங்கி டவுன் பஸ் பிடித்து ஊருக்குள் நுழைந்த போது காலை ஏழுமணி.
அது கிராம்ம்.ஆனால் நன்கு முன்னேறிய கிராம்ம்.சில்லென்ற காற்று வீசியது.பெரிய மாற்றங்கள் எதுவும் அங்கேஏற்பட்டிருக்கவில்லை.அநேகமாக பழகிய முகங்கள் அதனால் இவளை கண்டதும் ஒவ்வொருவரும் தனித்தனியாக விசாரிக்கஆரம்பித்தனர்.பதில் சொல்லிக் விட்டு நடந்து வீட்டை அடைந்தாள்.
அத்தை வரவேற்றாள்.
பாசத்துடன் ல்லிதாவைக் கட்டியணைத்து உச்சியில் முத்தம் கொடுத்தாள்.
அந்தகூடத்தில் ஓரமாக இருந்த கட்டிலில் அப்பா தன் கடைசி மூச்சுக்காக போராடிக் கொண்டிருந்தார்.
ல்லிதா அப்பாவைப் பற்றி எதுவும் விசாரிக்காமல் அவரையே பார்த்தாள்.
அத்தை அப்பாவின் காதருகில் போய்ச் சொன்னாள்.
“அண்ணே ல்லிதா வந்திருக்கா. “ என்றதும் அவர் கண்கள் படபடவென்று அடித்தது.ஆனால் அவரால் கண் திறந்துபார்க்கமுடியவில்லை.உதடுகள் ல….ல…. என்ற முனகின.
சில நொடிகளில் ஓயந்துவிட்டார்.முகத்தில் சிறு புன்னகை திருப்தியுடன் அவர் ஆத்மா பிரிந்துவிட்டது.ல்லிதாவின் மனம் பதைத்தது.
ல்லிதாவின் பெரியம்மா அதாவது அம்மாவின் கூடப்பிறந்த அக்கா அங்கே வந்திருந்ததை பார்த்தாள் ல்லிதா்.
அங்கே ஒரு சிறுவனை அழைத்துக் கொண்டு வந்தார்கள்.
பெரியம்மா ல்லிதாவிடம் வந்தாள்.அவள் கண்கள் கலங்கிஇருந்தன.
“பக்கத்து ஊர் திருவிழால நாலு மாச குழந்தையா கிடைச்ச பையன் இவன்.அந்த திருவிழாக்கு நானும் போனேன்.ரொம்ப பரிதாபமானநிலைலதான் உங்கப்பா இவன தூக்கிட்டு வந்தார். அவர்பேர்ல எந்த தப்பும் இல்ல. தனக்கு ஆண் வாரிசு வேணும்னு அவனை தத்துஎடுக்க ஆசைபட்டார்.உங்கம்மா ஏத்துக்கல.அதான் இந்தக் குழந்தையோட தனிக்குடித்தனம் வந்துட்டார். ஆனா உங்கம்மாஒருவார்த்தை கூடப் பேசல்ல உங்கள கூட்டிட்டு ஊரை விட்டே போயிட்டா.
அவனை கண்ணும் கருத்துமாக வளத்தார். உங்கம்மா போனபிறகு சம்பாதித்த பணத்தில நிலங்கள் வாங்கினார்.
இந்த சொத்துக்களை உங்க நாலு பேருக்கும் சமமா உங்கப்பா எழுதியிருக்கார். இப்போ உன்னோட அத்தைதான் இந்தப் பையனை வளக்கறா.
அன்னிக்கு நான் உங்கம்மாகிட்ட நடந்ததையெல்லாம் எடுத்து சொல்லப் போனேன்.ஆனா உங்கம்மா எங்கிட்டயே ஒரு வார்த்தைகூடப்பேசல.
அவ பேர்லயும் தப்பு சொல்ல முடியாது.எங்களோட அப்பா நாங்க ரெண்டு பேரும் பெண்ணாகப் பிறந்துட்டோம்னு எங்கம்மாவைகொடுமை படுத்தினார்.அது உங்கம்மா மனச ரொம்ப பாதிச்சிடுத்து.
இவளுங்க சம்பாதிச்சிதான் குடும்பம் விடியனுமாக்கும்னு எங்கள எங்கப்பா படிக்க வைக்கல.ஆனா உங்கப்பா அப்படியில்ல.அவர்நல்லவர்தான்.உங்க ரெண்டுபேரையும் படிக்க வெச்சார்.கடைசிவரை தனியாதான் வாழ்ந்தார்.“
கண்கலங்கினாள் பெரியம்மா.
ல்லிதாவிற்கு அம்மா அ்அப்பா பிரிவிற்கான் காரணம் தெரிந்ததும் பெருமூச்சு விட்டாள்.
சென்னைக்குக் கிளம்பலாம் என்று அவள் நினைத்தபோது,
“மூச்சு நின்னுடுத்து.இனி ஆகவேண்டியத பாக்கலாம்.பத்து நாளா அந்த பொண்ணுக்காகத் தான் காத்துக்கிட்டு கிடந்திருக்கு உசிரு”
ஊரார் சொன்னதும் காரயத்திற்கு தடையாக நிற்காமல் எல்லாம் முடித்துவிட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தாள் ல்லிதா.
“ எங்கடீ ஊர் சுத்தப்போன.
உன் பெரிய அ்அக்கா இன்னும் கொஞ்சம் நேரத்துல வருவா.அவ கிட்ட பதில் சொல்லு.
பணம் சம்பாதிச்சிட்டா ஆச்சா? காசு இன்னிக்கு வரும் நாளைக்குப் போகும்.
நல்ல நடத்தைதான்டி வேணும்.” அம்மா அர்ச்சணை செய்தது கண்டிப்பாக நாலு வீட்டிற்கு கேட்டிருக்கும்.
ல்லிதா துளியும் கவலப்படவில்லை.அவள் முகத்தில் புன்னகை மாறவில்லை.
அம்மாவிற்கு கோபம் அதிகமானதுவழக்கம்போல கத்திக் கொண்டேயிருந்தாள்.
அம்மா மஞ்சள் பூசி குளித்தி ருந்தாள். அந்த அழகான முகத்தை பார்த்தாள் ல்லிதா.
“சொல்லிவிடலாமா என்று நினைத்தாள்.
இந்த அழகான அம்மாவிற்கு அப்பாவிடம் எந்த ஒட்டுதலும் எதிர்பார்ப்பும் இல்லை.
தன்னம்பிக்கையுடன் வாழ அம்மா கற்றுக் கொண்டுவிட்டாள். பத்து மாதம் சுமந்து பெற்ற பெண்குழந்தைகளை வாரிசாக நினைக்காமல்ஒதுக்கிவிட்ட அவரைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் யாரிடமும் ஒரு வார்த்தை கூட தவறாகப் பேசாதவள் அம்மா.
தன் நேர்மையான உழைப்பினால் தலைநிமிர்ந்து வாழ்கிறாள்.
இனி அப்பாவைப் பற்றி யாரிடமும் அம்மா விசாரிக்கவே போவதில்லை.
இழந்து விட்ட வாழ்க்கையையும் கிராமத்து சொத்துகளையும் பற்றி கூட அம்மா சட்டை செய்யவில்லை.
இப்போது அவரைப்பற்றிய உண்மைகளை சொல்வதால் இந்தபொலிவான களையான முகத்தையும் அம்மா இழந்து விடுவாள். பெண்குழந்தைகளான எங்களை தன்னம்பிக்கையுடன் வளர்க்க அம்மா இதுவரை இழந்தவைகளே போதும் என்று முடிவெடுத்தாள் ல்லிதா.
தன்னை திட்டும் அம்மாவை இறுக கட்டியணைத்துக் கொண்டு அம்மாவின் பட்டுக் கன்னங்களில் மாறி மாறி முத்தம் கொடுத்தாள்ல்லிதா.
No comments:
Post a Comment