Monday, August 29, 2022

அழகுக்காக…சரோஜா ராம்மூர்ததி


பெண் பார்க்கும் படலம் நடந்தது.

ருக்கு  சற்றுக் குட்டையாகவும் தடித்த உடம்புடன் மாநிறமாக இருந்தாள்.

கோயில் துரண்களில் சில சமயம் குள்ளமான பெண் உருவங்களேப் பார்க்க நேரிட்டால் சட்டென்று ருக்குவின் நினைவு வரும்:


இதற்கு நேர்மான தோற்றம் உடையவன் சங்கர் நல்ல உயரம்சுருள் கிராப்புகூரிய து நீர்க்கமான கண்கள்

அங்கே எதுவுமே பேசாமல் பிறகு சொல்கிறோம் என்று சொல்லிவிட்டு சங்கரின் குடும்பம் திரும்பிவந்துவிட்டது.இரண்டு நாளாகியும்சங்கர் மௌனமாகவே இருந்தான்.


ஏண்டாஉனக்குப் பெண் பிடிச்சிருக்கா அவர்கள் கேட்டால் என்ன சொல்றது: ' என்று கேட்டார்கள் சங்கரனின் பெற்றோர்.


"பிடித்திருக்குபண்ணிக்கிறேன்.' என்று வேறு வழியில்லாமல் அவன் சொன்னான்.அவனுடைய  வறட்டுப் புன்னகை , நல்ல அழகானபிள்ளைக்கு இப்படி ஒரு பெண்ணை தேர்நதெடுத்தோமே  என்னு அவனுடைய அம்மாவின் மனம் குடைந்தது.



ஹிஹி அண்ணாவுக்கு பிடிச்சா,எனக்கும் கல்யாணம் ஆயிடும் எனக்கும் ஆம்படையான் வரப்போறான்

என்று அவனுடைய தங்கை அபிதா கைதட்டி குதித்து சிரித்தாள்.


"உள்ளே போடிவாய மூடிண்டு. . . . கர்மம். . . கர்மம்... என்று தலையில் இரண்டு போட்டுக் கொண்டார்

அபிதாவின் அப்பா பெற்றவர்.

'எனக்கு ஆம்படையான் வர்றது பிடிக் கல்லே அப்பாவுக்குஎன்று அழ ஆரம்பித் தாள் அபீதாஅழுகை யென்றால் சாதாரண மானஅழுகையா என்னமணிக்கனக்கில் தொடர்ந்து நாட்கணக்கில் அழுதுகொண்டேயிருப்பாள்.


எங்கே அந்த அழுகையை ஆரம்பித்து விடுவாளோ என்று பயந்து சங்கர் அவளைச், 'அபீ இங்கே வாம்மா !' என்றான்.


அவள் பக்கத்தில் வந்து நின்றதும் அவள் தலையை ஆதரவ்ாக வருடிக் கொண்டே

'எனக்கு அவா பொண்ணேப் பிடிச்சிருக்குஉனக்கு அவா பிள்ளையைப் பிடிச்சிருக்கோ ?' என்று கேட்டான்.

'பிடிச்சிருக்கே அண்ணுஅவருக்குக்

கால் இல்லேன்னு என்னஎனக்கும்தான்் சமர்த்து இல்லே - நான் ஒரு அசடு.அப்போ இரண்டுக்கும் சரியாப்ப் போச்சு ல்லே?" என்றவாறு

அவள் வெட்கம்போல் உடம்பை வளைத்துக்கொண்டு உள்ளே ஒடி விட்டாள்.

அசடோ எதுவோ ? அவள் அவன் தங்கை அவள்தங்கையின் சந்தோஷத்துக்காக அவன் உள்ளம் ருக்குவை அழகி யாகவே ஏற்றுக்கொண்டது.


ஒர் அசடைப் பெற்றுவிட்டு அதற்கு திருமணம் வேறு செய்ய வேண்டுமே என்று மனம் நொந்தாள் அம்மா.

இந்த அபீதா என்கிற அசட்டின் கழுத்தில்

மூன்று முடிச்சுக்கள் போடப் போகிறவன் தான்் சங்கரின் வரப் போகிற மனேவியின் அண்ணன்.. அவன் அசடு அல்லகால்களேஇழந்தவன்


அபீதாவை அவன் கல்யாணம் செய்து  கொண் டால்சங்கர் அவன் தங்கை ருக்குவை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறநிபந்தனை இருந்தது.



உற்ருரும்உறவினரும் சங்கரை ஒரு தியாகியாகவே மதித்தனர். "தங்கைக்காக இந்தக் காலத்தில் - இந்தச் சினிமா யுகத்தில்எவன்இப்படித் தியாகம் எவன் செய்வான்  என்றெல் வாம் பேசினர்.


பன்னிரண்டு வருடங்கள் ஓடிவிட்டன., அவ னுடைய மூத்த மகள் தாவணி அணிய ஆரம் பித்துவிட்டாள்.

ருக்குவுக்கு முப்பத்தைந்து வயதாகிறது.ஐந்து குழந்தைகள் இருந்தன.

சில மாதங்களாகக் தன் கணவனிடம் ஏற்பட்டு வரும் மாறுதல்களை ருக்மிணி கவனித்து வந்தாள்.

இந்த மாறுதல்கள் ருக்குவை வியப்பில் ஆழ்த்தின.


ஏற்கனவே வசீகரமான தோற்றம் கொண்ட சங்கர்.நிறைய அழகு சாதன பொருட்கள் வாங்கிவந்து பயன்படுத்த ஆரம்பித்தான்.


கஸ்துரி மஞ்சளும்பயத்தம் மாவும் பூசிக் கொண்டு ஆரோக்கியமாகத் திகழ்ந்து வந்த குடும்பத்தில் இப்படி நோட்டு நோட்டாகப் பவுடர்ஸ்னோவுக்குப் பணம் போகிறதென்றால் ருக்குவால் பேசா மல் இருக்க முடியவில்லை..


மறு நாள் காலை நக்கென்று ஆவி மணக்கும் காப்பியைக் கொண்டு வந்து சங்கரின் மேஜையின் மீது வைத்து

விட்டு நகர்ந்து நின்ருள் ருக்மிணிகாப்பி முன்னைப்போல் பொன்நிறத்தில் துரைததும்ப இல்லைகொஞ்சம் தண்ணிக் காப்பிதான்்.

"'என்ன இதுகாப்பியா ?' "ஆமாம்....இப்படிச் செலவு பண்ணில்ை தண்டத்துக்குவயிற்றுப்பாட்டைக் குறைச் சுத்தான்் ஆகணும்.'"

"'என்ன ஆமாம்முன்னேயெல்லாம்திக்காக இருக்குமே நம் வீட்டுக் காப்பி ரொம்ப ஸ்பெஷல்னு என் சிநேகிதாள்ளாம் சொல்லுவா." என்றான் சங்கர்.

'சொல்லுவா... சொல்லுவா... இப்போ பர்ஸ்ட் க்வாலிடி  காப்பிக் கொட்டை 

டியும் ,மிளகுஏலம்முந்திரி எல்லாமே  வெளிநாட்டுக்கு போயிடர்து.’


சங்கர் அவளே சுவாரசியமாகத் திரும்பிப் பார்த்தான்்மூத்த மகள் தம்புராவில்  சுருதி

சேர்த்துக் கொண்டிருந்தாள்மற்ற குழந்தைகள்  படித்துக் கொண்டிருந்தன


பூஜையறையி லிருந்து ஊதுவத்தி மணத்ததுபிச்சிப்பூச்சரம் ராம பிரானின் படத்தில் தவழ்ந்து கொண்டிருந்ததுஅதிலிருந்து ஒருகிள்ளு எடுத்துக் கோடரி முடிச்சின் கீழ் ருக்கு மடித்து வைத்திருந்தாள்


சங்கர் சிரித்தபடி மனேவியைப் பார்த்து, "இங்கே வாயேன்  தலைமுடியை உயரத் துர்க்கிக் கொண்டை போட்டுக்கணும்மல்லிகைச்சரத்தை இப்படி ஒரு சுற்று சுத்தி வளைத்துச் வைக்கனும்கொஞ்சம் லேசா 'வாக்டோ காலமின்பூசிண்டுபவுடர் போட்டுமை தீட்டிபொட்டும் இட்டுண்டா இன்னும் எப்படி அழகா இருப்பே தெரியுமா ?"



அவள் விக்கித்து நின்ருள்ஒரு தாம்பத்திய வாழ்க்கையில் பன்னிரண்டு வருஷங்கள் - ஒரு மகாமகக் காலம் - குறைந்ததல்லமகப்பேதுபற்றாக்குறைசந்தோஷம் என்று எத் தன்யோ தினசரித் தொல்லைகளைச் சமாளித்து வாழ்ந்துவிட்ட பன்னிரென்டு வருடம்.

அந்தப் பன்னிரண்டு வருடங்களில்ஒருநாள் கூட  "நீ இப்படி அழகு பண்ணிக்கோ - இப்படி சிரிஎனக்குப் பிடிச்ச மாதிரி புடவைவாங்கிக்கோ என்று சொன்னதில்லைஏன்இருவரும் அதிகமாகப் புற அழகைப் பற்றிச் யோசித்ததே கிடையாது.

"'என்ன பேசமாட்டேன்கிறுே ?" என்று சீண்டினான் சங்கர்.


"அப்போ நான் அழகாயில்லேயா ? என்று கேட்ட ருக்கு 

சட்டென்று உள்ளே இருக்கும் மூத்த பெண் தங்கள் பேச்சை  கவனித்துவிடஉவாளோ என்று பயந்தாள்


"யார் அப்படிச் சொன்னது ? நீ  இன்னும் அழகா இருப்பேன்னேன் “- ருக்குவுக்கு மேலும் அந்தப் பேச்சை வளர்க்க விருப்ப மில்லை

பிறகு அவள் கணவனே உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தாள்:



அடிக்கடி கண்ணாடி முன் நின்று தன் தலையை வாருவதுபவுடர்சென்ட்என்று அள்ளிப் பூசிக் கொள்வதுஇதெல்லாம்   ளு க் குஆச்சர்யமாக இருந்தது.


சில நாட்களுக்குப் பிறகு பள்ளியில் சுற்றுலா போயிருந்த மூத்த மகள் திரும்பி வந்ததும் ருக்குவிடம் சொன்னாள்.


 "அப்பா ஸ்கூட்டரின் பின்னுடி ஒரு மாமி ஒக்கான்டு இருந்தா அந்த வண்டில அப்பா  பீச்சுப் பக்கம் போயிண்டிருந்தார்.

ருக்குவுக்கு நெஞ்சு வலித்தது.மூச்ச அடைப்பது போல் இருந்தது.

 'இன்னும் அழகா இருப்பே-‘அனு சொன்னாரே

அப்படியென்றால் நான் அழகாக இல்லைருக்கு வேதனையில் மூழ்கினாள்.

"சரி சரி . பாட்டு வாத்தியார் வந்துடுவார்நீ போய் டி.பன் காப்பிசாப்பிடு போஎன்று ஒரு வாறு சமாளித்து மகளை அனுப்பிவிட்டுநிலைக் கண்ணுடியின் முன்பு போய் நின்று தன்னை பார்ததாள்.


நெற்றியெங்கும் தவழும் சுருள் கற்றை களோவிற்களைப் போல் வளைந்த புருவங் களோபார்ப்பவர்களைச் சுண்டி இழுக்கும்பார்வையோ ஏதுமின்றி அடக்கமாக இருந்தாள்.


ஒரு குடும்பப் பெண்ணுக்குஏன் ஒரு கடமை தவருத மனைவிக்குபொறுப்பான தாய்க்கு இதைவிட அழகு எதற்கு என்று ஒருகேள்வியைத் தன்னை தானே  கேட்டுக் கொண்டாள் ருக்கு.


உள்ளேயிருந்து டிபனை முடித்துக் கொண்டு வந்த மகள், 'அம்மா அந்த மாமி ரொம்ப அழகா இருந்தா அம்மா மூஞ்சி பளபளன்னுமின்னித்துஅழகா கொண்டை போட்டுன்டு இருந்தா.ரொம்பச் சின்ன மாமிதான்்நீதான்் நைலான் கட்டிக்கிறதே யில்லேஅவள்கட்டிண்டிருந்தாள்ரொம்ப நன்னுயிருந்ததுஎன்று வர்ணிக்க ஆரம்பித்தாள்.


சரிதான் போய் பாட்டு  ப்ராடிஸ்  பண்ணு போ ' என்று எரிந்து விழுந்தபடி யோசனையில் ஆழ்ந்தாள் அவள்.

தான்் அழகாக இருக்க வேண்டும் என்று அவள் ஆசைப்பட வில்லைகணவன் ஆசைப்படுகிறான்அவனுக்காக அவள் மாற வேண்டும்.


சட்டென்று அவள் ஒரு முடிவுக்கு வந்தவளாகஉள்ளே திரும்பி மூத்தமகளிடம்

நான் கடைத் தெருவுக்குப் போயிட்டு வரேன்அப்பா வந்தால் டி.பன் காப்பி கொடு....' என்று கூறிப் பையில் நோட்டுக்கற்றையைத்திணித்தபடி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

அன்றுதான்் அவள் கடைகளே மிகக் கவனமாக ஆராய்ந்தாள்பெண்களிடம் இயற்கையாகவே இருக்கும் அழகை மேலும் எடுத்துக்காட்ட பிறரை  திரும்பிப் பார்த்துச் ரசிக்க வைக்க பல பொருட்கள் அங்கே இருந்தன.


அவள் நுழைந்த கடை வாசலில் வைக்கப் பட்டிருந்த பொம்ழைகள் கூட பெண்கள்தாம் ! ஒர் ஆண் பொம்மிையை நிறுத்திச் சூட்டும்,

கோட்டும் போட்டு வைத்தால் என்னவாம் ? ஆண்களிடம் அழகு இல்லையா ? சில விநாடிகள் சங்கரின்

உருவம் அவள் மனக் கண் முன்பு தோன்

றியதுஎப்படிப்பட்ட அழகன் அவன்.தன் கணவனை நினைத்து பெருமை பட்டாள் அவள்.


கடைத்தெருவில் உள்நாட்டு வெளிநாட்டு அழகுச் சாதனங்களிலிருந்து நைலக்ஸ் புடவைவரை வரை வாங்கிப் பையில் நிரப்பிக்கொண்டு வீட்டுக்கு வந்தாள் அவள்


சங்கர் அலுவலகத்திலிருந்து இன்னும் வரவில்லை.

 குழந்தைகள் தூங்கிவிட்டார்கள்ருக்கு நிதான்மாகத் தன்னை அலங்காரம் பண்ணிக் கொள்ள ஆரம்பித்தாள்.

தலையை வாரி தூக்கிக் கொண்டை போட்டுமல்லிகைச் சரத்தைச் சுற்றிபவுடர் பூசிசெஞ்சாந்துத் திலகமிட்டுநெற்றியில்இரண்டொரு முடிக்கற்றையை சுருட்டி வைத்துநைலக்ஸ் புடவை கட்டி  முடித்த சமயத்தில்  வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது.


அவன் வாசல் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான்.

மனைவியை ஏறிட்டுக் கூட ப் பார்க்கவில்லை.அவன் தலை சற்றுகுனிந்திருந்தது.


ருக்குவும் அவன் சாப்பிடும் தட்டில் உணவு வகை களைப் போட்டு எடுத்து வந்து படுக்கை யுறை மேஜையின் மீது வைத்தாள்லேட்டாக  வரும் இரவு களில்  அனைத்து விளக்குகளையும் எரிய வைத்துகுழந்தைகளை எழுப்பிவிடாமல் சாப்பிட அப்படியொரு வழக்கம் உண்டு

அவனுக்கு நல்ல பசிதலை நிமிராமல்பேசாமல் சாப்பிட்டான்பரிமாறும் போது அவள் கைகளில் இருந்த  புதிய போலிவளையல்களை அவன் கவனிக்கவில்லை.


அந்த வீட்டில் பாக்குவெற்றிலேசுண்ணும்பு வெவ்வேருக வைக்கப்பட்டிருக் கும்ப்ரீயாக இருந்தால் ருக்கு மடித்துத் தருவாள்அவள்வேலையாக இருந்தால் இஙனே எடுத்துக் கொள்வான்.


வழக்கத்திறகு மாறாக இன்று சாப்பிட்டு முடித்தவுடன்  வித்தியாசமாக பீடா உருவத்தில் வெற்றிலையை சுருளாக மடித்து அவனிடம்தந்தாள் ருக்கு


அவன் புருவத்தை சுருக்கி நிமிர்ந்து பார்த்தான்்ருக்குவும் பார்த்தாள்முகமெங்கும் வியர் வைத் துளிகள்அரும்பியிருந்தன.அப்போதுதான் அவள் மேக் அப்பா பார்த்தவன்


'ருக்கு என்ன இதெல்லாம்?' என்றபடி கோபத்துடன் பார்த்தான்்:

எதெல்லாம் ?'என்றாள் ருக்கு

 "எதுக்கு  இந்தக் கண்றாவி யெல்லாம் -"என்ன விளேயாட்டு  இது

என் னமோ வேஷம் போட்டுண்டு.... சகிக்கலேது.....' என்றான்.

என்ன துர ?' 

இப்படி இருந்தாத்தான்ே உங்களுக்குப் பிடிக்கும்இந்தக் க்ண்ருவியிலேதான்ே அழகு ஒளிஞ்சிண்டு இருக்கு….உதட்டுச் சாயத்துக்குள்ளேயிருந்து சிரிச்சால்தான்ே சிரிப்பு

மை தீட்டிய (அப்பிய? | கண்ணுலே பார்த் தாத்தான்ே உங்க மனசுக்குப் பிடிக்கும்?அப்போதான் ஸ்கூட்டர்ல பீச்சுக்கு கூட்டின்டுபோவேள்” என்றாள்.


'நான் அவள் கூட சுத்தினது தப்பு தான் ருக்கு....' என்று உளறிவிட்டான் விட்டான்.


"யார் கூட ?' என்று அதிசயப்படுபவள் போலக் கேட்டாள் ருக்கு.

'அது …அது  வந்துஎவளோ ஒண்ணு...... அவளுக்கு க்கெட்டஎண்ணமில்ல . எனக்கும் கெட்ட வழியிலே போகணும்னு ஆசையில்லே.“


ருக்கு அழ ஆரம்பித்தாள்..


'அழறயா என்னஎதுக்கு அழற

உன்ன விட எனக்கு யாரும் ஒசத்தி கிடயாது அழாத.

நான் என் வெளித்தோற்றத்துக்காக அதிகப்படியான அக்கறை எடுத்தது ஒரு புத்திகெட்டதனம்தான்.

சாரிம்மா.

நான் ரொம்ப அதிகமா உன் மனச வேதனைபடுத்திட்டேன்னு நினைக்கிறேன் 

அதனால தான் எனக்கு என்ன பிடிக்கும்னு யோசிச்சுஎன்ன சந்தோஷப்பட வைக்க இவ்வளவு கஷ்டபட்டிருக்க நீ.

அந்தப் பொண்ணும் கெட்டவள் இல்லேவெகுளி.ஒரு நல்ல சிநேகிதியா இருந்தா.” என்றான்.


இருந்தாளாஇப்போ இல்லியா?” என்றாள் ருக்கு.


அத ஏன் கேக்கறநல்ல புத்திசாலியான பொண்ணு.புதுசா வந்த அவ கூட நான் பழக ஆரம்பிச்சதும் நிறைய ப்யூட்டி டிப்ஸ் ஹெல்த்டிப்ஸ்லாம் குடுத்தா.நானும் அவ சொன்னாளேனு எல்லாம் வாங்கி உபயோகிச்சு பாத்தேன்.அவ்வளவுதான்.

மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல போல்டா பேசுவா.வெளில போகலாமானு கூட கேப்பா.கொஞ்சம் மாடர்ன் டைப்.


அதுக்குள்ள ஆபிசுல எல்லாரும் எங்கள பத்தி கிசுகிசுனு பேச ஆரம்பிச்சிட்டா.


அதப்பத்தி அவகிட்ட சொன்னேன்.


சார்உங்களை என்  சொந்த  அண்ணாவாகவே மனசுலே நெனச்சுண்டுன்னு தான் பழகறேன்னா அவ

அண்ணுமாதிரி மனசுலே நினைச்சாலும்… வெளியிலே ஊர் சுத்தினா… பாக்கறவா  நாலு விதமாப் பேசறாளேம்மா.” ன்னு சொன்னேன்.


உடனே

வாட் ஸில்லிஇந்த நாட்டிலே ஒர் ஆணும்பெண்ணும்  நல்ல நண்பர்களாக இருக்கவே முடியல  பார்த் தீங்களா ?சார்?

அதுக்கு இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகள் போகனும்சாரி சார் என்ன மன்னிச்சுடுங்கோ ன்னு ட்டு    எங்கூட  பேசின்டுஇருந்தவ  கோச்சின்டு வேகமாக கிளம்பிப் போய்ட்டா.

என்னத்த சொல்றது போ.


ஆமாம் , அதுக்குள்ளே இப்படி ஒரு விஷயத்த உனக்கு யார் சொன்னா என்று மனேவியை ஆச்சர்யமாக்க் கேட்டான் சங்கர்.

"'உங்க பெண்தான்் என்று ருக்கு சொன்னதும் சங்கர் ஹாலில் படுத்துறங் கும் தன்னுடைய அழகிய குடும்பத்தை ஒரு பார்வைபார்த்தான்்.