என்னுடைய கிராம்ம் ரொம்ப அழகானது. அதிகாலையில் கதை எழுதுவது என் வழக்கம்.இரவு வெகுநேரம் முழித்திருப்பதைவிட அதிகாலை நான்கு மணியின் குளிர்சசி, மற்றும் அந்த அமைதியான சூழலில் எனக்காக சீக்கிரமே எழுந்து என் மனைவி தயாரிக்கும் சூடான பில்டர் காபியை ருசித்து ரசித்து…குடித்துவிட்டு கதை எழுத ஆரம்பிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதற்காகவே முதல் நாள் இரவே ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி அந்த தண்ணீரில் ஒரு டம்ளரில காய்ச்சிய பாலை ஊற்றி மூடி போட்டு வைத்துவிடுவாள் என் மனைவி.எறும்பு பாலில் விழுந்து விடாமல் இருக்க இந்த முன்னேற்பாடு.
இப்போதெல்லாம் சூரியன் சீக்கிரமே வந்துவிடுகிறான்.ஒரே அனலாக சுட்டெறிக்க ஆரம்பித்துவிடுகிறான்.
அன்று அப்படித்தான் வெயில் கொளுத்திக்கொண்டிருந்த நடுப்பகல் நேரம்.
பக்கத்து தெருவில் இருந்த ஆற்றிலிருந்து சாப்பிட
ஜலம் கொண்டுவர இடுப் பிலும் கையிலும் குடங்களுடன் என் மனைவி புஷ்பலதா போய்விட்டு வியர்க்க விறு விறுக்கவீட்டிற்குள் வந்தாள்.
“உச்சி வெயில்ல ஜலம் கொண்டுவர யாராவது போவாளோ? என்றேன்.
"நம்ம கிணத்துல ஜலம் கீழ போய்டுத்து கலங்கலா இருக்கு என்ன பண்றது? கார்ததால எடுத்துன்டு வந்த நல்ல ஜலம் கொஞ்சம் தான் இருக்கு”என்றாள் மூச்சு வாங்க குடங்களை பாறக்கல் மோடையில் வைத்துக் கொண்டே.
“நம்ம ரெண்டு பேருக்கு அவ்ளோ ஜலம் போறுமே. சாயங்காலம் வெய்யில் தாழ போயிருக்கலாம்.ஏன் இப்படி உடம்ப அலட்டிக்கறயோ.என்று குறைபட்டேன்.
நன்னா சொன்னேள் போங்கோ. பக்கத்துல இருக்க கவர்மென்ட் பள்ளிக்கூடத்து பசங்களுக்கு இன்னும் சித்த நேரத்துல லஞ்ச் டயம்வி டுவா
அந்த குழந்தைகள் தாகம்நாக்கை வரட்ட ஏக்கமா வந்து நம்மாத்து வாசல்ல வந்து ஜலத்துக்காக நிக்குங்கள் .
ஜலம் இல்லை போங்கோ னு சொல்ல எனக்கு கஷ்டமா இருக்கும்.அதுக்குதான் ஓடினேன் இந்த வெயில்ல.
இப்போலாம் மழையே காணோமே.ஒரே வறட்சி எவ்வளவு மழை பேஞ்சாலும் போறாது. பூமாதேவி பச்சைப் பசேல் னு இருப்பதைப்
ப்ார்த்து எவ்வளவோ காலமாச்சு.
என் சின்ன வயசுல லாம் எங்கே ப்ார்த் தாலும் பச்சைப் பசேல் என்று இருக்கும்.
வாய்க் காலில ஜலம் ஒடும்.
ஆனா. இப்போ ஒரே வறட்சி. அதனுல் தான்் பிழைப்பை தேடி ஜனங்களும் கிரா மங்களே விட்டுட்டு நகரங்களுக்குப்போய்டறா. மழை இல்லா மல் அவர்கள் வயல்களில் என்ன வேலே செய்ய முடியும் ?" வேல இல்லாம எப்படி அவா பொழைக்கர்து ?
நல்ல மழை பெய்யலன்னா குடி தண்ணி ருக்குக் கூட் அவதிப்பட வேண்டி யதுதான்்' வியர்வையை முந்தானையால் துடைத்துவிட்டுக் கொண்டே என்று பயம் கிளப்பினாள் என் மனைவி.
“நீதான் எல்லாத்துக்கும் ஒரு பரிகாரம சொல்வியே
இதுக்கு ஒரு பரிகாரம் சொல்லுங்களேன்” என்று கிண்டலாக பேசியதை அவள் சீரியசாக
எடுத்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.
பரிகாரமா நான் என்னத்த கண்டேன். என்றவள் திடீரென்றுஞாபகம் வந்தவள் போல பேசினாள்.
ஒரு தடவ நாங்க எங்க மாமா தாத்தா ஊரில் மழை இல்லனு பரிகாரம் பண்ண பொண் குழந்தைகள்
தேவைனு என்னையும் அழைச்சின்டு போனா பாட்டி.
வீடு வீடர்கச் போய் கிருஷ்ணன் பத்தி பாடிக் கும்மியும், கோலாட்டமும் போடனும். நான் கூடக் கோலாட்டம் போட்டேன். அதுக்காக என் மாமா தாத்தா எனக்கு பட்டு பாவாடை வாங்கி குடுத்தேர் !' என்றாள் என் மனைவி
“அப்படின்னா பரிகாரம் இருக்குன்ற “
“கண்டிப்பா இருக்கு “ என் மனைவி தீர்க்கமாக சொன்னாள்.
“அது அந்தக் காலம் இப்போலாம் யாரும் பண்ணமாட்டா.”
சரி அந்த சமயத்துல பரிகாரம் பண்ணப்பிறகு உண்மையாவே மழை பெய்ததா?' என்று சங் தேகத்துடன் கேட்டேன்
அப்போ நான் ரொம்ப சின்னவோ. வேற ஊர்ல தானே நடந்துது.
மழை பேஞ்சா மாதிரிதான் ஞாபகம். ஆனால் ஒண்ணு எதிலும் நம்பிக்கை முக்கியம. நாம நம்ம கடமைய பண்ணனும் பலனை அந்த பரந்தாமன் கிட்ட விட்டுடனும் ' என்றாள் என் மனைவி
அந்த பேச்சுடன் நான் கதை எழுத எழுந்து போய்விட்டேன்.
ஆனால் என் மனைவி பக்கத்து வீட்டு அருணாவிடம் இதைப்பற்றி பேசினாள்.
“தாராளமா பண்ணலாம் மாமி .ரெண்டு நாளல பரிட்சை முடிஞ்சு குழந்தைகளுக்கும் பள்ளிக் கூடம் லீவு விட்டுடுவா. அவாளுக்கும் பொழுது போக்கின மாதிரிஇருக்கும்” அருணா உற்சாகமாக சொன்னாள்.
நான் மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.பிறகு என்ன நடந்ததோ தெரியாது்
இரண்டு நாள் சென்றது.
வழக்கம் போல அதிகாலையிலேயே என் அறையினுள் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். எழுதுவதற்கு இதமான சூழ்நிலை. எழுதிக் குவித்த தாள்கள்மேஜையின் மேல் கிடந்தன.
பத்திரிகை ஆசிரியர் வேறு ‘கெடு’ வைத்து விட்டார்.இன்னும் ஒருவாரத்துக்குள்.அந்த நாவலை முழுமையாக முடித்துக் கொடுக்கவேண்டும். அவர் அனுப்பிய கடிதத்தை பார்த்ததிலிருந்து ஒரே பரபரப்பாக குனிந்த தலை நிமிராமல் கதையை எழுதிக் கொண்டிருந்தேன்.
சுவாரஸ்யமாக எழுதிக் கொண்டிருந்தவன் காதுகளில் வித்தியாசமான ஒலி.அதுவும் அந்த அதிகாலை நேரத்தில் சற்று வித்தியாசமாக இருந்தது. அது பட்டுப் பாவாடைகளின் சலசலப்பு, வளையல்களின் ஒலி, பூக்களின் கமகம வாசம்.
தலை நிமிர்ந்து புருவத்தை சுறுக்கி காதுகளை தீட்டினேன்.. ஏனென்றால் நான் எழுதி கொண்டிருந்தது பயங்கரமான பேய்க் கதை.
அந்தபேய்க்கதை முக்கியமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.இன்னும் விடியவில்லை இருட்டுதான்.
மெதுவாக பயத்துடன் ஜன்னல் பக்கம் போனேன் .நல்லவேளை நான் நினைத்தமாதிரி அங்கு எதுவும் இல்லை.
ஜன்னலுக்கு வெளியே தெருவோரமாக சில சிறுமிகள் நின்று கொண்டிருந்தார்கள்.அவர்களுடைய வளை குலுங்கும் கைகளில் , பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று பல வண்ணங்களில் கோலாட்ட குச்சிகள் ிருந்தன. வட்டமாக ஒரு ஒழுங்கில் நின்று கோலாட்டம் போடத் தயாராகிவிட்டார்கள்.எல்லாம் என் மனைவியின் கைங்கர்யம் தான் என்று எனக்கு புரிந்துவிட்டது.
இனி நான் எழுதி உருப்பட்டாற்போலத்தான். இதோ அவர்களுடைய கோலாட்டமும் ஆரம்பித்துவிட்டது.
என் அமைதியான காலைப் பொழுதை யாருக்கும் விட்டுத்தர முடியாது.
அதுவும் இப்போது எனக்கு இருக்கும் அவசரத்தில் நிச்சயமாக முடியாது.எனக்கு பதட்டம் தொற்றிக் கொண்டுவிட்டது.
அங்கிருந்த சிறுமிகளுக்குள் ஒருத்தி கொஞ்சம் பெரியவளாக இருந்தாள். வந்திருந்த மற்ற சிறுமிகளுக்கு லீடர் போலும். ஜன்னல் வழியாக பாரத்த என்னைப் அவள் கவனித்து .என் கோபத்தை ஊகித்துவிட்டாள்.
“மாமா கோபித்துக் கொள்ளாதீர்கள்.இன்றைக்குத்தான் நல்ல நாள் பார்த்து முதல் முதலாகக் கோலாட்டம் தொடங்குகிறோம். பூஜை சாங்கியமாக காலையிலே மண் எடுத்தாயிற்று…அதனால்….” என்றாள் தயக்கத்துடன்.
“மண்ணாவது கல்லாவது…
இங்கிருந்து கிளம்புங்கள் உங்களுக்கெல்லாம படிப்பு எழுத்து எதுவும் இல்லனா…அவாவா வீட்டு வேலய பாருங்கோ இங்க வந்து தொந்தரவு பண்ணி என் பிராணனை எடுக்காதீங்கோ ! ” என்று அறைக்குள்ளிருந்தே விரட்டிவிடப் பாத்தேன்..
அந்தப் பெண் தலையை நிமிர்த்தி, என் முகத்தை பார்த்தாள். அவள் கண்கள் என்னை மிரட்டின.
உடனே நான்
“என்ன முறைக்கற மரியாதை இல்லாம?போ போ என்றேன்
“போகலனா என்ன பண்ணுவீங்க?” அந்தப் பெண்என்னைக் கேட்டாள்.
பின்னாலிருந்து வேறு சில சிறுமிகளும் அவளுடன் சேர்நது; “இந்த மாமா என்னவோ நாம்ப தப்பு பண்ற மாதிரி நம்மைரொம்பத்தான் மிரட்டறாரே!”.
“நாங்க இங்க தான் கோலாட்டம் போடுவோம்.” என்றனர் கோரஸாக.
மேலும்
“நாங்க கோலாட்டம் போட்டா தான்ஊர் முழுக்க மய வரும்!
இல்லேனா எப்படி மய வரும்? மய வரலனா நெல் கிடைக்குமா? …” என்று மழலை மொழியில் கேட்டாள் ஒருத்தி கேட்டாள்.
நான் பொறுமை இழந்து அறையை விட்டு வெளியே வந்தேன்.
என் வீட்டில்
வாசல் தெளிக்க வாளியில் தண்ணீரும் மக்கும் இருக்கும்.இப்போது
தண்ணீர் ப்ரச்னையால்
மக்கில் தான் சாணி கரைத்து தெளிக்கிறாள் என் மனைவி.
வாளியில் மீதி ஜலம் நிறையவே இருந்தது.
கோபத்தில்குபீரென்றுபாய்ந்து அந்த வாளியைக் கையில் எடுத்தேன்.இரு கைகளாலும் தலைக்கு மேல் தூக்கினேன்.
“கிழிச்சீங்கோ….மரியாதையா எல்லாரும் போயடுங்கோ இல்லனா” என்று அவர்கள் மேல் கொட்டுவது போல மிரட்டினேன்.
நான் நின்ற கோலத்தைப் பார்த்து அவர்கள் கோமாளியை பார்த்தது போல் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தார்கள்.
வேறு வழியில்லாமல் என்னை முறைத்த
சற்று பெரியவாளக லீடர் போல இருந்த சிறுமியின் இருந்த அந்தப் பெண்ணின் தலையில் வாளியை கவிழ்த்தேன்.
“ஓடுங்கள்! இன்னும் ஒரு விநாடி இங்கு நின்றீர்களோ! உங்கள் எல்லோர் தலைக்கும் இந்த மாதிரி அபிஷேகம்தான் கிடைக்கும்…”என்று மற்றவர்களையும் மிரட்டினேன்.
அவர்கள் நகரவில்லை. அந்தத் குளிரில் பட்டுப் பாவாடை நனைந்தும் அழுத்தமாக அதே இடத்தில் நின்று கொண்டிருந்தாள்.
மற்ற குழந்தைகளும் பயந்து ஓடி விடவில்லை.
எனக்கு கதை எழுத வேண்டும் மனம் பரபரத்தது.
“இங்கிருந்து போகிறீர்களா? அல்லது அடி உதை வேண்டுமா?” என்று மேலும் அதட்டினேன்.
அந்தப் லீடர் பெண்தான் உடன் நின்றவர்களை ஓடிவிடாமல் தடுத்து மறுபடியும் முன்போலவே வட்ட வியூகத்தில் நிறுத்திக்கொண்டு நனைந்த உடையுடன் கோலாட்டம் போடத் தொடங்கி விட்டாள்.
அவள் கோலாட்டக் குச்சிகளை அடித்த வேகம். என்னையே அடித்து நொறுக்குவது போல் இருந்தது.
வேகமாக என் அறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாத்திக் கொண்டு எழுதுவதற்காகப் பேனாவை கையில் எடுத்தேன்.கோபத்தில் எல்லாமே மறந்துவிட்டது.
துளிக்கூட சத்தம் கேட்கவில்லை.அப்பாடா போய்விட்டார்கள்.
எவ்வளவு விறுவிறுப்பாக எழுதிக்கொண்டிருந்தேன் எல்லாமே மறந்துவிட்டதே என்று மீண்டும் எழுதியதை படித்துப் பார்க்க காகிதத்தில் கணகளை கவனமாக ஓட்டி எழுதியவற்றை படிக்க ஆரம்பித்தேன்.பதினைந்து நிமிடம் போயிருக்கும்.
என் வீட்டிற்குள்ளேயே கோலாட்டச் சத்தம் கிளம்பியது. பாட்டொலியும் கேட்டது. கணீர் கணீர் என்று குச்சிகள் அடிபடும் ஓசையோடு பாடுவது வேறுயாருமல்ல என் தர்மபத்தினி தான்.
வேகமாக அறைக் கதவை திறந்துகொண்டு உள்ளே போனேன்.
என் வீட்டு நடுக் கூடத்தில்…
அந்த நனைந்த சிறுமி என் மனைவியின் புடவையை தசாம் புசாம் என்று அணிந்திருந்தாள.அவள் பட்டுப் பாவாடை வெயில் அதிகம் படாத இடத்தில் உலர்த்தபட்டிருந்தது.
மற்ற குழந்தைகள் அங்கே தெருவில் எப்படி நின்றார்களோ, அதே போல வட்டமாக நின்று கோலாட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
என் மனைவி அந்த நனைந்த சிறுமியின் தலையை டவலில் துடைத்தபடியே மற்ற குழந்தைகள் ஆடுவதற்காக
அவர்கள் ஆட்டத்துக்குப்பதம் பாடுகிறவள்போல் பாடிக்கொண்டிருந்தாள்.
“இதென்ன? வீடா? இல்ல சத்திரமா? நான் இங்க கதைய எப்படி எழுதுவது? இவர்கள் தெருல கோலாட்டம் போட்டாலே எழுதுவதற்குதொந்தரவாக இருக்கிறது. நீ என்னடாவென்றால் வீட்டுக்குள்ளேயே…?” நான் முடிப்பதற்குள்…
“கோச்சுக்காதீங்கோ. வருஷம் பூரா வேல இருக்கும் தான். ஆனா ஊர் நன்னா இருந்தா தானே நாம்பளும் நன்னா இருக்க முடியும்? ஊருக்கு ஒரு நல்லதும் உங்களால பண்ண முடிலனா பரவால்ல. பண்றவாளயாவது தடுக்காதீங்கோ.நான் சொல்லிதான் இதெல்லாம் நடக்கர்து.
பத்தே நாள்தான்குழந்தைகள்கோலாட்டம் போடப் போறா. உங்களுக்கு புண்ணியமா போகும்.அதை நிறுத்த சொல்லாதீங்கோ.”
வழக்கம்போல அவள் இதமாக பேசி என்னை வென்றாள்.எனகோபம் வந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டது.
பேசாமல் அறைக்குத் திரும்பி வந்தேன். உள்ளே கோலாட்டம் ஓசை கேட்டது. ஒரு தபால் கார்டை எடுத்தேன். “அன்புள்ளஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். கடுமையான வயிற்றுப்போக்கால் அவதிபடுவதால் கொண்டிருப்பதால் உங்களிடம் ஒப்புக்கொண்டபடி நாவலை முடித்து அனுப்ப இயலாமற் போய்விட்டது. இன்னும் பதினைந்து நாட்களில் அனுப்பிவிடுகிறேன். சிரமத்துக்கு மன்னிக்கவும்.”
முகவரி எழுதிய பின்பு கடிதத்தை நாலு வீடு தள்ளித் இருந்த தபாலாபீஸ் தபால் பெட்டியில் கொண்டு போய்ப் போட்டு விட்டுவந்தேன்.வேறு வழி இல்லயே.
கி கிருஷ்ணனுக்கு தினமும் ஒரு பிரசாதம் செய்ய வேண்டும் என்றும்பகடைசி நாள் ஊரிலிருக்கும் பெண்கள் எல்லோருக்கும் சாப்பாடு போட வேண்டும் என்று சொல்லி என்னிடமே
பணமும் வாங்கிக் கொண்டாள் என் மனைவி.
ஆனால் நான் எதிலும் கலந்து கொள்ளவில்லை.என் கோபம் மாறவில்லை.
எதிர்க்கவும் இல்லை.
ஆனால்ச..மையலுக்கே தண்ணி இல்ல இதுல விருந்து வேறா எப்படி சமாளிக்கப்போகிறாள் என்று நினைத்தேன்.
ஒரு வழியாக
பத்தாவது நாள் வந்துவிட்டது…
குழந்தைகளின் உற்சாகம் துளியும் குறையவில்லை.
அன்று தான்் விழாவின் கடைசி நாள். அதிதாலேயில் எழுந்து என் மனைவி
ஸ்நான்ம் செய்துவிட்டாள்.
கோயிலுக்கு போய் பெரிய பிரதஷணம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தவளை தேடி அருணா வந்தாள்.
இன்னியோட முடியர்து சொட்டு மழையில்ல. இப்பவே சூடு ஆரம்பிச்சிடுத்து.ஏதோ பகவானை நம்பி
ஆரம்பித்து விட்டேன். வேற வழியில்ல.முடித்துத்தான்ே ஆக வேண்டும் “ என்று சலிப்புடன் பேசினாள் என் மனைவி.
அருணா முகத்தில் ஈயாடவில்லை.ஊரார் கேலி செய்யும்படி ஆகிவிட்டதே என்று நினைத்தாளோ என்னமோ
பதில் சொல்லாமல் போய் விட்டாள்.
பண்டிகை நல்லபடியாக முடிய தாராளமாக பணத்தையும் கொடுத்திருந்ததால் எனக்கும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.
எப்படியோ தண்ணியில்லா கஷ்டத்திலும் நாலு தெருவரை தாண்டிப் போய் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி விருந்து சாப்பாடும்செய்துவிட்டாள் என் மனைவி.
கடைசி நாளில் வழக்கத்தைவிட அதிக வெய்யில் காய்ந்தது.
அந்த கொளுத்து கிற வெயிலேயும் பொருட்படுத்தாமல் ஒருத்தர் விடாமல் எல்லா பெண்களும் சாப்பாட்டுக்கு வங் திருங்தார்கள்.
இதுக்கெல்லாம் மழை பெய்யுமா என்ன?என்று ஒருத்தி கேட்க
மழையாவது பெய்கிறதாவது! லீவிலே குழங்தைக
ளுக்கு ஒரு பொழுது போக்கு ' என்று மற்றவள்கே லி பேசினாள்.
சாப்பிட்டு முடித்தனர்.
ஆனால்…
அந்த அதிசயம் நடந்தது.
எல்லோரும் வெற்றிலை பாக்கு வாங்கியதும் உடனே அவர்கள் போய்விட முடியாதபடி…
எங்கிருந்தோ ஒரு கருத்த மேகம் கண்ணனைப்போலவே மாயமாய் வந்தது.
சிறு தூறல்கள் ஆரம்பித்தன .
அருணாஉற்சாகமானாள்.
அந்த லீடர் சிறுமி என்னை பார்த்து சொன்னாள்.
நாங்கதான் அப்பவே சொன்னோமே மாமா என்றாள் மற்ற சிறுமிகள் சந்தோஷத்தில் குதித்தார்கள்.
ஆனால்அ…ரைமணிக்கும் குறைவான நேரம்தான் தூறியது…
மழை நின்றுவிட்டது.
வானம் வெளுத்து சூரியன் சுட ஆரம்பித்துவிட்டது.
ஐந்தே நிமிடத்தில் மழை வந்த சுவடு கூட இல்லை.
ஆனால் அவன் கருணையை நினைத்து ஆனந்தத்தில் என் மனைவியின் கண்களில் கடலே பெருகி வழிந்தது.
கண்ணா கண்ணா என்று புளகாங்கிதம் அடைந்தாள்.
“என்னடீ இது தம்மாத்துண்டு பேஞ்சிட்டு போயிடுத்தே
இது என்ன மழை இது
சூட்டை கிளப்பிவிட்டுடுமே” வந்திருந்த பெண்கள் குத்தல் வார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்தார்கள்.
சற்றுமுன் குதூகலமாக இருந்த சிறுமிகள்
பெரியவர்களின் வார்ததைகளால் இனம்புரியாத குழப்பத்தில் இருந்தார்கள்.பாவமாக இருந்தது.
மழையே வரவில்லை என்றாலும் பரவாயில்லை.வெற்றி தோல்வி சகஜம் தான்.
ஆனால்…
இந்த ஊர் மக்களுக்காகவும் பசு கன்றுகள் ஆடு மாடு தானியங்கள் இவைகளை தண்ணி பஞ்சத்திலிருந்து
எப்படியாவது
மீட்க வேண்டும் என்று குழந்தைகளின் உள்ளத்தில் தோன்றியதே அது மட்டும் தானே
அந்த கண்ணனுக்கு உண்மையில் பிடித்த மிக உயரந்த விஷயம்.
சிறுமிகள் பக்தியுடன்
முழு ஈடுபாட்டுடனும் அந்த கண்ணனின் கருணையை பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையுடனும், உயர்ந்த நோக்கத்தை
நிறைவேற்ற அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளை அதற்கான
பலனே கிடைக்கவில்லை என்றாலும்
பாராட்டாமல் இருப்பது தவறு என்று எனக்குத் தோன்றியது.
அதனால்…
“புஷ்பா, குழந்தைகள் சொன்ன மாதிரியே மழை வந்துடுத்தே. ரொம்பப்பிரமாதம்.சர்வ நிச்சயமா இவா கோபிகள்தான். இந்த கோபிகளுக்கு இன்னொரு தடவ உன் கையால பால்பாயாசம் குடு “ என்றேன் சந்தோஷமாகவும் உரத்த குரலிலும்.என் குரலில் இருந்த அழுத்தத்தாலும் சபை நாகரிகம் கருதியும் விருந்திற்காக வந்த பெண்கள் அமைதியாகிவிட்டனர்.
என் மனைவி பாயசத்துடன் ஓடோடி வந்தாள்.அருணாவும் அவளுடன் இணைந்து கொண்டாள்.
சிடுமூஞ்சி மாமாவே சொல்லிவிட்டாரே என்ற நினைத்தாரகளோ என்னவோ.
குழந்தைகளின் கண்களில் உற்சாகம் கரைபுரண்டது.
“ஜெய் ஶ்ரீகிருஷ்ணா” என்றார்கள் கோரஸாக.
No comments:
Post a Comment