Monday, July 18, 2022

பொதுவான எதிரி ver2

  பொதுவான எதிரி

கார் குலுக்கலுடன் நின்றது. அந்த ஏசி காரில் உட்கார்ந்திருந்த நான் கட்டியிருந்த காட்டன் புடவை வழக்கத்திற்கு மாறாக கொதிப்பது போலிருந்ததுகண்களை இடுக்கிக்கொண்டுபடித்து முடித்தேன்.

 அந்த பத்மாவதி முதியோர் இல்லம் பெயர்ப்பலகை என்னை வரவேற்கிறதா பயமுறுத்துகிறதா? என்று புரியவில்லை.

பணியாளர்கள் துணனயுடன் உள்ளே வந்தேன்.சென்ற மாதம்  கணவர் இறந்ததும்  குழந்தைகள என்று சொல்ல யாருமில்லாத்தால் கணவரால் கிடைத்த இந்த பென்ஷன் பணத்துடன் இங்கே அடைக்கலம் தேடி வந்திருக்கிறேன்.


அந்த வராண்டாவில் திருப்பதி பாலாஜியும் பத்மாவதியும் பெரிய போட்டோவில் பெரிய பெரிய மாலைகளுடன் ஊதுவத்தி மணக்க இரண்டு பக்கமும ஆளுயர குத்து விள்க்குகள் ஒளிர கருணை பொங்கும் கண்களுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தார்கள். கைகுவித்து வணங்கினேன்.


இது தான் prayer hall என்ற பணியாளர் மெலிந்த தேகத்துடன் இருந்தாள். அடர்த்தி குறைந்த ஆனால் நீளமாக வளர்ந்திருந்த தலைமுடியை மழமழ வென்று வாரி பின்னலிட்டிருந்தாள். நெற்றியில் குங்கும்ம அதன் மேல் விபூதியும் அணிந்திருந்தாள்.மூக்கின் இடது பக்கத்தில் மருவே மூக்குத்தி போலிருக்க மாநிறமாய் இருந்த அந்த பணியாளருக்கு முப்பதுக்கு மேல் வயதிருக்கும்சுடிதார்அணிந்து கொண்டு அதற்குமேல் வெளிர் நீல நிறத்தில் காப்பக பெயர் பதித்த சட்டையும் அணிந்திருந்தாள்.


நன்றாக நடந்த என்னை தாங்கிபிடித்துக் கொண்டாள்.

நான் சிரித்து கொண்டே “ உன் பெரென்னம்மா என்றேன்.” “என் பேரு விஜயலஷ்மிங்கம்மா” என்றாள்.

“ விஜயலஷ்மி என்னால நல்லா நடக்க முடியும் எனக்கு எந்த நோயுமில்ல” நான் சொன்னதும் என் கைகளை பிடித்திருந்த அவள் கைகள்விலகினாலும் அவள் கண்களில் ஜாக்ரதை உணர்வு பரவி நின்றது.அவளுடைய பொறுப்புணர்ச்சி என் மனதைக் கவர்ந்தது.


“்அம்மா   இங்க நீங்க சுதந்திரமா இருக்கலாம்.உங்களுக்கு பிடிச்ச உணவை 

முதல் நாளே சாயந்தரம் அஞ்சு மணிக்குள்ள சொல்லிடுங்கம்மா.மறுநாள் பரிமாறுவோம்.

வெந்நீர் எப்பயும் கிடைக்கும்.இங்க உங்கள மாதிரி நிறைய பேர் இருக்காங்க.

அவங்க கூட வெளில போகலாம்.ஆனா முன்னாடியே போற டைம் வர்ற டைம் லொகேஷன் சொல்லிடுங்க.


அப்போதான் கொஞ்சம் லேட்டானாலும் நாங்க உங்கள தேடி வருவோம்.

உறவுக்காரங்க வீட்டுக்கு போகலாம். எத்தனை நாள் தங்கறீங்கனு சொல்லிடுங்க

ஒருவேளை மாற்றங்கள் இருந்தாகொஞ்சம் முன்னதாவே சொல்லிடுங்க.”

பேசிக்கொண்டே வந்தாள்.பணியாளரைத் தொடர்ந்து டைனிங் ஹாலுக்குள் சென்றேன்.


வரிசையாக கல்யாண பந்திபோல நாற்காலிகளும் மேசைகளும் போடப்பட்டிருந்தன.

அங்கே சுவற்றில்  ராதையும் கண்ணனும் ந்ந்தவன்தில் அமர்ந்து கொண்டிருப்பதை போலவும் கன்றுக்குட்டி கண்ணனின் பாத்த்தில் தலைவைத்து ராதையின் மடியில் படுத்திருப்பது போலவும் இருந்த பெரிய  படம் ரொம்ப அழகாக இருந்தது.


“உங்களுக்கு விருப்பமானால் இங்கு வந்து சாப்பிடலாம் அல்லது உங்கள் அறையிலேயே கூட சாப்பிடலாம் என்றாள்.

அங்கிருந்து வெளியே வந்தவளை பின்பற்றி நடந்தேன் அங்கே வரிசையாக  கழிப்பறைகள் இருந்தன.


“அம்மா இங்கே நிறைய பாத்ரூம்கள் இருக்கு.இது பெண்களுக்கான பகுதி.என்றாள்.


பிறகு நடந்து வெளியில் வந்தோம். வரிசையாக அறைகள் இருந்தன.  


எனக்கான அறையில் மேலே பேன் ஓடிக் கொண்டிருந்தது.

மெத்தையும்வெளிர் நீல நிற உரை போடப்பட்டிருந்தது.சாப்பிட படிக்க வசதியாக பக்கத்தில் சிறு டேபிள்  என் துணிகளை வைத்துக் கொள்ள அலமாரி.  கூப்பிட்ட குரலுக்கு பணியாளர்கள்இருக்கிறார்கள்.

இது போதுமே எனக்கு.

இதற்குமேல் வேறென்ன தேவை

பென்ஷனிலிருந்து மாதாமாதம்  இந்த இல்லத்திற்கான  கட்டணத்தை  செலுத்தவேண்டும் அவ்வளவுதான்.


என் கடந்த காலம் கண்முன் வந்தது.

கல்லூரி முடித்ததுமே என்னை விட பத்து வயது மூத்தவரான 

அரசாங்க வேலையிலிருந்தஅவரை  திருமணம் செய்து வைத்தார்கள்.

புகுந்தவீடும் கொஞ்சம் வசதிக்குறைவு தான்.

மாமனார் இல்லை. அவருடைய இரண்டு  தங்கைகளுக்கும் கல்யாணம் சீமந்தம் பிள்ளைபெறவு என்று பணம் கரைந்துவிட்டது..நாங்கள் சென்னைக்கு மாற்றலாகி வந்துவிட்டோம். வாடகை வீட்டிலேயே வாழ்க்கை ஓடிவிட்டது.

அவருக்கு ரிடையர்மென்ட் ஆகி கிடைத்த பணம் தான் அவரது  ஆஸ்பிட்டல் செலவுக்கு பயன்பட்டது.மீதிப் பணம் என் பேரில் சேமிப்பில் இருக்கிறது.உறவினர்கள் சற்று வசதியாகவே இருப்பதால் என் உதவி அவர்களுக்கு தேவைப்படவில்லை. குறைந்தபட்சம்  யாருக்கும் பாரம் இல்லாமல் வாழ இதுவே வழி என்று இங்கு வந்துவிட்டேன்.விசேஷத்திற்கோ அல்லது எதற்கோ என்னை தொடர்பு கொள்ள விரும்பினால் உதவியாக  இருக்குமே என்று இந்த இல்லத்தின் முகவரியை அவர்களிடம் தந்திருக்கிறேன்.


இனி வாழ்க்கையின் எஞ்சிய வருடங்களை புது மனிதர்களுடன் இந்த நான்கு சுவற்றுக்குள் கழிக்க வேண்டுமே என்றஎண்ணம் சற்று மலைப்பாகத்தான் இருக்கிறது.

 

நான்    யோசித்துக் கொண்டிருந்த போது…


அம்மா” என்ற குரலுடன் திறந்திருந்த என் அறைக் கதவை தட்டினாள்  விஜயலஷ்மி.நான் வெளியே வந்தேன்.


”அம்மா” என்ற அவளது குரல் மனதை உருக்கியது.அவள் குடும்பம் பற்றி விசாரித்தேன்.

இல்லத்திற்கு அருகிலேயே அவளுக்கு வீடு. மாமனார்  இங்கு வாட்ச்மேனாக இருக்கிறார்.

அவர் மூலமாக இங்கு வேலைக்கு சேர்ந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன.ஒரு பெண் குழந்தை பள்ளி செல்கிறாள்.அழகான சந்தோசமான குடும்பம். 


கொஞ்ச நேரம் தோட்டத்துக்கு போகலாமா? அங்க நிறைய பேர் இருக்காங்க. உங்களுக்கும் அவங்களோட பேசினா நல்லா இருக்கும்.என்றாள்.


சரிம்மா.அதுவும் நல்லதுதான்” என்று அவளுடன் நடந்தேன்.   விஜயலஷ்மியின் வழிகாட்டுதலில் மீண்டும் கழிப்பிடங்கள் இருந்த பகுதி அதை அடுத்த குடிநீர் க்குழாய்கள் இருந்தன. இவற்றை தாண்டியதும் சற்று பெரிய தோட்டம்.இரண்டு பக்கமும் மாமரங்கள் வேப்பமரங்கள் தென்னை மரங்கள் என அடுத்தடுத்து ஒரு ஒழுங்குடன் நின்றிருந்தன. 

பறவைகளின் ஒலிகள் கேட்டன.  இதமானகாற்று வீசியது.  நடுவில் சிமெண்ட் நடைபாதை.அதன் முடிவில் விநாயகர் கோவில். அந்த கோவிலின் வாசலில் சிறுமண்டபம் இருந்தது. 


மண்டபத்தில் வலதுபக்கத்திலிருந்த இரண்டு தூணகளுக்கு நடுவே வெண்கலமணிகளை  ஒரு ஓரமாக   கைக்கு எட்டும் தூரத்தில்  இரும்புச்சங்கிலியில் கோர்த்து  தொங்கவிட்டிருந்தார்கள்.  காற்றில் அசையும் போது மணியோசை கேட்டது.அருகே மருதாணிச்செடி கம்மென்று வாசணை வீசியது.  மல்லிகை ரோஜா பூச்செடிகள் சூழ அந்த இடம் ந்ந்தவனம் போல இருந்தது. அம்மா,எதாவது வேணும்னா என்னை  கூப்பிடுங்க “ என்று சொல்லிவிட்டு  போய்விட்டாள்.



என்னைப்போல பலர் அங்கிருந்தனர்.…சுற்றிப்பார்த்தபோது…அங்கே இருந்த மாமரத்தினடியில் போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் இந்திரா  இருந்தது தான் பெரிய ஆச்சரியம்

வேகமாக நடந்து அவளிடம் போனேன்.

அவளைப் பார்த்ததும்  கல்லூரி செல்லும் வயதிற்கு என் மனம் தாவியது.


“இந்திரா…” என்றேன் என் குரல் கேட்டதும்என்னை அடையாளம் கண்டுபிடித்துவிட்டு “புவனேஷ்வரி நீ நீயா…உன்ன எதிர்பார்க்கவே இல்லயே… இன்ப அதிர்ச்சி. இது கனவா இல்ல நிஜமா ” என்று என்னை அணைத்துக் கொண்டாள்.


கல்லூரியிலிருந்தே நாங்கள் உயிர் த்தோழிகள்.

அவள் பிள்ளை ரகுவின் திருமணத்திற்கும்நான் போயிருந்தேன்.

ஆனால் அவன் மரியாதைதெரிந்த அன்பான பையனாச்சே. ஒருவேளை மருமகள் சரியில்லயோ? இவள் எத்தனை நாட்களாக இங்கே இருக்கிறாள்.

இந்திரா வைப் பற்றி யோசித்தேன்.


இந்திரா ,இரண்டு நாத்தனார் இரண்டு ஓர்படிகள் என்று கூட்டுக் குடும்பத்தில் இருந்தவள்.காலையில் ஐந்து மணிக்கு எழுந்தால் இரவு பதினோருமணி வரைக்கூட    சிரித்த முகத்துடன் சலிக்காமல் வேலை செய்வாளே.


தனக்கு ஒரு குழந்தை தான் என்றாலும் நாத்தனார் குழந்தைகளை இழுத்து வைத்து சீராடிக்கொண்டிருப்பாளே. இவளுக்கா இப்படி ஒரு நிலை.பிள்ளைகள் திருமணத்திற்கு பிறகு மாறி விடுகிறார்களே .குழந்தை இல்லாத என் நிலையே மேல் போலிருக்கிறது.

மனதில் அடுக்கடுக்காக  சந்தேகங்கள் தோன்றின.அதற்கான பதில் தெரிவதற்கு முன்பாகவே ஆத்திரத்தையும் கோபத்தையும் கிளப்பிவிட்டன.


“அப்புறம எப்படி இருக்க.”என்றேன் என் குரல் சற்று கடுமையாக இருந்தது எனக்கே தெரிந்தது.

“நான் ஏன் இங்க வந்தேன்னு உனக்கு இப்ப தெரிஞ்சாகனும் இல்லயா?” அவள் நிதானமாக சிரித்துக் கொண்டு பேசினாள்.

நான் சிரிக்கவில்லை அவள் என்னை ஏமாற்ற என்ன கதை சொல்லப்போகிறாள் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன்.

“ரகு கல்யாணத்துக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே அவங்க அஅப்பா இறந்துட்டார்.” என்றாள்.


“நான் தான்வந்திருந்தேனே.அவரோட காரியம் முடிஞ்சதுமே சொத்து பிரிஞ்சிது.உங்க கூட்டு குடும்பம் ஆளுக்கொரு பக்கம் போயாச்சு.ரகுவுக்கு அவனை மாதிரியே நன்னா படிச்சு வேலைக்கு போற பெண்ணாகப் பார்த்து கல்யாணம் பண்ணி வெச்ச வரைக்கும் தெரியும். மேற்கொண்டு சொல்லு” என்றேன் அவசரமாக


ஆனால் அவள் பதட்டப் படாமல் நிதானமாக என் கண்களைப் பார்த்துப் பேசினாள்.

“ரகுவுக்கும் அவனோட வைய்ப்  ராதிகாவுக்கும் ஒத்துப் போகல்ல” இந்திரா ஆரம்பித்ததும் நான் காதுகளை தீட்டிக் கொண்டேன்.

கலயாணம் ஆனதுலேந்து ஒரே சண்ட.கீரியும் பாம்பும் தான். .


குழந்த பிறந்தா சரியாகிடும்னு நினைச்சேன்.ஆனா குழந்த 

“ரெண்டு பேரம் ஆபிஸ்லேர்ந்து வந்ததும் குழந்தைய யார் பாக்கர்துனு ஒரே சண்ட.


இத்தனைக்கும் காலைல சமையல முடிச்சிட்டு  குழந்தை தீப்தாவ குளிச்சிவிட்டு பால் குடிக்க வைத்து மத்தியானம் தூங்க வச்சு. சாயங்காலம்   விளையாட்டுகாட்டி    குழந்தைய கவனமா பாப்பேன்.


“சனி ஞாயிற்றுக் கிழமைலயாவது  குழந்தைய பாக்கக் கூடாதானு” அப்படீனு

ரகு கேப்பான் அவகிட்ட.

“ஏன் நீ பாக்க கூடாதா நானும் உன்ன மாதிரி வேலைக்கு போறனே.” என்று அவ கேப்பா. சண்டை ஒரு வாரம் வரைக்கும் ஓயாது.எனக்கு ஒரே தல வேதனையா போச்சு.” என்றாள்.உடனே நான்…


“கூட்டு குடித்தனத்தில இதவிட பெரிய ப்ரசனைலாம் சமாளிச்சவ நீ.    இதுக்காகவா இங்க வந்துட்ட? லீவு நாள்ல குழந்தைய அவ அம்மா வீட்டுக்கு அனுப்பிட வேண்டியதுதான?” என்று கேட்டேன்.

சிரித்துவிட்டு தொடர்ந்தாள் அவள்

“ இப்படி அம்மாவும் அப்பாவும் ஏட்டிக்கு போட்டியா இருந்தா அந்தக் குழந்தை பாவம் இல்லயா?

அவங்களை நிரந்தரமா எப்படி சரி பண்றதுனு யோசிச்சேன்.

என் மருமகளைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு அனுசரணையான மாமியார்.

என் பையனுக்கு செல்ல அம்மா.

ஆனால்  அந்தக் குழந்தை???

ரகு  தன்னோட   தலைல குழந்தைய  சுமத்தற எதிரியா தான்   ராதிகாவ நினைச்சான்.

அதேபோல ராதிகாவுக்கு ரகு தெரிஞ்சான். 

இப்படி ஈகோ பிடிச்சி அலைஞ்சாங்க.

பொறுத்துப் பார்த்தேன்.ஒரு கட்டத்துக்கு மேல என்னால முடியல.      


 அதனால  நான் ஒரு திட்டம் போட்டேன்.

திட்டப்படி நான் சின்னசின்ன விஷயங்களை பெரிசுபடுத்தி என் மருமக  ராதிகாகிட்ட முகத்தை சுளிச்சி என் அதிருப்திய காமிச்சேன் .

என் பையனையும்  விட்டுடல எதாவது ஒரு தப்பை கண்டுபிடிச்சேன்.ஏன் புதுசா தப்புகளை உருவாக்கி குறை சொன்னேன்.

அவங்களுக்கு ஒண்ணுமே புரியல.

நான் எதிர்பார்த்த மாதிரி கொஞ்சம் வித்தியாசம் ரகு கிட்ட தெரிஞ்சிது. 

என் மகனுக்கு தர்மசங்கடம்.அதை

சமாளிக்கர்துக்காக  அவளுக்கு சாப்பிட வாங்கிட்டு வந்தான்.

எங்கிட்ட  என்னவானாலும் சொல்லு பரவால்ல அவள திட்டாதன்னு கூட சொன்னான். 


“அப்புறம்” என்றேன் ஆர்வமாகி

“இது என்னுடைய சுபாவம் இல்லனு தெரியும்.அதனால, என்னை அவங்க டாகடர்கிட்ட கூட்டிட்டு போனாங்க.மருந்தெல்லாம் கூட வாங்கிக் குடுத்தாங்க.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

பிறகு அவளே தொடர்நதாள்.

ஆனா நான் தொடர்ந்து  மாசகணக்கில இப்படியே இருந்தேன்.சகிக்க முடியாம

அவ குழந்தய எடுத்துகிட்டு  அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டா.” என்று நிறுத்தினாள்.


இப்போது எனக்கு இவளைப் பாரக்கவே கோபம் வந்தது.

“என்ன இப்படி பண்ணிட்ட.எதோ கொஞ்சம் மிரட்டியிருக்கலாம்.

பையனையும் தனியா விட்டுட்டு நீயும் இங்க வந்திருக்க.உன்னோட திட்டம் சரியில்லயே. ஆமாம் உன்னோட திட்டம் தான் என்ன?”ஆதங்கத்துடன் கேட்டேன்.


“முழுக்கக் கேளு” என்றாள்.


“இன்னும் என்ன கேக்கர்துக்கு இருக்கு.  அனுபவமானவ பண்ற வேலயா பண்ணிர்க்க நீ”

என்றேன் கோபத்துடன் அவள்பே சினாள்.


“மருமக போனதும் இவன் கெஞ்சி போன் பண்ணான். வீட்டுக்குப்  போய் கூப்பிட்டான்.

அவ வரல. உங்கம்மா மன்னிப்பு கேக்கனும்னு சொன்னாளாம்.

ஒரே ஒரு  தடவ சாரி சொல்லிடும்மா.நீ பண்ணதும் தப்பும்மானு சொன்னான்.

நான் மன்னிப்பு கேட்க மாட்டேனு சொன்னேன்.”

என்றாள் இந்திரா.


“நீ பண்ணது தப்புதானே? மருமகளுக்கு தொல்லை குடுத்திருக்கியே. ஒரு பேபி சிட்டர் போட்டிருக்கலாமே.இல்லனா உறவுக்காரங்கள வச்சி பேசித் தீத்திருக்கலாமே.” என்றேன்.


அவள்தொடர்ந்தாள்.


“என் பிடிவாத குணம் , அவ மேல இருந்த இரக்கம் அப்புறம் அவனோட தனிமை எல்லாம் சேர்ந்து அவ மேல அன்பா மாறிடுச்சு அவனுக்கு. ஆனா மருமக அவனோட அன்புக்கும் மசியல. உங்கம்மா இருக்கிற வரைக்கும் அங்க வர மாட்டேன்னு சொன்னா.என் பையன அவளோட வீட்டோட வரச் சொன்னா.

அவனோ அங்க  போகப் பிடிக்காம  மனசு முழுக்க  கோபத்தோட என் கூட பேசாமயேஇருந்தான். நான் என் போக்கை மாத்திக்கல.அதனால,என் பையன்

அவங்க வீட்டுக்கு குழந்தய பாக்கற மாதிரி போய் அவ கூட சினிமா பீச்னு சுத்தினான்.ஒரு மாசம் கூட ஓடிடுத்து.நானும் மன்னிப்பு கேக்கல.அவளும் வரல. என் மகன் பொறுமையிழந்து என்கிட்ட சண்டை போட்டான். அவன் வாழ்க்கைய என்னோட ஈகோவால அழிக்கிறேன்னு சொன்னான்.”. என்று அவள் சொன்னதும்.


“உண்மை தானே” என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்தேன்.அவள் தொடர்ந்தாள்.


“உங்கம்மா நல்லவங்கனு நினைச்சேன் அவங்க நல்லவங்க மாதிரி நடிச்சிருக்காங்க. 

அம்மா பாசத்துல  நீங்களும்முடிவெடுக்க முடியல.உங்கம்மா அளவுக்கு நான் மோசமானவ இல்ல. உங்கம்மாவுக்கு உங்கள விட்டா வேற யாரும் துணையில்ல.அதனால உங்கள உங்கம்மாகிட்டேர்நது பிரிக்க விரும்பல.

இப்படியே நம்ப வாழக்கைய தொடர முடியாது அதுக்கு நாம்ப பிரிஞ்சிடலாம்னு   அவ டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பினா.என் பையன் கதறி அழுதான். 

இதுக்கெல்லாம் நான் கவலப் படல.இவ உனக்கு செட்டாக மாட்டா.

வேற நல்ல பொண்ணா நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேன்னு சொன்னேன.” 

என்று அவள் சொன்னதும் முதுகுத் தண்டு சில்லிட்டது எனக்கு.சரியான கொடுமக்காரிதான்.மருமக சொல்ற மாதிரி நல்லவளா இவ்ளோ நாளா நடிச்சிருக்கா. என்று கோபம் வந்தது.


“இவ்ளோ கெட்டவளா நீ.உன் மேல இருந்த பாசத்துல அவள மதிக்காம இருந்துட்டனேனு அழுதான். 

நான் அவன  சட்டையே பண்ணலனு தெரிஞ்சதும் இனிமே அவனுடைய வாழ்க்கைய மட்டும் பாக்கப்போறேனு சொல்லிட்டு என்ன இங்க கொண்டு வந்து விட்டுட்டான். அவங்க மூணு பேரும் ஒண்ணா இருக்காங்க” என்று முடித்துவிட்டு சம்மந்தமே இல்லாமல் சிரித்தாள்.


“நீ போட்ட திட்டம் உன்னையே கவிழ்த்திட்டுது. கடமய விடாம,உனக்கு அவன் பணம் வேற கட்டறானா? ஏன் மருமகளோட அப்பா அம்மா யாரும் இதுல தலையிடலயா?   ” மனசு பொறுக்கவில்லை எனக்கு இப்படி ஒரு மகன் இல்லயே என்ற ஏக்கத்தில்  மனதில் கருவிக் கொண்டு குத்தலாக கேட்டேன்.


 அவள் சிரித்து விட்டு சொன்னாள்.

“நான் போட்ட திட்டம் மற்றும் என் எதிர்பார்ப்பு எல்லாமே அவங்க தங்களோட ஈகோவை விடனும் அவ்வளவுதான. நான் என் பையன் கூட  சேர்ந்து  வாழர்தவிட. அவங்க மூணு பேரும் சேர்ந்து ஒத்துமையா  வாழர்த கண்ணால  பாக்கனும்னு ஆசைப்பட்டேன். என் பேத்தி தைரியசாலியா தன்னம்பிக்கையோட வளரனும.  இப்படிப்பட்ட அப்பா அம்மாக்கு பிறந்தமேனு பெருமைப்படனும்.


என் மகனை போலவே என் மருமகளும் ரொம்ப புத்திசாலி. இவளோட ஆலோசனைய  கேட்டு கம்பெனில எவ்வளவு பாராட்டு தெரியுமா? ரொம்ப சின்ன வயசுலயே  பெரிய இடத்துக்கு வந்துட்டா. உழைக்க சளைக்காதவ.
என் மகனும் இப்படித்தான்.
ஆனா குழந்தைய அவங்க தொல்லையாகவும் அவங்க முன்னேற்றத்தயும் ஓய்வு நேரத்தயும் பாழ்படுத்தற மாதிரியும் எரிச்சல் பட்டாங்க.

ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தராவது குடும்பத்த அறிவால பாக்ககூடாது அன்பால பாக்கனும்னு புரிஞ்சிக்கல.அவங்களுக்கு  யாராலயும பேசி  புரிய வைக்க முடியல.
ஏன்னா இதுவரைக்கும்   அவங்களோட ஒவ்வொரு முடிவும் சிறந்ததுனு பாராட்டப்பட்டிருக்கு.சிறந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கு. 
அதனால அவங்க மனசு ஒவ்வொரு செயலுக்கும்  நல்லவிதமான  அங்கீகாரம்எதிர்பார்த்து பழகிடித்து போலிருக்கு.
 
குடும்பம்ங்கர்து  எந்த எதிர்பார்ப்பும் எந்த அங்கீகாரத்தயும் எதிர்பார்க்காம     ஒவ்வொருத்தரும் தன்னோட அன்பை அக்கறையை பகிர்ந்துக்கற இடம்னு   புத்திசாலியான அவங்களுக்கு  நல்லாவே தெரியிது .ஆனா ்அப்படி இருக்க   முடியல.அலுத்துப் போகுது. அதனால மாத்தி மாத்தி குத்தம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.இதுலயும் கூட ரெண்டு பேருக்கும் பொருத்தமா தான்இருந்தது.

இவங்க ரெண்டு பேரும்  கருத்தொருமித்து வாழ்ந்தா. குழந்தய மிக அருமையா  வளக்க முடியும்னு  நினைச்சேன்.பெண்ணோட பெற்றோருக்கும் பேத்திய நினைச்சி கவல தான்.நான் என் மகனையும் சேத்துதான் திருத்தப்பாக்கறேனு புரிஞ்சிக்கிட்டாங்க.அதனால   அவங்க தலையிடல.

ஒருத்தர மேல ஒருத்தருக்கு மதிப்பு வரணும்.அது அவங்களோட குழந்தனு எண்ணம் வரணும். பேபி சிட்டர் போடர்தகூட  அவங்க இரண்டு பேரும் முழுமனசா  முடிவெடுக்கனும்.இது எல்லாம் நடக்கனும்னா அவங்களுக்கு   ஒரு   “ பொதுவான எதிரி” வந்தா ஒருவேளை சரியாகுமோனு தோணித்து. 
அந்த பொதுவான எதிரியா , நானே  மாறினேன்.இது ரிஸ்க்ன்னு தெரியும்.  பாப்போம். ” அவள் சொன்னதும என் கண்கள் கலங்கிவிட்டன.

“ஒண்ணு சொலறேன்னு தப்பா நினைக்காதே.இவ்ளோ படிச்சவங்களுக்கு தன்ன புரிஞ்சி மாத்திக்கத் தெரியாதா” என்றேன்.

“நல்லா படிச்சவங்களுக்கும்  கூட தன்னோட   சொந்த கேசுக்கு அது நியாயமா இருந்தாலும்  வாதாடவோ  எடுத்து சொல்லவோ சட்டம் தெரிஞ்ச அனுபவம் வாய்ந்த
ஒரு வக்கீல் தேவைப் படற மாதிரி தான் இதுவும்னு நான் நினைச்சேன்.அவங்களோட ப்ரச்னைலேந்து வெளில கொண்டுவர
அனுபவம் வாய்ந்த  என்னைவிட அக்கறையான வக்கீல் யாராயிருக்க முடியும்?
அவங்க அப்படியே ரொம்ப நாள் வாழ முடியாது.வெறுத்துப் போய் பிரிவாங்க.
நாம ஒரு முயற்சி செய்து பாத்துடுவோமேனு நினைச்சேன்.”

“அடக்கடவுளே. நீ எவ்வளவு நாளா இங்க இருக்க.இப்போ அவங்க எப்படி இருக்காங்க” என்றேன்.

“ஒரு  வாரமாதான் இங்க இருக்கேன்.இப்போ அவங்க ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்காங்க.குழந்தைக்கு பேபி சிட்டர் போட்டாச்சாம்.
என் பையன் மனசு கேக்காம  தினமும் வந்து என்ன பாத்துக்கிட்டுதான் இருக்கான்.அந்த வித்த்தில எனக்கு சந்தோஷம் தான்” அவள் அழகாக சிரித்தாள்.

“உண்மைய உன் பையன்கிட்ட சொல்லிடு.” என்றேன்.

“உண்மை தெரிஞ்சா  என் பையனஎன்ன ஒரு  நாடக்க்காரினு நினைப்பான்.

நம்பிக்கை போய்டும்.அதைவிட   கோவக்காரியா என்ன அவன் நினைக்கர்தே மேல்.. ” என்றாள்.


“இப்படிப்பட்ட மாமியார் கிடைக்க அவ புண்ணியம் செஞ்சிருக்கனும்.” என்றேன்.

அந்த நேரத்தில்

அவளுடைய போன் அடித்தது.மகன் என்று சைகை செய்தாள்.

“சொல்லுடா.சரி  சரி குடு ” என்றாள் பிறகு  குரலில் அலட்சியம் காட்டி  ஓரிரு வார்த்தைகளில பட்டும் படாமலும்  பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.போன் பேசி முடித்ததும் என்னிடம் வந்ந்தாள்.


“அடுத்தவாரம் குழந்தைக்கு பிறந்த நாளாம். எங்க கூடவே வந்திடுங்கனு  என் மருமகளே சொல்றா. 

இனிமே எனக்கு இங்க என்ன வேல. ென் கோவத்த சரியா புரிஞ்சிகிட்ட புத்திசாலி மருமக  கிடைக்க நான் தான் புண்ணியம் செஞ்சிருக்கனும்.இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க இங்க வந்திடுவங் க. இனி   நல்ல மாமியாரா  நான் நடந்துக்கனும்” என்றாள்  அவள்  மிகுந்த  உற்சாகத்தோடு.


“இவளோ பாசத்த வச்சின்டு இங்க  எப்படி இருந்த.“ என்றேன் 


கண்களில் வழிந்த கண்ணீரை மறைக்க அண்ணாந்து பார்த்து சிரித்தாள். தான்படும் சிரமத்தில் தன்  குழந்தையின் நலன் ஒளிந்திருக்கிறது என்ற எண்ணம் தான் எல்லா  பெற்றோருக்கும் எப்படிப்பட்ட  வலிகளையும்  தாங்கும் மனவலிமையை  அளிக்கிறது.


No comments:

Post a Comment