Tuesday, July 19, 2022

பொதுவான எதிரி ரெடி

   பொதுவான எதிரி

  நான் வந்த ஆட்டோ    எங்களுடைய  பத்மாவதி சீ வ்யூ” அபார்ட்மென்ட் பக்கத்தில் வந்ததும் எ்ன்ட்ரான்ஸ் கேட்டுக்கு             வெளியே  வலது பக்கமாக  காலியாக இருந்த வாட்ச்மேன் சாரைத்  இடித்து விடாமல் கோணாலக திரும்பி  அயர்ன் கடைசி வாசலில் நின்றது.  நான்ஆட்டோவில் காலடியில் வைத்திருந்த காய்கறிப் பைகளை எடுத்து  கேட்டுக்கு உள்ளே சிமென்ட் தரையில் வைத்துவிட்டு மீண்டும் ஆட்டோவிற்கு திரும்பி  வரவும் ,எங்கள் அபார்ட்மென்டிற்குள் ஒரு கார் வேகமாக நுழையவும் சரியாக இருந்தது. தோளில் தொங்கிக் கொண்டிருந்த   இருந்த  ஹேன்ட் பேகிலிருந்து காசு எடுக்கும் சாக்கில் ஓரக் கண்ணால் கேட்டுக்கு உள்ளே கார்பார்க்கிங்ல் காரை நிறுத்திவிட்டு   கைகளில் சூட்கேஸ்களுடன்  இறங்கிய மிதிலாவைப் பார்த்ததும் மனம் பரபரத்தது.


   அதுவரை  ஆட்டோவிலிருந்து இறங்கி முன்பக்க டயரின் காற்றை சரிபார்த்து க் கொண்டிருந்த டிரைவரிடம்

பர்சிலிருந்து ஏற்கனவே பேசிய பணத்தை அவசரமாக எண்ணிக்  கொடுத்துவிட்டு,

மிதிலாவை விசாரிக்கும் ஆவலுடன் ஓடோடி வருவதற்குள்  அவள்  மாடிப்  படிக்கட்டுகளில் ஏறி  ப்போய்விட்டாள்.  


முதல் மாடியில்என் பக்கத்து ப்லாட்டில்தான் அவள் தன் பெற்றொருடன் வசிக்கிறாள்.காய்கறி  பைகளுடன் என்னால்  படியேற முடியாது என்பதால் லிப்டுக்கு காத்திருக்க வேண்டியதாக போய்விட்டது. அவள் என்னை கவனித்திருந்தால் நிச்சயமாக விசாரிக்காமல் போகமாட்டாள்.  எங்கள் அபார்ட்மென்டில்… எங்கள் வீட்டிற்கு  இடது பக்கத்தில் மாடிப்படியும் அதற்கு அடுத்து கார்னரில்  லிப்டும் இருக்கும்.


அதைத் தாண்டி வீடுகள் இல்லை.எதிர்பக்கமும் வீடுகள் இல்லை.ஒரு ப்லோருக்கு லைனாக ஐந்து வீடுகள்.

என் வலது பக்கத்து வீடுகளுக்கு யார் போனாலும் வந்தாலும் எங்கள் வீட்டைத் தாண்டித்தான் போகவேண்டும்.

பகலில் வீட்டிலிருக்கும போது பெரும்பாலும் கிரில் கேட்டை பூட்டிவிட்டு மரக்கதவை திறந்து வைத்திருப்பேன்.


எங்கள்  அபார்ட்மென்டில் எல்லா வீடுகளும் ஒரே மாதிரிதான். வீட்டிற்குள், நுழைவு வாயில் வழியாக  உள்ளே இடது பக்கம் குளியல் மற்றும் கழிப்பறைகள்.அதை அடுத்து சமையலறை வலது பக்கத்தில் குளியலறை மற்றும் கழிப்பறைக்கு எதிராக ஒரு பெட்ரூமும் சமையலறைக்கு எதிராக ஒரு பெரிய பெட்ரூமும் இருக்கும்.அப்படியே நேராக வந்தால் எல்லாவற்றையும் இணைப்பது போல   கொஞ்சம் பெரிய  ஹால் இருக்கும். இங்குதான் நான் அதிகம் புழங்குவேன்.இங்கு சமையலறையை ஒட்டி  பூஜை அலமாரி கொஞ்சம் தள்ளி  டைனிங் டேபிள்    சோபா  டீவி  எல்லாம் இருக்கும். சோபாவி்ல் அமர்ந்தால் டீவியும் பார்க்கலாம் வாசலையும் ஒரு நோட்டம் விடலாம்.

ஹாலுக்கு பின்பக்கம் ஹால் அளவிற்கு நீளமான  பால்கனி. அங்கு எனக்கு பிடித்த செடிகள்.மற்றும் துணிஉலர்த்த கொடிகட்டியிருப்பேன்.


ஒரு வழியாக   லிப்டில்  என் வீட்டு வாசலுக்கு வந்தபோது அவள் வீடு கதவு சாத்தியிருந்தது.

பைகளிலிருந்த காய்கறிகளை பிரிட்ஜில் அடுக்க வேண்டுமே. அதனால்சரி பிறகு அவளை விசாரிக்கலாம் என்று என் காரியாத்தைப் பார்க்க போய்விட்டேன.


இரண்டு நாட்கள்  கழித்து, மாலையில் காய்ந்த துணிகளை எடுக்க பால்கனிக்கு  வந்தபோது,மிதிலாவின் குரல் கேட்டது.ஓ இன்னும் இங்குதான் இருக்காளா? என்று நினைத்தேன்.


“ ராம் உங்களோட பேர்ல  எந்த  தப்பும் இல்ல. இதுவும்  உங்க வீடுதான்எப்ப வேணாலும் வரலாம். நோ கில்டி பீலிங்ஸ்.

உங்க அன்பு எனக்கு இப்போதான் நல்லா  புரியர்து .லவ் யூ சோ மச்”.என்று சற்று எமோஷனல் ஆகிபோனில்   பேசிக் கொண்டிருந்தாள் மிதிலா. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கல்யாணமாகி மூணு வருஷமாச்சு இப்பதான் கணவன் மனசு புரியதாமே.என்ன ஆச்சு இவளுக்கு? எதாவது பரச்னையா?


நல்ல பொண்ணாச்சே.நல்ல படிப்பு.வேலயும் கிடைச்சிது.அப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணு.

ரொம்ப புத்திசாலி.இவதான் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த வீட்டை வாங்கி கிராமத்துல இருந்த     அப்பா அம்மாவ அழைச்சிட்டு வந்து  இங்கயே குடிவெச்சா.மரியாதை தெரிஞ்ச பொண்ணு.ஒரு குறைகூட சொல்லவே முடியாதே்.இந்த அபார்ட்மென்டே இவள பாத்து ஆச்சர்யப்படுமே.


ராம்  ஒரே பையன. தங்கமான பையன். நல்ல படிப்பு.நல்ல உத்தியோகம். ராமோட   அம்மா இந்திரா என்னோட காலேஜ் மேட். உயிர்ததோழி. மிதிலாவுக்கு  ஏத்த சரியான ஜோடி ராம் தான். அம்மா தான் அவன் உலகம்.  பக்கத்து தெருவில் தான் அவங்க அபார்ட்மென்ட் இருக்கு.பெரியவங்க பாத்து நிச்சயம் பண்ண திருமணம்.

ராமுக்கு மிதிலா அமைஞ்சது. மிக நல்ல பொருத்தம். கோடில ஒரு ஜோடி னு  கல்யாணத்துல எல்லாரும்    வாய பொளந்துன்டு நின்னோம்..


 நான்யோ சித்துக கொண்டே வாசல் கதவை திறந்து வைத்துக் கொண்டு  சோபாவில்  உட்கார்ந்து  துணிகளை மடித்து அலமாரியில்  வைத்துவிட்டு திரும்புவதற்குமள்  ராம் பக்கத்து வீட்டிற்கு போவது நன்றாகத் தெரிந்தது.


கொஞ்ச நேரம் கழித்து இருவரும் வெளியே போவதும் மிதிலாவின் அப்பா வாசல்வரை வந்து வழியனுப்புவதும் தெரிந்தது.


என் வீட்டில் அடுப்பிலிருந்த பால் பொங்கி வழிந்திவிட்டதால் டென்ஷனில்  பக்கத்து வீட்டை மறந்தே போய்விட்டேன்.


மறுநாளும் ராம் வருவதும் மிதிலா வெளியே கிளம்புவதும் தெரிந்தது.

அப்படின்னா மிதிலா இங்கதான் இருக்காளா ராம் வீடல இல்லயா?

அப்படின்னா மிதிலாவுக்கும் இந்திராவுக்கும் ப்ரச்னையா என்ன?


மனதில்  எண்ணங்கள் ஓடினாலும் நாகரீகம் கருதி அமைதியாக இருந்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து  காலையில்  பால்கனியில் செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தேன்.


“ வேற வழி இல்ல ராம்.பெரியவங்கள நம்மால என்ன பண்ண முடியும் சொல்லுங்க? நீங்க தப்பா நினைக்கலனா நீங்க  வேணா இங்கயே வந்திடுங்களேன் pls.”


மிதிலாவின் வார்த்தைகள் திக்கென்றது.அப்போ மாமியருக்கும் மருமகளுக்கும் ஒத்துப் போகல.


ராம் பாவம் பொண்டாட்டிய்யும் விட முடியாம அம்மாவயும் விட முடியாம போராடறான்.


அடப்பாவமே.இந்திரா உன் பிள்ளையோட கஷ்டம் உனக்கு புரியலயா? மிதிலா மாதிரி மருமக யாருக்கு கிடைப்பா.இந்திராவை நினைத்து கோவம் வந்தாலும்.இரண்டு நாட்களில்  என் கணவரின் நண்பர்கள் வீட்டிற்கு வரவிருந்ததால் வீட்டை தூய்மைப் படுத்த முனைந்துவிட்டேன.


அந்த வாரம்  பக்கத்து விட்டு ப்ரசனை மறந்தே போய்விட்டது.


ஒரு  நாள் காலை துணி உலர்த்தி கொண்டிருந்த போது

“பரவால்ல ராம் உங்கம்மா அளவுக்கு நான் மோசமானவ இல்ல.உங்கம்மாகிட்டேந்து உங்கள பிரிக்க மாட்டேன்.நாம்ப பிரிஞ்சிடலாம்.” அழுது கொண்டே மிதிலா சொன்னதும் நெஞ்சே வெடிக்கும் போல இருந்தது.” மிதிலாவின் குரல் உடைந்து போயிருந்தது.


டைவர்ஸ் பண்ணப் போறாங்களா. என்ன ஆச்சு நேர்ல போய் இந்திராவ பாத்து நாக்கை பிடுங்கறா மாதிரி கேக்கனும்.உனக்கெல்லாம் மிதிலா கிடைச்சா பாரு.அவங்கள வாழ விடலயே நீ.ஆத்திரமாக வந்தது.


காய்கறிகள் தீர்ந்துவிட்டன.மார்க்கெட் போக வேண்டும் என்று நினைவு வந்ததும் பர்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.ஆட்டோவில் போகும்போது இந்திராவைப் பற்றியே சிந்தனை ஓடியது.


கல்லூரியிலிருந்தே நாங்கள் உயிர் த்தோழிகள்.

அவள் பிள்ளை ராமின் திருமணத்திற்கும்நான் போயிருந்தேன்.

அவன் மரியாதைதெரிந்த அன்பான பையனாச்சே.

இந்திரா வைப் பற்றி யோசித்தேன்.

இந்திரா ,இரண்டு நாத்தனார் இரண்டு ஓர்படிகள் என்று கூட்டுக் குடும்பத்தில் இருந்தவள்.காலையில் ஐந்து மணிக்கு எழுந்தால் இரவு பதினோருமணி வரைக்கூட    சிரித்த முகத்துடன் சலிக்காமல் வேலை செய்வாளே.

தனக்கு ஒரு குழந்தை தான் என்றாலும் நாத்தனார் குழந்தைகளையெல்லாம் இழுத்து   வைத்து சீராடிக்கொண்டிருப்பாளே. இவளுக்கா இப்படி ஒரு புத்தி.பிள்ளைகள் திருமணத்திற்கு பிறகு மாறி விடுகிறார்கள் என்கிறார்கள்.ஆனால் இந்திரா இப்படி மாறிவிட்டாளே .குழந்தை இல்லாத என் நிலையே மேல் போலிருக்கிறது.


மனதில் அடுக்கடுக்காக  சந்தேகங்கள் தோன்றி அதற்கான பதில் தெரிவதற்கு முன்பாகவே ஆத்திரத்தையும் கோபத்தையும் கிளப்பிவிட்டன.


மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்தேன்.

லிபடில்  என்ன ஆச்சர்யம்  ராம் பெட்டி படுக்கையுடன் இருந்தான்.என்னைப் பார்தத்தும் தர்மசங்கடமாக நெளிந்தான்.


அவன் எடுத்த முடிவு சரியென்று எனக்கு தோன்றியதால் அவனை இயல்பான புன்னகையோடு

“ராம் நன்னார்க்கியா? ஆத்துக்கு மிதிலாவையும் அழைச்சின்டு வா.”என்று சொல்லிவிட்டு இந்திராவை பற்றி விசாரிக்காமல் லிப்டிலிருந்து வெளியேவந்து என் வீட்டிற்குள்போய்விட்டேன்.வெரி குட் என்று மனதில் ராமை பாராட்டினேன்.


அடுத்தடுத்த  வாரங்களில் இருவரும்  இங்கிருந்தே அலுவலகம் போவதும் மாலையில்தி ரும்பி

இங்கயே வருவதும் தெரிந்தது.திருப்தியாக இருந்தது.


நானும் என் கணவரும் அவருடைய நண்பரின் மகனின் திருமண்த்திற்காக

   டெல்லிக்குப் போய்விட்டு இரண்டு வாரங்கள்  சுற்றிப் பார்ததுவிட்டு வீட்டிற்கு வந்தபோது அவர்கள் வீட்டு வாசலில் நின்றிருந்த மிதிலா  

மிதிலா எங்களை  பார்த்து சிரித்தாள்.

என் கணவர் “ஹலோ மிதிலா ஹவ் ஆர் யூ” என்றார். “வெரி பைன் அங்கிள்”என்றாள் உற்சாகத்துடன்.சிரித்துக் கொண்டே என் கணவர் வீட்டுக்    கதவை திறந்து கொண்டு உள்ளே போய்விட்டார்.

பின்னால் நின்ற நான்

“மிதிலா நன்னார்க்கியாம்மா “ என்று ஏதோ அப்பதான் பாக்கற மாதிரி விசாரித்தேன்.

“நன்னார்க்கேன் மாமி குட் நியூஸ்  மாமி “ என்று தன் வயிற்றை தொட்டு காட்டினாள்.முகத்தில் சந்தோஷம் தெரிந்தது.

“கங்கிராஜிலேஷன்ஸ் .உடம்ப பத்திரமா பாத்துக்கோ “ என்றேன்.

ஆனால் எதோ சொல்ல நினைத்தது போல் தயங்கினாள் பிறகு எதுவும் சொல்லாமல் 

“தேங்க்ஸ் மாமி.  வரேன் மாமி “ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.


அன்று  மதியம்   என் கணவர் ஆபிஸ் விஷயமாக அவசரமாக  இரண்டுநாள் டூர் போய்விட்டார்.

  எனக்கு பெரிய வேலை எதுவும் இல்லை.இந்திரா வீட்டிற்கு கிளம்பிவிட்டேன்.அவளது அபார்ட்மனட் கொஞ்சம் பெரியது.

பெல் அடித்தேன்.

கதவு திறக்கப்படவில்லை.கம்பி போட்ட ஜன்னல் வழியாக யாரென்று பார்த்தாள் இந்திரா.


“இந்திரா…” என்றேன் என் குரல் கேட்டதும்என்னை அடையாளம் கண்டுபிடித்துவிட்டு கதவை திறந்து கொண்டு 

ஓடி வந்தாள்.

புவனேஷ்வரிநீ நீயா…உன்ன எதிர்பார்க்கவே இல்லயே… இன்ப அதிர்ச்சி. இது கனவா இல்ல நிஜமா ” என்று என்னை அணைத்துக் கொண்டாள்.

 

“ முதல்ல காபி சாப்பிடு “ என்று   நான் சொல்ல சொல்ல கேட்காமல் பில்டர் காபி கலக்க உள்ளே போனாள்.நான் யாரோ மாதிரி சோபாவிலேயே உட்கார்ந்து கொண்டேன்.


பல முறை இங்கு வந்திருக்கிறேன்.சுற்றிப் பார்த்தேன்.வாசல்படிக்கு மேல் உள்பக்கம் பார்த்து பச்சைப்புடவை உடுத்திய மகாலஷ்மி போட்டோவில் அருள்பாலித்துக் கொண்டிருந்தாள்.

ஹால் சுவரில் வாசலைப் பார்த்தபடி  ராம் மிதிலா இருவரும் கழுத்தில் மாலைகளுடன் கல்யாணத்தில் எடுத்த போட்டோ சற்று பெரிய சைசில் மாட்டப்பட்டிருந்தது.ஹால் தூய்மையாக  இருந்தது.பழைய சோபாக்கள் கூட நேற்றுதான் வாங்கினது போல   பளிச்சென்று  இருந்தது. ஒரு அலமாரியில் ராம் வாங்கி பதக்கங்கள் மெடல்கள் வெற்றிக் கோப்பைகள் எல்லாம் அழகாக வைக்கப்பட்டிருந்தன.மற்றோரு அலமாரியில் குடும்பபுகைப்படங்கள்.ராம் மிதிலா ஹனிமூன் புகைப்படங்கள் எல்லாம் இருந்தன.

இவ மனச தவிர இந்த வீட்டுல எல்லாத்தயும் சுத்தமா தான் வெச்சிருக்கா என்று நினைத்தேன்.வேல செய்யறதுல இவள ஜெயிக்கவே முடியாது. வேல செஞ்சு செஞ்சு மனசும் மெஷின் மாதிரி ஆயிடுத்து போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.கிச்சனிலிருந்து கமகமவென்று வாசனை வந்தது.


சுடச்சுட ப்லேட்டில் பகோடாவும் பில்டர் காபியும் கொண்டுவந்து வைத்தாள். சாப்பிடச் சொன்னாள்.

வேண்டா வெறுப்பாக காபியை குடித்தேன்.எண்ணெய் பண்டம் சாப்பிடுவதில்லை என்று சொல்லிவிட்டேன். அவள் முகம் வாடியது. ஆனால் அது எனக்கு சந்தோஷமாக இருந்தது.


“அப்புறம எப்படி இருக்க. உன் மகன் மருமக எல்லாரும் எப்படி இருக்காங்க” என்றேன் என் குரல் சற்று கடுமையாக இருந்தது எனக்கே தெரிந்தது.


அவள் முதலில் சிரித்தாள்பிறகு  நிதானமாக பேசினாள்.

நான் சிரிக்கவில்லை அவள் என்னை ஏமாற்ற என்ன கதை சொல்லப்போகிறாள் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன்.


“ராம் கல்யாணத்துக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே அவங்க அஅப்பா இறந்துட்டார்.” என்றாள்.


“நான் தான்வந்திருந்தேனே.அவரோட காரியம் முடிஞ்சதுமே சொத்து பிரிஞ்சிது.உங்க கூட்டு குடும்பம் ஆளுக்கொரு பக்கம் போயாச்சு.ராமுக்கு அவனை மாதிரியே நன்னா படிச்சு வேலைக்கு போற பெண்ணாகப் பார்த்து நீ கல்யாணம்  பண்ணி வெச்ச வரைக்கும்எனக்கு தெரியுமே. மேற்கொண்டு சொல்லு” என்றேன் அவசரமாக.


ஆனால் அவள் பதட்டப் படாமல் நிதானமாக என் கண்களைப் பார்த்துப் பேசினாள்.

“ராமுக்கும் அவனோட வைய்ப்  மிதிலாக்கும் ஒத்துப் போகல்ல. கலயாணம் ஆனதுலேந்து ஒரே சண்ட.கீரியும் பாம்பும் தான். எனக்கு ஒரே தல வேதனையா போச்சு.” என்று இந்திரா ஆரம்பித்ததும்


“கூட்டு குடித்தனத்தில இதவிடபெரிய   பெரிய ப்ரசனைலாம் சமாளிச்சவ நீ. கொஞ்ச நாள் அவள அம்மா வீட்டுக்கு அனுப்பிட வேண்டியதுதான?” என்று கேட்டேன்.


சிரித்துவிட்டு தொடர்ந்து பேசினாள்.


“ பொறுத்துப் பார்த்தேன்.வருஷங்கள் ஓடினாலும் அவங்களுக்குள்ள ஒட்டுதல் இல்ல. 

ஒரு கட்டத்துக்கு மேல என்னால முடியல.  அவங்கள பக்கத்துல இருந்து பாத்ததுல சில விஷயங்கள் புரிஞ்சிது.  அதனால  மனச கல்லாக்கிக்ண்டேன்.

என் திட்டப்படியே.   நான் சின்னசின்ன விஷயங்களை பெரிசுபடுத்தி மிதிலாகிட்ட முகத்தை சுளிச்சி என் அதிருப்திய காமிச்சேன் .

என் பையனையும்  விட்டுடல எதாவது ஒரு தப்பை கண்டுபிடிச்சேன்.ஏன் புதுசா தப்புகளை நானே  உருவாக்கி குறை சொன்னேன்.

அவங்களுக்கு ஒண்ணுமே புரியல.நான் எதிர்பார்த்த மாதிரி வித்தியாசம் ராம் கிட்ட தெரிஞ்சிது. என்னால  ராமுக்கு தர்மசங்கடம்.அதை சமாளிக்கர்துக்காக  அவளுக்கு பிடிச்சமாதிரி பொருள்கள் வாங்கிட்டு வந்தான்.

எங்கிட்ட  என்னவானாலும் சண்ட போடு பரவால்ல அவள திட்டாதன்னு கூட சொன்னான்.”   என்று நிறுத்தினாள்.

“அப்புறம்” என்றேன் ஆர்வமாகி

“இது என்னுடைய சுபாவம் இல்லனு அங்களுக்கு நல்லாவே தெரியும். அதனால, என்னை அவங்க டாகடர்கிட்ட கூட்டிட்டு போனாங்க.மருந்தெல்லாம் கூட வாங்கிக் குடுத்தாங்க.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

பிறகு அவளே தொடர்நதாள்.

ஆனா நான் தொடர்ந்து  மாசகணக்கில என்னை மாத்திக்காம  அப்படியே இருந்தேன்.

சகிக்க முடியாம அவ அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டா.” என்று நிறுத்தினாள்.


இப்போது எனக்கு கோபம் வந்தது.

“என்ன இப்படி பண்ணிட்ட.எதோ கொஞ்சம் மிரட்டிட்டு விட்டிருக்கலாம்.

உன்னோட திட்டம் சரியில்லயே. ஆமாம் உன்னோட திட்டம் தான் என்ன?”ஆதங்கத்துடன் கேட்டேன்.


“முழுக்கக் கேளு” என்றாள்.


“இன்னும் என்ன கேக்கர்துக்கு இருக்கு.  அனுபவப்பட்டவ  பண்ற வேலயா பண்ணிர்க்க நீ”

என்றேன் கோபத்துடன் 


அவள்பே சினாள்.

“மருமக போனதும் இவன் கெஞ்சி போன் பண்ணான். “ என்றாள்.


இந்திரா இப்படி   சொன்னதும்   அன்று மிதிலா போனில் பேசிய   வார்ததைகள் ஞாபகம் வந்தன.


இப்பதான் உங்கள புரிஞ்சிகிட்டேன்னு சொன்னாளே.ஒருவேளை இந்திரா சொல்றது உண்மையா இருக்குமோ என்று தோன்றியது.இந்திரா பேசுவதை கவனிக்க ஆரம்பித்தேன்.


இந்திரா நிதானமாக பேசினாள்.


“அவளோட வீட்டுக்குப்  போய் கூப்பிட்டான்.

அவ வரல. உங்கம்மா மன்னிப்பு கேக்கனும்னு சொன்னாளாம்.

ஒரே ஒரு  தடவ சாரி சொல்லிடும்மா.நீ பண்ணதும் தப்பும்மானு சொன்னான்.

நான் மன்னிப்பு கேட்க மாட்டேனு சொன்னேன்.”

என்றாள் இந்திரா.


“நீ பண்ணது தப்புதானே? மருமகளுக்கு தொல்லை குடுத்திருக்கியே. உறவுக்காரங்கள வச்சி பேசித் தீத்திருக்கலாமே.” என்றேன்.


அவள்தொடர்ந்தாள்.


“என் பிடிவாத குணம் , அவ மேல இருந்த இரக்கம்.அப்புறம் அவனோட தனிமை எல்லாம் சேர்ந்து அவ மேல அன்பா மாறிடுச்சு ராமுக்கு. ஆனா மிதிலா அவனோட அன்புக்கும் மசியல. உங்கம்மா இருக்கிற வரைக்கும் அங்க வர மாட்டேன்னு சொன்னா.என் பையன அவளோட வீட்டோட வரச் சொன்னா.

அவனோ அங்க  போகப் பிடிக்காம  மனசு முழுக்க  கோபத்தோட என் கூட பேசாமயேஇருந்தான். நான் என் போக்கை மாத்திக்கல.அதனால,என் பையன்

அவங்க வீட்டுக்கு போய்  அவ கூட சினிமா பீச்னு சுத்தினான்.நானும் மன்னிப்பு கேக்கல.அவளும் வரல. என் மகன் பொறுமையிழந்து என்கிட்ட சண்டை போட்டான். அவன் வாழ்க்கைய என்னோட ஈகோவால அழிக்கிறேன்னு சொன்னான்.”. என்று அவள் சொன்னதும்.

“உண்மை தானே” என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்தேன்.அவள் தொடர்ந்தாள்.

இந்திரா தொடர்ந்து பேசினாள்

“உங்கம்மா நல்லவங்கனு நினைச்சேன் அவங்க நல்லவங்க மாதிரி நடிச்சிருக்காங்க. 

அம்மா பாசத்துல  நீங்களும்முடிவெடுக்க முடியல.உங்கம்மா அளவுக்கு நான் மோசமானவ இல்ல. உங்கம்மாவுக்கு உங்கள விட்டா வேற யாரும் துணையில்ல.அதனால உங்கள உங்கம்மாகிட்டேர்நது பிரிக்க விரும்பல. இப்படியே நம்ப வாழக்கைய தொடர முடியாது. நாம்ப பிரிஞ்சிடலாம்னு சொல்லிட்டா.என் பையன் கதறி அழுதான். “ என்றாள்..

ஒ இந்த வார்த்தைகளையும் மிதிலா பேசும்போது நான் கேட்டேனே  என்று நினைத்தேன் ஆனால் இந்திராவிடம் சொல்லவில்லை.

இந்திரா பேசுவதை உற்று கவனித்தேன். இந்திரா சொன்னாள்..

“ நான் என் பையன்கிட்ட சொன்னேன்,   இதுக்கெல்லாம்  நான் கவலப் படல.மிதிலா உனக்கு செட்டாக மாட்டா.வேற நல்ல பொண்ணா நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேன்னு சொன்னேன.” 

என்று இந்திரா சொன்னதும் எனக்கு   முதுகுத் தண்டு சில்லிட்டது.சரியான கொடுமக்காரிதான்.

மிதிலா சொல்ற மாதிரி நல்லவ மாதிரி  இவ்ளோ நாளா நடிச்சிருக்கா இல்லனா இவ்வளவு பெரிய வார்த்தைகள்   

எப்படி வரும்  என்று எனக்கே  கோபம் வந்தது.


“ அம்மா,   உன் மேல இருந்த கண்மூடித்தனமான பாசத்துல அவள மதிக்காம இருந்துட்டனேனு அழுதான். 

நான் அவன் அழுகய  சட்டையே பண்ணல.அவனுக்கு என்ன தோணித்தோ என்னவோ வருத்தமா பெட்டிய எடுத்துக்கிட்டு கிளம்பி அவ வீட்டுக்கே போயிட்டான்..” என்று முடித்துவிட்டு சம்மந்தமே இல்லாமல் சிரித்தாள்.


இந்திரா பொய் சொல்லவில்லை  என்று எனக்கு புரிந்துவிட்டது்


“உன்னோட திட்டம் தான் என்ன? ஏன் மிதிலாவோட அப்பா அம்மா யாரும் இதுல தலையிடலயா? “ என்று  அக்கேகறையோடு கேட்டேன்.


 அவள் சிரித்து விட்டு சொன்னாள்.

“நான் போட்ட திட்டம் மற்றும் என் எதிர்பார்ப்பு எல்லாமே அவங்க தங்களோட ஈகோவை விடனும் அவ்வளவுதான. நான் என்னோட பையன் கூட  சேர்ந்து  வாழர்தவிட. 

அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒத்துமையா  வாழர்த கண்ணால  பாக்கனும்னு ஆசைப்பட்டேன்.

ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தராவது குடும்பத்த அறிவால பாக்ககூடாது அன்பால பாக்கனும்னு புரிஞ்சிக்கனும்.   அவங்களுக்குவேற  யாராலயும பேசி  புரிய வைக்கர்து  கஷ்டம்.
ஏன்னா இதுவரைக்கும்   அவங்களோட ஒவ்வொரு முடிவும் சிறந்ததுனு பாராட்டப்பட்டிருக்கு.அவங்க திறமைக்கு சிறந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கு. அதனால தன்னோட முடிவு எப்பவுமே சிறந்ததுனு நினைக்கறவங்க.
இதுவே அவங்க சுபாவமே இருக்கு.ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பதால ஒருவேளை
அவங்களுக்கு   ஒரு   “ பொதுவான எதிரி”  வந்தா ஒருத்தர ஒருத்தர் விட்டுக் கொடுக்காம ஒண்ணு சேருவாங்களோனு  எனக்கு ஒரு நப்பாசை . அத  டெஸ்ட் பண்ணி பாக்க நானே பொதுவான எதிரியா மாறினேன்.
இது சும்மா எத்த தின்னா பித்தம் தெளியும்னு அலைஞ்சின்டிருந்த என்  மனசுல வந்த குருட்டு  யோசனை தான்.
ஆண்டவன் மேல பாரத்தை போட்டுவிட்டு  ஆரம்பிச்சேன்  . இது ரிஸ்க்ன்னு  நல்லாவே தெரியும்.  
இப்போ அவங்க ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்காங்க.என் பையனும்  மனசு கேக்காம  தினமும் வந்து என்ன பாத்துக்கிட்டுதான் இருக்கான்.அதுக்கு மிதிலாவும் மறுப்பு சொல்றதில்ல.
பெண்ணோட பெற்றோரும் நான் என் மகனையும் சேத்துதான் திருத்தப்பாக்கறேனு புரிஞ்சிக்கிட்டாங்கனு  நினைக்கறேன்.    அதனால அவங்க தலையிடல. ”
என்று சொல்லிவிட்டு  அமைதியானாள்.


“இப்படிப்பட்ட மாமியார் கிடைக்க மிதிலா புண்ணியம் செஞ்சிருக்கனும்.” என்றேன் நான்.

அந்த நேரத்தில்அவளுடைய போன் அடித்தது.மகன் என்று சைகை செய்தாள் இந்திரா.


“சொல்லுடா.சரி  சரி குடு ” என்றாள் எதுவும் பேசாமல் கேட்டுக்  கொண்டிருந்தாள்.போனை 

வைப்பதற்கு முன் “அதனாலென்ன பண்ணிட்டாப் போச்சு” என்றாள் மகிழ்ச்சியுடன்.பிறகு

போனை வைத்துவிட்டு என்னிடம் வந்ந்தாள்.


“ மிதிலா தான் பேசினா முழுகாம இருக்காளாம்.   எல்லாரும் ஒண்ணா ஒத்துமையா பழையபடி இருக்கனும்னு ஆசைப்படர்தா சொல்றா.என் கோவத்த சரியா புரிஞ்சிகிட்ட புத்திசாலி பொண்ணு மருமகளா  கிடைக்க நான் தான் புண்ணியம் பண்ணிர்க்கனும். என் ஆசை நிறைவேறிடுத்து இனி இந்த வேஷம் எனக்குத் தேவையில்ல.இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க இங்க வந்திடுவங்க. என் மருமகளுக்கு பிடிச்ச சமையலா பண்ணனும்.

மனசு நிறைஞ்சிருக்கு எனக்கு .எல்லாம் நீ வந்த வேளைதான்” வேகமாக சமையலறைக்கு  ஓடிப் போய் சர்க்கரையை  எடுத்து வந்து என் வாயில் போட்டாள்.அவள் சொன்னதும் எனக்கு மனசாட்சி உறுத்தியது.இவளை வாழ்த்தவா வந்தேன் வைவதற்கு தானே வந்தேன். வாய்திறந்து உணமை பேச தைரியமில்லாமல் அவள் கைகளை   பிடித்துக் கொண்டு தவறாக அவளை நினைத்ததற்கு மனதார மன்னிப்புக கேட்டேன். 


“உண்மைய உன் பையன்கிட்ட சொல்லிடேன்.” என்றேன் ஆதரவான குரலில்.

“உண்மை தெரிஞ்சா  என் பையனே. என்னை  ஒரு  நாடக்க்காரினு நினைப்பான்.என் மேல வச்சிருக்க

நம்பிக்கை போய்டும்.அதைவிட   மனநிலை பாதிச்சவளா என்னை அவன்  நினைக்கர்தே மேல்.. ” என்றாள்.


“இவளோ பாசத்த வச்சின்டு  எப்படி உன்னால  நடிக்க முடிஞ்சிது .“ என்றேன் 


கண்களில் வழிந்த கண்ணீரை மறைக்க அண்ணாந்து பார்த்து சிரித்தாள். 

தான்படும் சிரமத்தில் தன்  குழந்தையின் நலன் ஒளிந்திருக்கிறது என்ற எண்ணம் தான் எல்லா  பொற்றோருக்கும் எப்படிப்பட்ட  வலிகளையும்  தாங்கும் மனவலிமையை  அளிக்கிறது.


No comments:

Post a Comment