Wednesday, September 14, 2022

அம்பிகையின் திருமஞ்சனம் Latest

 அம்பிகையின் திருமஞ்சனம் 


உலகை படைத்த அந்த பராசக்தி தன்னுடைய சிம்மவாகனத்தில்  கம்பீரமாக உட்கார்ந்திருந்தாள்

மகிடாசுரனேயும் பண்டாசுரன் முதலிய வர்களேயும் அழித்து விட்டு  பெருமிதமும் பொங்கும்  திருமுகத்தோடுஅமர்ந்திருந்தாள்



தேவர்களெல்லாம் அம்பாளின் திருவருள் இல்லா விட்டால் தாங்கள் இருந்த இடம் புல் முளைத்துப் போயிருக்கும் என்பதைநன்கு உணர்ந்திருந்ததால் 

 அம்பிகையை  பாராட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.


அன்னேயினுடைய அருட்பார்வை பெற்றுக் எமனையே ஜெயித்த  முனிவர்களெல்லாம் அம்பாளின்

 பெருங்கருணையை  எண்ணி மனம்  உருகிப் புளகாங்கிதம் அடைந்து ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.


பூலோகத்திலோ  லோகமாதாவின் மந்திரங்களை ஜபம் செய்தும் அவளுடைய  திருவுருவத்தைத் மனதில் தியானித்தும்ஶ்ரீசக்கர்தில் அம்பிகையை மேவச் செய்து பூசித்தும் அபிஷேக  ஆராதனைகள்  செய்தும் பக்தியுடன்  வழிபடுகிறார்கள்.


அன்னை பராசக்தியும்  தேவரும் முனிவரும் மனிதரும் இவ்வாறு தன்னை பாராட்டியும் போற்றியும் வழிபட்டு வருவதைக் கண்டுமனம் மகிழ்ந்திருக்கிறாள்.


இந்திரலோகத்தில் திடீரென்று தேவேந்திரனுக்கும் , ஒரு ஆசை வந்தது. 'அன்னை லோகமாதா ஜெதம்பாவிற்கு தேவர்கள்அனைவரும்  சேர்ந்து ஒரு பெரிய அபிஷேக ஆராதனையை நடத்தவேண்டும் என்ற விருப்பம் தான் அது.. 


அம்பிகையின் பெருமைக்கும் தம்முடைய உயர்ந்த பதவிக்கும் ஏற்றபடி அந்தப் .பூசை மிக மிகச் சிறப்பாக இருக்கவேண்டும்  நினைத்தான் தேவேந்திரன்.


அவன் நினைப்பது உடனே  நடந்தாக வேண்டுமே.

சற்றும் தாமதிக்காமல் தேவர்களே யெல்லாம் அழைத்தான்.

அனைவரும் வந்ததும் தன்னுடைய ஆசையை  அனைவருக்கும் தெரிவித்தான்

 

அதுமட்டுமல்லாமல்  அம்பிகைக்கு அபிஷேகம்  செய்ய தேவையான உயர்ந்த திரவியங்களும் அர்ச்சனைக்கு வேண்டியவாசனை மிகுந்த  மலர்களும் நிவேதனத்துக்கு வேண்டிய பழங்களும் மற்றும் உணவு வகைகளும் மிக சிறப்பான  வகையில்ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்டான் 


"இதுவரையில் எந்த லோகத்திலும்  யாரும் செய்தறியாத மகா விமரிசையான பூசையாக அது இருக்கவேண்டும்தேவேந்திரனைப்போல  எந்த லோகத்திலும் யாராலும் பூஜிக்கவே முடியாது என்ற வகையில் நாம் செய்யும் பூஜை இருக்கவேண்டும்.பூலோகவாசிகளும் முனிவர்களும் நம்மை பார்த்து ஏங்கவேண்டும்

என்ன வருணா நான் சொல்வது புரிகிறதா “என்று கர்வத்துடன் கேட்டான் தேவேந்திரன்.


'மகாராஜா தாங்கள் நினைத்துவிட்டால்  ஆகாத காரியம் என்ன இருக் கிறதுஅபிஷேகத்துக்கு தேவையான  புனித  தீர்த்தங்களைக் கொண்டுவரும் பொறுப்பை அடியேன் ஏற்றுக்கொள் கிறேன்தேவைப்பட்டால் ஏழு கடல்களிலிருந்தும் நீரைக்கொண்டு வருகிறேன்

சர்வலோகங்களிலும் உள்ள புண்ணிய நதிகளையும் அழைத்து வருகிறேன்அம்பிகையின் திருமேனி குளிரத் திருமஞ்சனம்செய்வோம்என்று வருணன் கூறினன்.


 'நீ என்ன சொல்கிறாய் வாயூ ?" என்று வாயு பகவானை நோக்கிக் கேட்டான் இந்திரன். . 


 'எல்லா  வாசனை  மலர்களேயும் பறித்து கொண்டு வந்து விடுகிறேன்.அத்துடன்  வாசனாதி திரவியங்களையும்  கொண்டுவந்துவிடுகிறேன்." என்றான்  வாயுதேவன்


தன் புருவங்களை சுருக்கி  அக்னி தேவனை பார்த்த தேவேந்திரன்

“ நீ என்ன செய்யப்போகிறாய் அக்னி “ என்று கேட்டான்.


பல்வகை நைவேத்யங்களையும்  அம்பிகைக்கு சமர்ப் பிக்கிறேன்என்ருன் அக்கினிதேவன் அடக்கமாக நின்று கொண்டு

தாமாகவே முன்வந்து நின்ற கற்பக விருட்சம் 

அம்பிகைக்கு வேண்டிய ஆடையாபரணங்களேத் தருகிறேன்என்றது. . - 

'அம்பிகையின் அபிஷேகத்துக்கு பாலைத் தருகிறேன்என்றது காமதேனு

எல்லோரும் கூறியவார்த்தைகளால் தேவேந்திரன் மகிழ்ந்தான்.



தான் செய்யப் போகும் அம்பிகையின் பூஜையே அனைத்துலகங்களைக் காட்டிலும் மிகசிறப்பாக இருக்கப்போகின்றது என்றுபெருமிதம் கொண்டான் அவன்.


இதனால் அம்பிகையே பிரம்மித்துப் போகப்போகிறாள் என்று நினைத்து நினைத்துபூரித்துப் போனான்.

இந்த எண்ணம் வந்ததும்  உடனே அம்பிகையை சந்தித்து தன் மனதில் எழுந்த ஆவலை கூறி அஅந்த லோகமாதாவிடம்அனுமதி பெற  நினைத்தான்.


அம்பிகையை க் காண வேகமாக கிளம்பிபோய் 

அருள்பொழியும் கண்களுடன் அவளைக் கண்டதும்  வணங்கி நின்றான்.


எல்லாம் அறிந்த அந்த அகிலாண்ட நாயகி புன்முறுவலுடன் அவனை வாழ்த்தினாள்.


. '


தாயேஅகில உலகங்களையும் காக்கும் உன்னை  நான் பூஜை செய்து  வணங்க  ஆசை எனக்கு உண்டாகியிருக்கிறது

அம்மா பூலோகத்தில் உனக்காக பெரிய பெரிய ஆலயங்கள் இருக்கின்றன.

அங்கு சென்று நான் வணங்கினாலும் என் மனம் திருப்தி அடையவில்லை


அதனால் அன்னையே  உன்னுடைய சொந்த இடத்திலேயே  எங்களுடைய பெருமைக்கும் உயர்ந்த தகுதிக்கும ஏற்றவகையிலே மிக மிகப் பெரிய பூஜையாக  நடத்த வேண்டுமென்று தீர்மானம் செய்திருக்கிறேன்அத்றகு  சம்மதம் தரவேண்டும்என்றான்


உலகாளும் அம்மை சிறிது நேரம் பேசாமல் இருந்தாள்

பிறகு “ பூலோகத்தில் கோயில்களில் என் விக்கிரகத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடத்துவது மிகவும் உயர்ந்தஅனுபவம்.ஆனால் இங்கு நேரிடையாக எனக்கே அபிஷேகம் செய்வதென்றால்  எப்படி முடியும்?” என்றாள்


இப்படி சொல்லலாமா தாயேபூலோகத்தில் மிகச்சிறிய அளவில்தான் அதுவும் மிகச் சில ந்திகளிலிருந்து நீரை கொண்டுவருகிறார்கள்எதோ சிறிய ந்நதவனத்திலிருந்து பூக்களைக் கொண்டு வருகிறார்கள் தேவி.

மனிதர்களின் அற்ப சக்திக்கு அவ்வளவுதான் முடியும்

ஆனால் எங்கள் பூஜை அப்படி இருக்காது தாயேதயவு செய்து எங்கள் பூஜையை ஏற்றுக் கொள்ள வேண்டும் தாயே” என்றுபிடிவாதம் பிடித்தான் தேவேந்திரன்.


அன்னை  சிரித்தாள்

பிறகு “அப்படியா சொல்கிறாய் ? சரிஉன் இஷ்டப் படியே ஆகட்டும்” என்று தன் சம்மதத்தை கூறினாள்.


 அந்த பூஜை நாளும் வந்தது.

தேவலோகமே விழாக்கோலம் பூண்டதுஅசுர்ர்களிடமிருந்து இந்திரலோகம் மீண்டு வந்தபோது கூட இவ்வளவு  ஆர்ப்பாட்டம்இல்லை.


இந்திரன் பரபரப்பாக எல்லா வேலைகளையும் மேற்பார்வை பார்த்தான்.

வாயு ஒரு இடத்தில் கூட நிற்காமல் சுழன்றடித்து வேலை செய்துகொண்டிருந்தான்.

வருணன்  உற்சாகமாக  இயங்கினான்.

அக்கினியும் தன் வேகத்தைக்கூட்டி கடமையை திறம்படச் செய்தான்.


அன்னையின் அபிஷேக ஆராதனைக்கு தேவையான அனைத்து உயர்ந்த  பொருட்களும் அங்கே   குவிந்தன.

இந்திரன் பூரித்துப் போனான்.

 எல்லா பொருட்களும் அம்பிகையின் திருச்சந்நிதானத்தை அடைந்தன


பூசை ஆரம்பித்ததுவேதங்கள் கோஷித்தன.. முனியுங்கவர்கள் மந்திரங்களை உச்சரித்தனர்இந்திரனே தன் கையால் பூசைசெய்ய ஆரம்பித்தான்.

 'இதோ இது ஆகாச கங்கை

அடுத்தது பூலோக கங்கை

இதோ இதுதான் பாதாள கங்கை 

கிடைக்கவே கிடைக்காத இதோ பாற் கடல்"

என்று உரக்க பெருமையுடன் சொல்லி கொண்டே வருணன் அபிடேக நீரையும் பிற பொருள்களேயும் எடுத்து எடுத்துத்தந்தான்அபிஷேகம் மிக சிறப்பாக நடந்தது.


தேவகன்னியர்  அம்பி கைக்கு  பணி செய்தனர்


இந்திராணி இந்திரனுக்கு பக்கத்தில் நின்றுகொண்டாள்.

கணவனுக்கு வேண்டிய உதவிகளைச்செய்தாள்.

அபிடேகம் நல்லபடியாக முடிந்தது

அம்பிகையின் தேவகன்னியர்  உதவியுடன்  இந்திராணி அம்பிகையை அலங்கரித்தாளபிறகு அர்ச்சனை நைவேத்தியங்கள்எல்லாம் சிறப்பாக நடந்தன.


 அம்பிகையின்  பக்தராகிய துர் வாச முனிவர் இவ்வளவையும் பார்த்துக்கொண்டு ஒரு தனியிடத்தில் அமைதியாக இருந்தார்


பூசை முடிந்ததும் அம்பிகை தேவர்கள் அனைவருக்கும்  விடைகொடுத்து அனுப்பினள்


தன்னைத் தவிர வேறுயாரால் இப்படியெல்லாம்  பூஜை செய்ய முடியும் என்று இந்திரன் இறுமாப்புடன் இருந்தான்.


தனியே இருந்த துர்வாசர்,"தாயேஇன்று கடந்த பூசையில் உன்னுடைய திரு வுள்ளம் பேருவகையைஅடைந்திருக்கவேண்டுமே தேவர் க்ளுக்கும் இந்த நல்ல காரியத்தைச் செய்ய அறிவு உண் டாயிற்றேஉன் திருவருளேஎன்னவென்று சொல்வேன்.ஆனால் உன் முகம் வேதனையாக இருக்கிறதே ஏனம்மாஎன்று பணிவாகச் கேட்டார்.


இங்கே பார்என்றாள் அந்த ஜெகதம்பா.


துர்வாச முனிவர் பார்த்தார்அம்பிகையின் திரு மேனி கொப்புளம் கொப்புளமாக இருந்தது. "இது என்ன?" என்று பதறித்துடிதுடித்துப் போளுர் முனிவர்


'இதுதான் அவர்கள் செய்த பூசைஎன்ருள் அம்பிகை. -


 'புனித தீர்ரத்தங்களை அவர்கள் கொண்டு வந்தது உண்மைதான் ஆனால்..அவற்றைத் தம்முடைய அகங்காரத்திலே கொதிக்கவைத்து அபிஷேகம் செய் தார்கள்அகங்காரத்தை என்னால் சகிக்க முடியவில்லைநெருப்பின் நடுவிலே ஆனந்தக்கூத்தாடுபவள் நான்.

ஆனால் அகங்காரம் இருக்கும் இடத்தில் ஒரு நொடிப்பொழுதும் என்னால் நிற்கவே முடியாது.

ஆனால் இந்திரனிடம்  நான் வாக்கு கொடுத்துவிட்டதால் விலகிச் செல்ல முடியாமல் அமர்ந்திருந்தேன்.அதனால் என் தேகம்புண்ணாகிவிட்டது . அவன் வீசிய மலர்களில்அவன் அணிவித்த ஆடையாபுரணங்களில் அவனுடைய அகம் பாவம் மட்டுமேஇருந்தது.

அவன்  படைத்த உணவு ருசிக்கவே இல்லை. “என்றாள் வேதனையுடன் ஜெகன்மாதா.


 துர்வாசர் கலங்கினர். 'என் கண்கள் எவ்வளவு பாவம் செய்திருந்தால் இத்தகைய காட்சியை நான் பார்க்கிறேன்நான் ஒருபாவிஅம்மா தாயே , இந்தக் கொப்புளங்கள் சரியாக  வழியில்லையா? “என்று கதறி அழுது கொண்டே கேட்டார் துர்வாசர்.


வழி இருக்கிறது , இதற்கான மருந்து அது தன்னால் எனக்குக் கிடைக்கும்பொறுஎன்றாள் தேவி துரவாசர்கண்கலங்குவதை தாங்காதவளாய்.


சற்று நேரத்திலேயே  அவள் திருமேனியில்  கொப்புளங்களைக் காணவில்லைஅந்த மேனியில் அங்கங்கே சிறு சிறுநீர்த்துளிகள் இருந்தன.


எப்படித் தாயே “என்றார்துர்வாசர் மகிழ்ச்சியில்.


“ பூலோகத்தில் ஒரு சிறிய கோவிலில் ஒருவன் எனக்கு அபிஷேகம் செய்கிறான்கண்களாலேயே அபிஷேகம் செய்கிறான்.ஓடுஎன் நோய் தீர்த்தவனை நீ கட்டாயம் பார்க்கவேண்டும்.உடனே பூலோகம் புறப்படு ” என்றாள் அகிலாண்டேஷ்வரி.

துர்வாசர் ஓடினர்


அந்த சின்னஞ் சிறிய  கோயிலுக்குள்ளேஅம்பிகையின் திருஉருவத்தின் முன்னால்  யாரோ ஒரு பக்தன் கண்ணேமூடிக்கொண்டு உட்காரந்து கொண்டிருந்தான்அவனோ பரம ஏழை என்பது பார்த்ததுமே புரிந்துவிட்டது துர்வாசமுனிவருக்கு.


அவன் கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது.


அம்மா தாயேஜெகன்மாதாமகிஷாசு மர்த்தினி,கருணக் கடலேஎங்கும் நிறைந்தவளே!" என்று அவன் வாயிலிருந்து வரும்  வார்த்தைகள் தழுதழுக்கின்றன


துர்வாச முனிவர் அவனை ஊடுருவிப்பார்த் தார்எலும்பும் தோலும்கங்தையாடையுமாக இருந்த அந்த ஏழை பக்தனுடையஉள்ளத்தில் அம்பிகை ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தாள்


அவன் கண்களிலிருந்து  நீர் ஊற்றெடுத்து மார்பிலே அருவிபோல வழிந்ததுஅதன் குளிர்ச்சியில் ஆனந்தக்கூத்தாடிக்கொண்டிருந்தாள் அந்த லோகநாயகி .

இந்த காட்சியை பார்த்த துர்வாசருக்கும் கண்களில்  கண்ணீர் அருவி போல  பெருகியது.

அந்த உலகாளும் பராசக்தியின் வேதனையை போக்கி அவளை ஆனந்த நடனம் புரிய வைத்த அந்த ஏழையை தலைதாழ்த்திவணங்கினார் அவர்.





No comments:

Post a Comment