ஐந்து மணி நேரமாக நீண்ட வரிசையில் கால் கடுக்க காத்திருந்த அந்த பெரியவர் ஒரு வழியாக கவுண்டரை அடைந்தார்....
கவுண்டரில் இருந்த சத்யன், "ரெக்கார்டஸ் எல்லாம் கொடுங்க சார்... வெரிஃபை பண்ணனும்..." என்றபடியே தன்னுடைய கைகளிலிருந்த பேப்பர்களை பக்கத்திலிருந்தவரிடம் கொடுத்த சத்யன்நிமிர்ந்து வியர்வை பெருக நின்று கொண்டிருந்த அந்த பெரியவரைப் பார்த்தார்.
கண்களை சுருக்கி இவரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்தார்.
அடர்ந்த ஆனால் நரைத்த தலைமுடியுடன் நல்ல உயரமும் சிறிய கூர்மையான கண்கள்.அகலமான நெற்றி அளவான வெளுத்த மீசை.வலது புருவத்தின் மேலே இருந்த கருப்பான அந்த பெரிய கருப்பான மச்சம். அது மச்சம் இல்லை அது அதுதான் அவருடைய அடையாளம் எரிந்து கொண்டிருந்த குடிசையில் புகுந்து அந்த சிறுவனை தூக்கிவந்த வீரத்தழும்பல்லவா அது அப்படின்னா…. பையில் டாக்குமென்ஸ் எடுத்துக் கொண்டிருந்த பெரியவரை உற்றுப் பார்த்தபடியே…..அவர்???? அப்போ அவரா. அவரேதானா?????ன்று யோசித்ததும்
"சார் உடற்கல்வி ஆசிரியர் தோட்டபட்டு திரு.கலியபெருமாள் தானே சார்?! திகைப்புடன் கேட்டார் சத்யன்.
இங்க என்று சத்யன் கேட்ட இடம்தன்னார்வ தொண்டு நிறுவனம் மாற்றுத் திறனாளிகளுக்கு சொந்தமாக தொழில் தொடங்க உதவித்தொகை வழங்குமிடத்தில் தன்னுடைய மதிப்பிற்குரிய உடற்கல்வி ஆசிரியர் தீபன் அவர்களை ப்பார்த்ததும் உற்சாகத்தில் சத்தமாக கேட்டு விட்டார் சத்யன்...
ஆனால் சத்யனை அடையாளம் கண்டுகொள்ள முடியாத தீபன் சற்று தடுமாறி...
“ஆமாம் நான் கலியபெருமாள்தான்.உங்கள தெரியலயே தம்பி “ என்றார்.
“சார் நானும் உங்க மாணவன்தான்.என் பெயர் தீபன் சார்.ரொம்ப நாளா உங்கள பாக்கனும்னு நினைச்சேன் சார்.ஆனா நீங்க பழைய முகவரில இல்லயே சார்.நீங்க எப்படிங்க சார் இருக்கீங்க?” மரியாதையுடன் எழுந்து நின்று பேசும் சத்யனிடம்
"எனக்கு நீங்க யாருன்னு தெரியலயே தம்பி… என்ன மன்னிக்கனும் நீங்க ... நான் கொஞ்சம் அவசரமாக போகணும் தம்பி.." என்றார் சத்யன் கேட்ட கேள்விகளுக்கு பதிலே சொல்லாமல் அந்த பெரியவர்.
சத்யனுக்கு வருத்தமாக போய்விட்டது.அவனுடைய முகத்தில் பெருத்த ஏமாற்றம் படர்ந்தது.அதற்கு மேல் ஆசிரியரை ஒரு கேள்வியும் கேட்காமல் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய ஆரம்பித்தான்.
சத்யன் படித்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்தவர் இந்த பெரியவர் கலியபெருமாள். விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொள்ள மிகச் சிறந்த பயிற்சியளிப்பார்.உடலுக்கு நல்ல உணவும் உடற்பயிற்சியும் மிகவும் முக்கியம்.தினமும் உடற்பயிற்சி செய்து உறுதியான உடம்பினை உருவாக்கினால் தான் கடினமாக உழைத்திட முடியும் என்று அடிக்கடி சொல்வார்.
பள்ளி மாணவர்களை சமூக சேவைகளில் ஈடு படுத்துவார்.இரத்த தானம் செய்வார்.அவருடன் இருக்கும்போது ஏதோ ஒருவித பெருமிதமான உணர்வு சத்யனுக்கு தோன்றும்
ஐடி கம்பெனியில் பணி புரிந்துவரும் சத்யன் ஓய்வு நாட்களில் தன்னார்வ தொண்டில் தன்னை ஈடு படுத்திக்கொள்ள முக்கிய காரணமே ஆசிரியர் கலியபெருமாள் தான்.
டாக்குமென்ஸ்களை படித்ததும் அவர் உதவிகேட்டு வந்தது அவருக்காக அல்ல. வேறுயாருக்கோதான் என்று சத்யனுக்குப் புரிந்துவிட்டது.
ஆசிரியர் கலியபெருமாள் சோர்ந்த முகமும், சற்றே அழுக்கான உடையுடன் வாரப்படாத தலையுமாய் இருந்தது சத்யனின் மனதை பிசைந்தது.
ஆசிரியர் தான் வந்த வேலைகள்மு டிந்ததும் “ரொம்ப நன்றி தம்பி “ என்று இருகரங்களைக் குவித்து வணங்கினர்.பதிலுக்கு எழுந்து நின்று வணங்கிய சத்யன் அவர் வெளியேறியதும் பரபரப்பானான்.
“மணி கொஞ்சம் பத்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்து அவருக்கு பின்னால் தொடர்ந்தான்.
ஆனால், நடையில் அதே பழைய வேகத்துடன் வேகமாக நடந்து தெருமுனையை அடைந்தார் ஆசிரியர்.
அந்த தெருமுனையில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் தரையில் கணவன் மனைவி போல் தோற்றமளித்த இருவர் உட்கார்ந்திருந்தனர்.
நேராக ஆசிரியர் அவர்களிடம் போனார்.இவரைப் பார்த்ததும் அவர்கள் இருவரும் பக்கத்தில் எதையோ எடுத்தனர் அது அவர்களுடைய ஊன்றுகோல்கள்.அதனை ஊன்றி எழுந்து நின்றனர்.
அவர்கள் ஏழைகள் தான் ஆனால் ஆசிரியர் அளவிற்கு மோசமான அழுக்காக இல்லாமல் சற்று தூய்மையான ஆடைகளாகவே அணிந்திருந்தனர்.தலையை கூட வாரியிருந்தனர்.முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் இவரை வரவேற்ற அவர்களிடம் பையை கொடுத்த ஆசிரியர் அங்கு வந்த ஆட்டோவில் அவர்களை ஏற்றி தன் சட்டைபையிலிருந்து பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்.
ஆட்டோ நகர்ந்ததும்.
வேகமாக ஓடிய சத்யன் ஆசிரியர் பக்கத்தில் நின்றான்... "சார்..." என்றதும்
திரும்பி பார்த்தவரின் முகத்தில் அதிர்ச்சி "என்ன தம்பி?" என்றார்.
"சார், நான் உங்க ஓல்டு ஸ்டுடன்ட்... உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமாங்க சார்? என்னோட வீடு பக்கத்து தெருவிலதான் சார் இருக்கு…என் வீட்டுக்கு வாங்க சார்…உங்கள பத்தி நான் நினைக்காத நாளே கிடையாதுங்க சார்” என்றான் அழுதுவிடுவான் போல இருந்தான் சத்யன்.
"ரொம்ப நன்றி தம்பி….இவ்வளவு தூரம் பின் தொடர்ந்து வந்தபோதே நீங்க நான் உருவாக்கின மாணவன்தான்னு தெரிஞ்சிடுத்து… உங்களின் தங்கமான மனசுக்கு இறைவன் உங்களை நன்றாக வாழ வைக்கட்டும்..." என்று கைகளை உயர்த்தி ஆசிர்வதித்தார்.
சரியாக அந்த சமயத்தில் பேருந்து வந்துவிட்டது.
“இப்போ அவசரமா கிளம்பனும் தம்பி நான் வரேன்” சொல்லிவிட்டு வேகமாக நடந்து கூட்டத்தில் கலந்து பேருந்தில் ஏறி சென்று விட்டார் ஆசிரியர்.
ஆசிரியரின் இந்த நிலையை கண்டு மனம் வருந்தியவாறே... என்ன ஆச்சு இவருக்கு? இப்படி இருக்க மாட்டாரே.... ஆயிரம் சந்தேகங்களுடன் மனம் நிறைய ஏமாற்றத்துடன் உற்சாகத்தை இழந்து மீண்டும் மெதுவாக தன் இருக்கைக்கு வந்து பொத்தென்று உட்கார்ந்தான்.
சமூகசேவை என்ற சிந்தனையே அவன் மனதை விட்டு நீங்கியதுபோல் இயந்திரத்தனமாக தன் வேலைகளை செய்து கொண்டிருந்தவன். வேலைகளை முடித்துவிட்டு கிளம்பும்போதுதான் தன் மேசைமேல் அனாதையாக கிடந்த பையை பார்த்தான்.
அவனுடைய ஆசிரியர்மறந்து வைத்துவிட்டுச்சென்ற பைதான் அது . பையில் ஆசிரியரின் முகவரி கிடைக்குமோ என்ற ஆவலுடன் திறந்தபோது அதில் பல மருந்து சீட்டுகளுடன் ஐந்து வருடங்களுக்கு முன் பழைய செய்தித்தாளில் வந்த ஒரு செய்தியும் கத்தரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த செய்தியை படித்த சத்யனின் கண்கள் குளமாகின.
அந்த செய்தி
"பிரேக் சரியாக வேலை செய்யாததால் கட்டுப்பாட்டை இழந்த ஓடிய கார் கைப்பிடி சுவரில் மோதி பிளாட்பாரம் மீது ஏறியது. அவ்வழியே சென்று கொண்டிருந்த லட்சுமி கலியபெருமாள் (50) மற்றும் அவரது ஒரே மகன் திலீப் கலியபெருமாள (25) ஆகியோர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். பிளாட்பாரத்தில் கடைவைத்திருந்த கணவன் மனைவி கால்கள் முறிந்தன."
No comments:
Post a Comment