தாய்மையின் வீரம்
உதகமண்டலத்தில் டாக்டர் பரமேஷ் வைத்தியநாதன் சிறந்த இருதயஅறுவை சிகிச்சை நிபுணர்.ஐம்பத்தைந்து வயதான அவர் இதுவரை பலசிக்கலான அறுவை சிகிச்சைகள் செய்து பல உயிர்களைக் காப்பாற்றிஇருக்கிறார்.
ஒவ்வொருவரும் டாகடர் பரமேஷின் அப்பாயின்ட்மென்ட் கிடைத்ததுமே தான் பிழைத்துவிட்ட மாதிரியேசந்தோஷப்படுவார்கள்.இனி ப்ரச்னையில்லை டாக்டர் காப்பாத்திவிடுவார் என்று நிம்மதி அடைவார்கள்.அப்படிப்பட்டகைராசியான டாகடர் அவர்.அவரைவிட அனுபவம் வாய்ந்த டாகடர்கள் கூட
தங்களிடம் வரும் சிக்கலான கேஸ்களை இவரிடம் அனுப்பி வைப்பார்கள்.
இந்த டாக்டருக்கு இருமகன்கள்.இருவருமே டாக்டர் படிப்புதான் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் பரமேஷின் நிலை இப்படியா இருந்தது.
இந்த புகழும் திறமையும் அதிகம் படித்திராத அவருடைய அம்மாவினால் மட்டுமே கிடைத்தவை.ஆம் நம் எல்லோருக்குமேஅம்மாதான் முதல் தெய்வம்.
மாதா பிதா குரு தெய்வம்.
இந்த டாக்டர் படித்து முன்னேற எல்லா அம்மாக்களும் செய்யும் கடமைகளைப் போலத்தான் பரமேஷின் அம்மாவும்செய்தாள்.வீட்டில் வேலைக்கார்ர்கள் இருந்தாலும் தானே சமைப்பாள்.தன் கையால்தான் கணவனுக்கும் குழந்தைகளுக்கும்பரிமாறுவாள்.
தனக்கு அதிகமாக படிக்காவிட்டாலும் இல்லாவிட்டாலும் குழந்தைகள் படிக்கும் நேரத்தில் அவர்கள் அறையில்உட்கார்ந்துகொண்டு தானும் அமைதியாக ஶ்ரீராமஜெயம் எழுதிக் கொண்டிருப்பாள்.
சமைக்கும்போதும் எதோ ஒரு ஸ்லோகத்தை வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும்.
பரமேஷும் அவன் தங்கை திவ்யாவும் மிகுந்த சிரத்தையுடன் படித்து முன்னேறியதற்கு முழு முதல் காரணம் அம்மா தான்.அப்பாஅடிக்கடிவேலை நிமித்தமாக வெளியூர்களுக்கு பயணங்கள் சென்றுவிடுவதால் குழந்தைகள் அம்மாவின் அரவணைப்பில்மட்டுமே வளர்ந்தார்கள்.
அவன் அம்மா வேலைக்கார்ர்களையும் மனிதாபிமானத்துடன் நடத்துவாள்.
அவர்களுக்கு பணமோ உடல்நலம் சரியில்லயோ எதுவாக இருந்தாலும் அவளிடம் உதவிக்கு எப்போது வேண்டுமானாலும்அணுகலாம்.அவர்களுக்கு பக்கத்திலேயே சொந்தமாக மருத்துவமணை கூட இருந்தது.
படிப்பின் மீது மிகுந்த ஆர்வமும் தெய்வ பக்தியும் சமூக சேவை செய்யும் மனமும் கொண்டு இரண்டு குழந்தைகளும்அருமையாக வளர்ந்தார்கள்.பரமேஷ் டாக்டரானான்.
சரியாக சொல்ல வேண்டுமென்றால் அன்றுதான் முதன் முதலில் முழு தன்னம்பிக்கையுடன் பொறுப்புடனும் தனியாகவேடாக்டர் பரமேஷ் ஒரு சிறுவனுக்கு தன்னுடைய சொந்த ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை செய்தான். இருதயநோய்கள் தொடர்பாக பல வருடங்கள் ஆராய்ச்சிகள் செய்தும்
பெரிய மருத்துவமணைகளில் பல பெரிய டாக்டர்கள் இருதய அறுவை சிகிச்சை செய்யும்போது பக்கத்திலிருந்துகுறிப்பெடுத்த அனுபவங்களும் தந்த நம்பிக்கையுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் அவன் செய்த முதல் ஆபரேஷன் அது. ப்ரொசிஜர்ஸ் எல்லாமே மிகச்சரியாக செய்திருந்தான் பரமேஷ்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த சிறுவன் மரணம் அடைந்தான்.ஏற்கனவே மரபு வழியில் அந்த சிறுவனுக்கு பல உடல்நலக்குறைபாடுகள் இருந்தன. கொலை செய்துவிட்ட பீதி மனதில் பரவியது பரமேஷுக்கு.
மருத்துவ படிப்பில் மிகுந்த ஆர்வமும் இரக்க சுபாவமும் கொண்ட பரமேஷின் தன்னம்பிக்கை ஆட்டம் கண்டது.உடனடியாகவீட்டிற்குப் போய் விடவேண்டும் என்று தோன்றியது.தலைசுற்ற ஆரம்பித்தது.
அவனுடைய வேதனையை புரிந்து கொண்ட மற்ற டாக்டரகளோ இறந்துவிட்ட அந்த சிறுவனின் உடல்நிலை ஏறகனவேமோசமாகத் தான் இருந்தது.கடைசி முயற்சியாகத் தான் அந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இருதய சிகிச்சையை அவன்உடல் தாங்கவில்லை என்று எவ்வளவோ எடுத்துசொல்லியும் பரமேஷ் மனதளவில் தேறவேயில்லை.
முதன் முதலில் இப்படி ஒரு அறுவை சிகிச்சை செய்து மனதளவில் பாதிக்கப்பட்ட டாக்டர் பரமேஷ்
அதிலிருந்து மீண்டு வருமுன் அன்றிரவே அவசர கேஸாக இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தது. பரமேஷ் தன்னால் இந்த மனநிலையில் இன்னொரு அறுவை சிகிச்சையை செய்ய முடியாது என்றும் வேறு ஒரு ஆஸ்பத்திரிக்குகொண்டு போகும்படியும் சொன்னான்.
ஆனால்,எழுபது வயதான இருதய நோயாளி நெஞ்சுவலி காரணமாக மயங்கி மாடிப்படியிலிருந்து கீழே விழுந்து தலையில்அடிபட்டு இரத்தம் அதிகமாக வெளியேறிவிட்ட நிலையில் தான் அந்த ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டார்.அவருக்கு அவசரமாகஇரத்தம் ஏற்றி தலையிலும் முறிந்து போன கால்களிலும் ஆபரேஷன் செய்யப்பட்டுவிட்டது.
ஏற்கனவே மோசமான நிலையில் இருந்த அவர் உடல் இருதய அறுவை சிகிச்சைக்காக இன்னும் ஐம்பது கிலோ மீட்டர்பயணத்தை தாங்காது என்று பரமேஷுக்குப் புரிந்தது.
மேலும் அந்த சிக்கலான அறுவை சிகிச்சையை செய்ய நிறைய ஆராய்ச்சிகள் செய்த அவனே சரியானவன் என்று மற்ற டாக்டர்கள் கூறிவிட்டனர்.
அதனால் மூன்று மணி நேர ஓய்விற்கு பிறகு மீண்டும் பரமேஷே ஆபரேஷன் செய்ய வேண்டி வந்தது.வேறு வழியில்லாமல்ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தவனுக்கு மனதில் இறந்துவிட்ட சிறுவனின் முகம் வந்து மிரட்டியது.பயத்தில் அவனது கைகள்நடுங்கின. கண்கள் இருட்டிக் கொண்டுவந்தது.
ஒருவழியாக இருதயத்திலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த முறையும் அவசர சிக்கலான கேஸான அந்த எழுபதுவயது இருதய நோயாளி உயிர் பிழைக்கவில்லை.
அடுத்தடுத்த இந்த இரண்டு மரணங்களால் எப்போதுமே படிப்பிலும் ஆராய்ச்சியிலும் முதல் மாணவனாக வலம்வந்துகொண்டிருந்த டாக்டர் பரமேஷுக்கு அத்தனை வருடங்கள் பாடுபட்டு படித்த படிப்பே வெறுத்தது.காரைஎடுத்துக்கொண்டு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டிற்கு வந்துவிட்டான.கை கால்களை கூட அலம்பாமல் நேரே தன்அறைக்குள் போனான்.
மருத்துவக் கல்லூரியில் வாங்கிய பதக்கங்கள் ஆராய்ச்சிக்காக வாங்கிய விருதுகள் எல்லாவற்றையும் தூக்கி கண்ணில்படாமல் சூட்கேசுகளில் போட்டு பூட்டிவைத்துவிட்டான்.
தான் டாக்டர் தொழிலுக்கே லாயக்கேயில்லை என்று மனதில் தீவிரமாக நினைத்தான்.இனியும் அறுவை சிகிச்சை செய்துபலரையும் கொல்ல அவன் விரும்பவில்லை.படபடப்பாக இருந்தது.வியர்த்துக் கொட்டியது.
அவளுடைய வளர்ப்பும் பரமேஷின் இந்த நிலைக்கு காரணம் என்று சொல்லலாம்.தன்னை அண்டியவர்களை
ஒருநாளும் புறக்கணிக்காமல் அவர்களது நியாயமான தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள்அம்மா.
பலமணி நேரமாக தன் அறைக்குள் புகுந்து கொண்டிருந்த மகனை வற்புறுத்தி வெளியே வரவைத்த அம்மா அவன் முகத்தைபார்த்தும் எதோ ப்ரச்னை என்று ஊகித்துவிட்டாள்.
மகனை அதிகம் செய்யாமல் குளிக்க சொல்லி சாப்பிடக் கொடுத்து தூங்க சொல்லிவிட்டாள்.
அவன் அயர்ந்து உறங்கியபோது ஆஸ்பத்திரிக்கு போன் செய்து நடந்த விவரங்களை அறிந்து கொண்டாள்.
மறுநாளிலிருந்து பரமேஷ் மௌனமாகவே இருந்தான்.குளியல் சாப்பாடு எதிலுமே அக்கறை காட்டவில்லை.
தந்தையால் பரமேஷின் இந்த நிலையை எதிர்பார்க்கவே இல்லை.
அம்மாவால் தன் மகனின் மனநிலையை நன்றாக ப்புரிந்து கொள்ள முடிந்தது.
அவன் குற்றவுணர்ச்சியில் இருப்பதைப் புரிந்துகொண்டாள்.
அதனால்,அவன் மனதை ஆறுதல் படுத்த அவனுடைய கைகளாலேயே பல ஏழைச் சிறுவர்களுக்கு உணவு மற்றும் உடைகள்வாங்கிக் கொடுக்க வைத்தாள்.
அடுத்தடுத்த நாட்களில் ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு மகனை அழைத்துப் போனாள் பலமணி நேரங்கள் அவர்களுக்குபணிவிடை செய்யவும் ஊக்குவித்தாள்.
ஆனால் இரண்டு மாதங்கள் ஓடின. டாக்டர் பரமேஷின் மனநிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.டாக்டர் என்றவார்த்தையைக் கேட்டாலே நடுங்கினான்.
பரமேஷின் தங்கை திவ்யா வுக்கு இது தாங்க முடியாத மன வருத்தத்தைக் கொடுத்தது.
திவ்யா மகப்பேறு மருத்துவம் படித்துக் கொண்டிருந்தாள்.
பரமேஷும் திவ்யாவும் அவர்களே விருப்பப்பட்டுதான் மருத்துவப்படிப்பைத் தேர்ந்தெடுத்தனர்.
யாரிடமும் பேசாமல் குற்றவுணர்ச்சியுடன் தனியாகவே வாழும் மகனைப் பார்த்து அம்மாவுக்கு ஒரே வேதனை.
எத்தனையோ இரவுகள் அவன் தூங்காமல் படித்திருக்கிறான? மகனின் ஆராய்ச்சி வெற்றிபெற தினமும் மனம் உருகிகடவுளிடம் விரதங்களும் பிரார்த்தனைகளும் செய்திருக்கிறாள் அம்மா.எல்லாம் வீணாகிவிட்டதே என்ற வருத்தம் அம்மாவின்மனதில் பொங்கியது.
தான் கைராசி இல்லாதவன் என்று நினைத்தான் அவன். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு
அவர்களுடைய பங்களாவில் தன் அறையில் தனிமையிலேயே வாழ ஆரம்பித்துவிட்டான்.
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அவன் எதுவுமே செய்யாமல் அவனுடைய அறையில் அல்லது பால்கனியில்தனியாகவே உட்கார்ந்து கொண்டிருந்தான்.
அவர்கள் வீட்டு பால்கனியிலிருந்து பார்ககும் போது ஊட்டி மலையின் அழகு கண்களுக்கும் மனதுக்கும் இதமாக இருந்ததுபரமேஷுக்கு.
அந்த சூழ்நிலையை அவன் தினமும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தான். வலது பக்கத்திலேதான் அவன் படித்த ஊட்டிப்ப்லிக் ஸ்கூல் இருந்தது. பள்ளியில் காலையில் ப்ரேயர் முடிந்ததும் பள்ளிக் கட்டிடத்துக்கு முன்பகுதியில் வரிசையாக அந்தப்பள்ளியின் பஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும். பரமேஷுக்கு அந்த பள்ளியின் விளையாட்டு மைதானமும் நன்றாக தெரிந்தது.மாணவர்கள் குளிர் தாங்குவதற்காக முழுக்கை சட்டை மற்றும் பேண்ட் மற்றும் ஷூக்கள் அடங்கிய யூனிபார்மில்விளையாடிக் கொண்டிருந்தனர்.
மற்றொரு பக்கத்தில மேலே முழுக்க ப்லாஸ்டிக்க சாக்கால் கூரை வேய்ந்திருந்த மலைச்சரிவில் சரிவில் ஸட்ராபெரிபயிரிடப்பட்டிருந்தது.
எதிரில் கொஞ்ச தூரத்தில் தெரிந்த டீ பேக்டரியிலிருந்து பல விதமான ஹெர்பல் டீக்களின் மணம் வந்து கொண்டேஇருந்தது.
சற்று தொலைவில் தெரிந்த மைசூர் மகராஜாவின் பூந்தோட்டம் பார்ப்பதற்கு மரத்தில் ஆங்காங்கே கொத்து கொத்தாக பூக்கள் தொங்குவது போல அந்த மலைச்சரிவிலே விதவிதமான வண்ண மலர்களின் கூட்டம் கண்களைக் கவர்ந்து இழுத்தது.
மலைச் சரிவில் வீடுகள் இருந்த போதிலும் அதிக மழைபெய்தாலும் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கிவிடாமல் அழகாக வழிஅமைத்து ஆறுகளில் கலக்கும்படி அமைக்கப்பட்டிருந்த கட்டமைப்புகள் அவனை கவர்ந்து இழுத்தன.
தினமும் பல மணிநேரம் பால்கனியில் குளிரில் நடுங்கிக்கொண்டே இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டுஉடகார்ந்திருப்பான் அவன்.அவனுடையஅப்பாவோ அம்மாவோ தங்கையோ வந்து பார்த்து அவனை அழைத்துவந்தால்தான்உண்டு.ஆனால்
மறந்துபோய்கூட அவர்களுடைய சொந்தமருத்துவ மனையை பரமேஷ் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.
இப்படிப் பட்ட சூழ்நிலையில் தான் பரமேஷின் அம்மாவிற்கு கவலை அதிகமாகி நெஞ்சுவலி வந்தது.
பயத்துடன் அம்மாவைப் பார்த்தான் பரமேஷ்.
“என்னன்னு டெஸ்ட் பண்ணிப் பாரேன்டா “ என்றாள் அவனுடைய அம்மா.
“வெறும் கண்ணுல பாத்தா என்ன தெரிஞ்சிடும்மா நல்ல டாக்டர்கிட்ட போம்மா” என்றான் பரமேஷ்.
மகனை கண்களை குறுக்கி உற்றுப் பார்த்துவிட்டு நெஞ்சைப் பிடித்துக் கொண்டு பெருமூச்சுவிட்டாள் அம்மா.
ஹாஸ்பிடலுக்குப் போகாமல் அப்படியே ஒரு மாதம் ஓடிவிட்டது.
“அம்மா ஹாஸ்பிடல் போகலாம். “ என்று வற்புறுத்தினாள் திவ்யா.
பரமேஷின் நடவடிக்கைகளால் அம்மா மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டாள்.அதனால்தான் அம்மாவிற்கு இருதயத்தில் ப்ரச்னைவந்துவிட்டது என்று புரிந்து கொண்டுவிட்டாள் திவ்யா.அம்மாவை கண்ணுங்கருத்துமாக பார்த்துக் கொண்டாள் அவள்.
அடிக்கடி வலியில் துடித்தாள் அம்மா. அப்பாவும் மகளும் சேர்ந்து தங்களுடைய ஹாஸ்பிடலுக்கு அவளைஅழைத்துப்போனார்கள்.பரமேஷ் இதற்குக் கூட ஹாஸ்பிடல் பக்கமே வரவில்லை.
அங்கிருந்த டாக்டர் பரசோதித்துவிட்டு ஆரம்ப நிலை இருதய நோய் ஏற்பட்டிருப்பதாகவும் உடனடியாக அட்மிஷன் செய்துஅறுவை சிகிச்சை செய்தால் சரிப்படுத்திவிடலாம் என்றும் சொல்லிவிட்டார்.
ஆபரேஷன் செய்ய் திவ்யாவும் அப்பாவும் ஒப்புக் கொண்டனர்.
ஆனால்…
“எனக்கு ஆபரேஷனும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.ஆபரேஷன் பண்ணி சாகர்த விட இப்படியே சாகறேன் “
என்று சொல்லி அடம்பிடித்து வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டாள் அம்மா.
வீட்டில் பரமேஷ் எப்போதும் போல தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான்.
வலியைப் பொறுத்துக் கொண்டு ஒரு மாதம் ஓட்டிவிட்டாள் அம்மா.
ஆனால் முன்பெல்லாம் வாரத்திற்கு இரண்டு முறை என்று வந்த வலி இப்போதெல்லாம் ஒரு நாளைக்கு இருமுறை வந்ததுஅவளால் வலியைத் தாங்கவே முடியவில்லை.
ஒரு சில நாட்களிலேயே தொடர்ச்சியான வலியாகிவிட்டது.
புரண்டு அழ ஆரம்பித்தாள்.உடலும் இளைத்து துரும்பாகிவிட்டாள். துடிக்க ஆரம்பித்தாள் அம்மா.
அப்பா தனக்குத் தெரிந்த சிறந்த இருதய அறுவை சிகிச்சை டாக்டரை வீட்டிற்கே அழைத்து வந்தார்.
அவர் கைராசியான அனுபவம் மிகுந்த டாக்டர்.
அம்மாவை பரிசோதித்தார்.கிழிந்த நாறுபோல் இருந்த அம்மா வலி தாங்க முடியாமல் கதறி கதறிஅழுதுகொண்டிருந்தாள்.எப்பொழுதும் போல் அம்மாவின் பக்கத்தில் செய்வதறியாது பரமேஷ் தலைகுனிந்துஉட்கார்ந்திருந்தான்.
பரிசோதித்துப்பார்த்த டாக்டர் சொன்னார்.
“உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவில்லையென்றால் உயிருக்கே ஆபத்து வந்துவிடும் அதனால் இப்போதேமருத்துவமனைக்கு கொண்டுவாருங்கள் “என்றார்.
அம்மாவின் கண்கள் வலிதாங்காமல் கண்ணீரை பெறுக்கின.அந்த நிலையிலும்
“நான் ஆபரேஷன் பண்ணிக்கவே மாட்டேன்.” என்று அழுது அடம்பிடித்தாள் அம்மா.
அந்த டாகடர் மிகுந்த அதிர்ச்சியடைந்தார்.பிறகு ஒப்புக்கு நான்கு வலிநிவாரணிகளை மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டுபோய்விட்டார்.
திவ்யாவிற்கு என்ன செய்வதென்று புரியாமல் அப்பாவின் தோளில் விழுந்து கதறினாள் அவரும் அடக்கி வைத்திருந்ததுயரத்தை கண்ணீராய் ப்பொழிந்தார்.
“பரமேஷ் ….” என்று தலையை குனிந்துகொண்டு உட்கார்ந்திருந்த மகனை வேதனையான குரலில் அழைத்தாள் அம்மா.
அவன் கண்ணீருடன் அம்மாவிடம் வந்தான்.
“எனக்கு நீ ஆபரேஷன் பண்றயாப்பா ” என்றாள் அம்மா.
திவ்யாவுக்கே தூக்கிவாரிப் போட்டது.
“நானா” நடுங்கினான் பரமேஷ்.
“ஆமாம்பா ரொம்ப வலிப்பா” என்றாள் அம்மா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு
“நான் ஆபரேஷன் பண்ணா நீ செத்துப் போய்டுவம்மா. “என்றான் மகன்.
“ஆபரேஷன் பண்ணலனாலும் நான் செத்துதான்டா போவேன். அத மறந்துடாத.
தாங்க முடியாத வலியோட வாழர்து மரணத்தை விடக் கொடுமையானதுடா.
மத்தவாளோட வலிய போக்கி அவாள வாழ வைக்கத் தானேடா நீ டாக்டருக்கு படிச்ச.” என்றாள் அம்மா.
“வேற ஒரு நல்ல டாக்டர பாக்கலாம்மா” பிடிவாதம் பிடித்தான் பரமேஷ்.
“ரொம்ப இளகிய மனசு படைச்சவனா உன்ன நான் வளத்துட்டேனேடா…
அதனால ஆபரேஷனே பண்ணாம வலில துடிச்சே நான் செத்துப்போய்ட்டேன்னு வச்சுக்கோ.
இருதயநோய் சம்மந்தமா ஆராய்ச்சி படிப்பெல்லாம் படிச்சிருந்தும்… நம்மள பெத்து வளத்து ஆளாக்கின அம்மாவ வலிலதுடிக்க விட்டிருக்காம ஒரே ஒரு ஆபரேஷன் பண்ணி பாத்திருக்கலாமோனு பிற்காலத்துல உன் மனசாட்சியே உன்னகேள்விகேட்குமே. கடைசி அவரை மனசாட்சிக்கு பயந்தே வாழப்போறயா என்ன?
ஒரு வேளை என்னோட விதி முடியனும்னு இருந்தா….
யாரோ ஒரு டாக்டர் கையால ஆபரேஷன் பண்ணி நான் சாகர்த விட உன் கையாலயே அது நடக்கட்டும்டா. என் கடைசிஆசையும் இதுதான்.நிறைவேத்துடா ” அம்மா முனகி முனகி பேசிவிட்டு வலிதாங்க முடியாமல் மயங்கிவிட்டாள்.
“அண்ணா, உன்னால அம்மா ரொம்ப கஷட்பட்டுட்டா. தயவு செய்து அம்மாவோட கடைசி ஆசையையாவது நிறைவேத்து.போறஉயிர் உன் கையிலயே போகட்டும்.அம்மாவோட ஆத்மா அப்போதான் சாந்தி அடையும்.சீக்கிரம் அண்ணா.ப்ளீஸ்” அழுதுகொண்டே அவனைப் பிடித்து உலுக்கினாள் தங்கை.அப்பா நிலைகுலைந்து போய்விட்டார்..
கடைசி ஆசை என்ற வார்த்தை அவனையும் உலுக்கியிருக்கவேண்டும்.பரபரப்பானான் பரமேஷ்.
உடனடியாக வீட்டுக்கு ப்பக்கத்திலிருந்த தங்களுடைய மருத்துவனைக்கு அம்மாவை ஆம்புலன்ஸில் அழைத்துப் போனான். அப்பாவும் திவ்யாவும் சில பணியாளர்களை அழைத்துக் கொண்டு உடன் கிளம்பினார்கள்.
“தாங்க முடியாத வலியோட வாழர்து மரணத்தை விடக் கொடுமையானது.” என்ற வார்த்தை அவனை மாற்றியது.
அவனுக்கு பயமோ பதட்டமோ ஏற்படவில்லை.அவன் கைகள் நடுங்கவில்லை.மனம் படபடப்பாக இல்லை.தெளிவாகசிந்தித்தான்.
ஆபரேஷன் முடிந்தது.
பரமேஷுக்கு தன்னுடைய அறுவை சிகிச்சையில் மிகச்சிறந்த நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.
திவ்யாவும் அப்பாவும் பதட்டமாக இருந்தனர்.
அவர்களுக்கும் பரமேஷ் தான் தைரியம் சொன்னான்.
அந்த ஆஸ்பத்திரியிலிருந்த மற்ற நோயாளிகளையும் போய்ப் பார்த்தான்.
அறுவை சிகிச்சைகள் அளிக்க ஆரம்பித்தான்.
இந்த சூழ்நிலையிலும் பரமேஷின் நடவடிக்கைகள் குடும்பத்தினருக்கு பெரிய ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையுமஏற்படுத்தியது.
“கடவுளே என் அம்மா மீண்டும் எழுந்து அண்ணாவின் இந்த அழகிய மாற்றத்தைப் பார்க்க வேண்டுமே.” என்று திவ்யா வேண்டிக்கொண்டாள்.
ஒரு வாரம் ஓடிவிட்டது.
அம்மா வலி நீங்கி பிழைத்துவிட்டாள். தன் கண்ணை மட்டுமல்ல தன் மகனின் அறிவுக் கண்களையும் திறந்துவிட்டாள்.
அனைவரும் பரமேஷைப் பாராட்டினர்.
கொடுமையான வலியைத் தாங்கிக் கொண்டு
அவளுடைய உயிரையே பணயம் வைத்து மகனுடைய தன்னம்பிக்கையை மீட்க ப்போராடியிருக்கிறாள் அந்த வெளி உலகம்தெறியாத அம்மா என்று ஆராய்ச்சி படிப்பு படித்த பரமேஷுக்குப் புரிந்துவிட்டது.
கலங்கிய கண்களுடன் அம்மாவைப் பார்த்தான்.
“அழாதேடா என்னதான் நீ காப்பாத்திட்டியே இப்போ எனக்கு வலியே இல்லடா.“ என்றாள் அம்மா புன்னகையுடன் மெல்லியகுரலில்.
“இல்ல அம்மா.எனக்கு தன்னம்பிக்கை வரணும்னு நீயேதான் உன் உயிரையே தியாகம் பண்ணதுணிஞ்சிருக்கம்மா.எனக்காக மாசக் கணக்கில கொடுமையான வலிய நீ அனுபவிச்சிட்டம்மா…ஆரம்பத்துலயே நான் இந்தஆபரேஷனை செஞ்சிருக்கனும்” அம்மாவின் கைகளை தன் இருகரங்களாலும் பற்றிக் கொண்டு அழுதான் பரமேஷ்.
“உனக்குள்ள இருக்கிற திறமையான டாக்டர வெளில கொண்டுவர எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைச்சிது.இதுக்குகடவுளுக்குத் தான் நன்றி சொல்லனும். ஆனா…உன்னோட மனசுல எழுந்துட்ட அதிர்ச்சியைப் போக்கத்தான் ரொம்ப நாள்தேவைபட்டுடுத்து.
நல்லவேளை நானும் பிழைச்சிட்டேன்.” அம்மா புன்னகையுடன் கூறினாள்.திவ்யாவும் அப்பாவும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
No comments:
Post a Comment