Friday, September 9, 2022

லலிதாவின் சமத்து


ஜோசியர் வந்திருக்கேர் காபி கொண்டாம்மா ல்லிதா

வாசல் திண்ணையிலிலிருந்து அப்பா சொன்னது கண்டி ஒட்டப்பட்ட ரேழியை கடந்து 

அடுத்திருந்த நாட்டு ஓடு வேயப்பட்ட நடுக்கூடத்தையும் தாண்டி ரயில் ஓடு போடப்பட்ட அரங்குள்ளையும் தாண்டி இருந்தபின்கட்டில் ல்லிதாவிற்கு நன்றாக கேட்டது.

தோட்டத்திலிருந்த கிணற்றிலிருந்து எவர்சில்வர் குடத்தில் ஜலம் கொண்டு வந்து  பெரிய கங்காளங்களில் நிரப்பிக்கொண்டிருந்த அவள் அம்மாவைப் பார்த்தாள்.

வரேன்னு சொல்லுடீ இல்லன்னா கத்தின்டே இருப்பேர் அப்பா” என்று குமுட்டி அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தஜலத்தை பில்டரில் கொட்டிக் கொண்டே ல்லிதாவிடம் சொன்னாள் அம்மா.


முன்னாடி தாழ்வாரத்தில் தரையில் உட்கார்ந்திருந்து டெஸ்கில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்தஅச்சுதன் அப்பாவின் குரலையும் பதிலுக்கு அம்மாவின் வேலைகளையும் கவனித்து விட்டு 

எழுந்து வாசலுக்கு வந்தான்.


காபி எடுத்துன்டு வராளாம் அம்மா” என்று அப்பாவிற்கு பதில்சொல்லிவிட்டு மீண்டும் தாழ்வாரத்துக்கு படிக்க வந்தான்.


புடவை சற்று நனைந்திருந்த ல்லிதா அச்சுதனை பார்த்து சிரித்துவிட்டு “சமத்து” என்றாள்.

ஆமாம்.அவன் ரொம்ப சமத்து.கண் பாத்தா கை வேல செய்யும்.”மகனை பெருமையாக பேசிவிட்டு

மகளைப் பார்த்தவளுக்கு கோபம் வந்துவிட்டது.

என்ன ல்லிதா இது இப்படியா வேல பண்றது?நாலு குடம் ஜலம் கொண்டு வரதுக்குள்ள இப்படி புவய ஈரம் பண்ணின்டிருந்தாஎப்படிகொஞ்சம் நிதானமா குடத்து ஜலம் தளும்பாம நடக்கத் தெரியலயே.” அங்கலாய்த்தாள் அம்மா.

இல்லம்மா  பக்கத்தாத்து கனகா தோட்டத்துல என்ன பாத்துட்டு விசாரிச்சாஅவகிட்ட பேசின்டே பேச்சு சுவாரஸ்யத்துலகுடத்தை கயறு கொஞ்ச நீளமா இருக்கும் போதே கவனிக்காம தூக்கினேன் தெரணைகட்டுல இடிச்சு ஜலம் என்மேலசிந்திடுத்துஅதான்” உண்மையை அப்படியே சொல்லிக் கொண்டிருந்த ல்லிதாவை கோபமாக பார்த்தாள் அம்மா.

“ சமத்து போ…. அதான் உன் புக்காத்துல உன்னை…”

அம்மா ஆரம்பிப்பதற்குள் அச்சுதன் உள்ளே வந்தான்.


அம்மா காபி குடு நான் கொண்டு போய் குடுக்கறேன்” என்றான்.

 அம்மா ஒரு டம்ளரில் இருந்த பாலில் டிகாஷனை கலந்து சர்க்கரை சேர்த்து வேகமாக நுரை த்தும்ப ஆற்றினாள்.

பாத்துன்டே இருக்கியே நீயும் ஒரு டம்ளரில கலக்கு.அப்பாக்கு கோபம் வந்துடப் போறது” என்று மீண்டும் ல்லிதாவிடம்சொன்னாள்.

அம்மாமெதுவா பண்ணு ஒண்ணு அவசரம் இல்லம்மாஜோசியர் மாமா வெத்தலை போட்டுன்டு இருக்கார்.” என்று சொன்னஅச்சுதனை அன்பாகப் பார்த்தாள் ல்லிதா.


குடும்பத்தில் உரசல்கள் வராமல் அழகாக பொறுமையாக அவன் பேசுவது எவ்வளவு பெரிய விஷயம்?

அவன் பேச பேச அம்மா மகுடிக்கு மயங்கிய பாம்பாக ஆடுகிறாளே.பிரமித்து நின்றாள் ல்லிதா.


பிறகு தம்பியை படிக்க அனுப்பிவிட்டு தானே கைகளில் காபியுடன் வாசலுக்கு வந்தாள் ல்லிதா.


ல்லிதா சௌக்யமாஉங்காத்துக்கார் எப்படியிருக்கேர்“ என்று அவள் நீட்டிய காபியை வாங்கிக் கொண்டே ஜோசியர் மாமாவிசாரித்தார்.

எல்லாரும் சௌக்யம் மாமா” மெல்லிய குரலில் சொல்லிவிட்டு ல்லிதா இன்னொரு காபியை அப்பாவிடம் நீட்டினாள்.

ல்லிதா இங்க உட்காரும்மா” எதிர்திண்ணையை காட்டினார் அப்பா.

ஆனால் ல்லிதா கதவிற்கு பக்கத்தில் நின்று கொண்டு 

பரவாயில்லப்பா இங்கயே நிக்கறேன் “என்றாள்.அதற்குள் அடுக்களையிலிருந்த அம்மாவும் அவள் பக்கத்தில்  வந்து நின்றுகொண்டாள்.


அவளுடைய ஜாதகத்தை அலசி ஆராய்ந்த ஜோசியர்

புதனுக்கு ஒரு மண்டலம் பரிகாரம் பண்ணுங்கோ” என்று சொல்லிவிட்டு ஒரு படத்தையும் கொடுத்துவிட்டு பணம்வாங்கிக்கொண்டு போய்விட்டார்.

பரிகாரத்தை பண்ணிட வேண்டியதுதான்.அப்போதான் கொஞ்சம் புத்தி வரும் இவளுக்கு” அம்மா சொல்லிவிட்டுஅடுப்பங்கறைக்குப் போய்விட்டாள்.


அன்றிரவு வேலைகளை முடித்த  அம்மா வழக்கம் போல ரேழித் திண்ணையில்  ஒரு சொம்பில் ஜலமும் அதன் மூடியின் மேலேடம்ளரையும் கவிழ்த்து வைத்தாள்.இரவு யாருக்காவது ஜலம் தேவைப்பட்டால் சமையலறைவரை போகாமல் இருக்க இந்தஏற்பாடு.

அப்பா வாசலிலிருந்த கேட்டை பூட்டிவிட்டு பெரிய திண்ணையில் டேபிள் ஃபேனை தலைமாட்டில் சுழலவிட்டுக் கொண்டு பாய்மற்றும் தலையணைகளை உதறி போட்டுக் கொண்டார்.

அவர் பக்கத்தில் தான் அச்சு படுப்பான்.


தாழ்வாரத்தில் மர அலமாரி கீழே பாயை விரித்துப் படுத்தாள் அம்மா.

ல்லிதா முன்தாழ்வாரத்தில் படுத்தாள்.

ஆனால் ல்லிதாவிற்கு தூக்கமே வரவில்லை

பழைய விஷயங்களை நிதானமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.


பதினாறாவது வயதில் கல்யாணம் முடிந்து வீட்டை விட்டுக் கிளம்பும்போது,

ல்லிதா உன் கணவன் சுதர்சன் அருமையான மாப்பிள்ளையம்மா.அவரையும் அவாத்து மனுஷாளையும் நீ மதிச்சிநடந்துக்கனும்மா..உன்னால அந்த அழகான கூட்டுக்குடும்பத்தில் ப்ரச்னை கேள்விப்பட்டேன்  அவ்வளவுதான் நான்பொல்லாதவனாகிவிடுவேன்.” என்றார் அப்பா.அப்பா இதுவரை ல்லிதாவை கண்டித்துப் பேசியதில்லை.அதனால் அவளுக்குப்பதட்டமாகிவிட்டது.

மனம் நிறைய பயமும் குழப்பமுமாக பக்கத்து ஊரிலிருந்த புகுந்த வீட்டிற்குப் போனாள் ல்லிதா.


புக்ககத்தில் கணவன் சுதர்சன்  தனிமையில் இருக்கும் போது அவளிடம் சொன்னான்.

அற்புதமான சங்கீத ஞானம் உனக்கு இருக்கிறது.நான் மிகவும் கொடுத்துவைத்தவன்.

நீ வீணை வாசிக்கும்போது  சாஷாத் அந்த சரஸ்வதி தேவியே என் கண்ணுக்குள்ள தெரியறா.

சங்கீதம் படிச்ச  நீ பொறுமையானவளாய் இருப்பனு  நினைக்கிறேன்.

ஆனால்என் மன்னிக்கு சங்கீத ஞானம் துளியும் கிடையாது.அவள் என் சொந்த அத்தை பொண்ணு சின்ன வயசுலேந்தே  இங்க தான் இருக்கா.அதனால் அவளுக்கு ரூல்ஸ் எதுவும் இங்கு கிடையாது.என் அண்ணாவும் அவளுடையஆசைகளுக்குத்தான் முன்னுரிமை குடுப்பான்.

உனக்கு ஏதாவது மனவருத்தம் இருந்தால் எங்கிட்ட மட்டும் சொல்.நான் சரி பண்ண  பாக்கறேன்.

நீயாக மன்னிகிட்டயோ என் தங்கைகிட்டயோ  நேரிடையா பதில் பேசிடாத” என்று சொல்லியிருந்தான்.

அதனால் மிக கவனமாக இருந்தாள் ல்லிதா.


இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன.

எப்போதும் கொஞ்சம் அலங்காரம் செய்து கொள்ள  ஆசைப்படும் நாத்தனார் ராது தலைக்கு விதவிதமான நிறங்களில்ரிப்பன்கள் அதற்கு மேட்சாக வளையல்கள் பொட்டுகள் என்று வாங்குவாள்அன்று அவள் எதோ நோட்டுப் புத்தகங்கள் வாங்கபோயிருந்தாள்.அந்த சமயம் எதிராத்து நாட்டுப்பெண்  வந்தாள்ல்லிதா எழுந்து உள்ளே போய்விட்டாள்ஆனால் அவர்கள்பேசியது காதில் கேட்டது.


இதென்ன இத்தனை அழகழகான வளையல்கள் இருக்கே” என்றாள் வந்தவள்.

டேபிளின் மேலிருந்ததைப் பார்த்து 

என்னோடதுதான் “ என்று சொல்லிவிட்டாள் மன்னி.

அப்படியா நான் ரெண்டு எடுத்துக்கறேன்.” அதிலிருந்து தாராளமாக எடுத்தாள்.

மன்னி ஒன்றுமே சொல்லவில்லை.

வெளியில் போய்விட்டு வந்த ராது ல்லிதாவிடம் கேட்டாள்.

மன்னி எதிராத்து பெண்ணிற்கு கொடுத்ததை ல்லிதா வெகுளியாக அவளிடம் சொல்லிவிட்டாள்.

அவ்வளவுதான் ராதுவிற்கும் மன்னிக்கும் வாக்குவாதம் வந்துவிட்டது.மன்னி கோபத்துடன் அறைக்குள் போய்விட்டாள்.அன்றுசாப்பிடவேயில்லை


மாமியார் ல்லிதாவிடம் வந்தார்.

கண்ணாடி வளையலை நிறைமாத கர்ப்பிணி  ஆசையாக கேக்கும் போது  கொடுத்ததுல ஒரு தப்புமில்ல.இது கூடவாஉனக்குத் தெரியாதுராது சின்னவ அவளுக்குப் புரியலஅவ கேட்டாலும் எல்லாத்தயும் அவகிட்ட சொல்லணும்னு அவசியம்இல்லயே.உன்னால ப்ரச்ணை வராம பாத்துக்கோ.உன் ஆம்படையானுக்கு இதெல்லாம் பிடிக்காது.”என்று மாமியார் சொன்னபோது பேந்த பேந்த முழித்தாள்.


அதிலிருந்து வாயை இறுக மூடிக் கொண்டாள்.ப்ரச்னைகள் தீர மன்னியிடம் மன்னிப்பும் கேட்டாள்.

சில நாட்கள் கழித்து

மற்றொரு முறை மன்னியுடன் சினிமாவுக்கு ப்போனாள்.அங்கே ஐஸ்க்ரீம்  வாங்கி சாப்பிட்டார்கள்.

மன்னிக்கு சைனஸ் என்பதும் ஜஸ்க்ரீம் சாப்பிட கூடாதென்பதும் ல்லிதாவுக்குத் தெரியாது.

கொஞ்ச நேரத்திலேயே  ஒரே தும்மலும் ஜலதோஷமுமாய் அவதிப்பட்டாள் மன்னி.

வீட்டிற்குப் போனதும்  மன்னிக்கு ஜுரமே வந்துவிட்டது.

என்ன ஆச்சு திடீர்னு” என்று மாமியார் கவலைப்பட்டார்.

அவசரமாக ஓடிப்போய் ரெண்டு பேருக்கும் சூடாக காபி போட்டுக் கொண்டுவந்தார்.

சோபாவில் படுத்துவிட்டாள் மன்னி.அண்ணா பதறிப்போய் விட்டார்.

என்னம்மா ஆச்சுஎதாவது சில்லுனு சாப்பிட்டியா” என்றார் விக்ஸை மன்னியின் நெற்றியில் தடவியபடியே

ஒண்ணுமே சாப்பிடலன்னா” என்று அடித்துப் பேசினாள் மன்னி.

தூக்கிவாரிப்போட பேய் முழிமுழித்தாள் ல்லிதா.

ல்லிதாவின் முகத்தைப்பார்த்த அண்ணா விஷயத்தை புரிந்து கொண்டார்.

ல்லிதா முழிக்கர்த பாத்தாலே தெரியர்தே.நீ எதோ சாப்பிட்டிருக்க.உனக்கு எத்தன தடவ சொல்லிர்க்கேன்..” அண்ணாவிற்கும் மன்னிக்கும் சண்டை ஆரம்பித்தது.

மாமியார் இவளைப் பார்த்த பார்வையில் தலைகுனிந்து நின்றாள் ல்லிதா.

அன்றிரவு சுதர்சனிடம் பேசினாள் மாமியார்.

ல்லிதாக்கு மசக்கையா வேற இருக்கு.அவாத்துல விட்டுட்டு.எப்படி இருக்கானு அவா கேட்டாமட்டும் கொஞ்சம் வெகுளியா  இருக்கானு சொல்லு அவா புரிஞ்சிப்பா.” என்று இவள் எதிரிலேயே சொன்னாள் மாமியார்.


பிறந்தவீட்டில் சுதந்திரமாக உணர்ந்தாள் ல்லிதா.தூக்கம் வரவில்லை அவளுக்கு.வெகுநேரம் புரண்டுகொண்டிருந்தாள்.

என் பேர்ல என்ன தப்பு?

பொறுமையாகத்தானேஇருந்தேன் என்று நினைத்தபோது அவளுக்கு துக்கமாக இருந்தது.

தொண்டையில் ஏதோ அடைத்தது.தாகமாகவும் இருக்கவே எழுந்து ரேழித்திண்ணைக்கு வந்தாள்.


லைட் போட்டதும்  தண்ணீர் சொம்பு  பக்கத்திலிருந்த புதபகவானின் படத்தை கையில் எடுத்துப் பார்த்தாள் ல்லிதா.

தனக்கு சமத்து போறலனு எல்லாரும் சொல்றாளே  என்ற ஏக்கத்துடன் அவரை வேண்டிக் கொண்டாள்.

அந்த படத்தின் கீழே குறிப்பும் இருந்தது.

புதனை பக்தியுடன் பாடினாலும் அவன் மந்திரத்தை ஜபித்தாலும் இனிய கவிதை பாடும் வல்லமை உண்டாகும்.”.

புதனுடைய பிரத்தியதி தேவதை ஶ்ரீமந்நாராயணன்.ஒரு முறை ஶ்ரீமந்நாராயணனே மிகவும் சாந்தமான குணம் உள்ளவர் என்று சோதித்தறிவதற்காக வந்த முனிவர் அவரைக்  காலால் உதைத்தார்.அந்த முனிவரிடம் கோப்ப்படாமல் தேவரீர் திருவடி வலிக்குமே “ என்று முனிவரின் பாதங்களை  வருடினாராம் ஶ்ரீமந்நாராயணன்

புதன் அறிவின் வடிவம்,அழகின் ரூபம்

இதையெல்லாம் படித்ததும்அவள் மனம் வறண்ட நிலம் மழை நீரை உரிஞ்சுவது போல அப்படியே உள்வாங்கிக் கொண்டது.

மீண்டும் விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்தாள்.

என்னம்மா தூக்கம் வரலயா” அம்மா ல்லிதாவின் பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டாள் அம்மா.

ஆமாம்மா…” ல்லிதா அம்மாவிடம் சொன்னாள்.

இதோ பாரும்மாஅடக்கம்ங்கர்து நடை உடை பாவனைல மட்டும் இருந்தா போறாதுடீ

கண்,மூக்கு,வாய் காது எல்லாமே வெளில நடக்கற சமாச்சாரங்களை  உள்ள வாங்கிக்கத் மட்டும் தான்நம்ம மனசுலஇருக்கர்த வெளிப்படுத்தரதுக்கு இல்லஅத புரிஞ்சிக்கனும்.எங்கிட்ட பேசற மாதிரி எல்லா விஷய்த்தயும் புருஷன்கிட்டசொல்லின்டு நிக்காத.அவரோட நிம்மதி போய்டும்.அப்பா அண்ணா தம்பிகள்கிட்ட எல்லாத்தயும் உளர்ற வாய் தான் நாளைக்குஆம்படையான்கிட்டயும்  எல்லாத்தயும் உளறும்.”என்றாள் அம்மா.

இப்போது ல்லிதாவிற்கு  நன்றாகப் புரிந்தது.

சரிம்மா” என்றாள் சந்தோஷமாக.

No comments:

Post a Comment