Monday, September 19, 2022

ஜடை பில்லை.




ரொம்ப நாள் ஆகிவிட்டதேயென்று  படுக்கைஅறையில் என் பழைய மரப்பெட்டியை  கட்டிலுக்கு கீழேயிருந்து இழுத்துஎடுத்தேன்.அதன் மேல்  தூசு அவ்வளவாக இல்லையென்றாலும் அழுத்தி துடைத்தேன்.

அதற்குள் என்னென்ன வைத்திருக்கிறேன் என்று மறந்துபோனதால் எதோ புதையலை தோண்டுவது போன்ற எதிர்பார்ப்புடன் அதனைத்திறந்தேன்.

அந்தப் பெட்டியில் ஒடிந்த நகைகளும் தங்கக் காசுகளும் கிடந்தன.


என் பையன் காலேஜுக்குப் போயிருந்தான்கணவர் எங்கேயோ வியாபார விஷயமாக வெளியூர் போயிருந்தார்இந்த நேரத்தில்வழக்கமாக வந்து என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் சொக்கநாயகி இன்று என்னவோ வரவில்லை அவர்களுக்கும் வீட்டில் வேலைஇல்லையா என்ன?


ஒரு அலுவலகத்தில் நாகநாதன் குமாஸ்தாவாக இருக்கிறார்அவருடைய மனைவி தான் சொக்ககாயகிஅவளுக்கு இந்தக் காலத்துநாகரிகம் அவ்வளவாகத் தெரியாதுசாது ஆனால் உபகாரிஎன் வீட்டிற்குப் பக்கத்துத் தெருவில் தான் குடித்தனம்.அதனால்  அடிக்கடிவந்து எங்கள் வீட்டையும் கவனித்துக்கொள்வாள்


ஆனால்எங்கள் வீட்டில் வீட்டுவேலை செய்யும் பெண்ணோ   எதிலும் வெட்டு ஒண்ணு  துண்டு இரண்டு தான்பத்துப்பாத்திரம்  தேய்ப்பதுவீடு பெருக்கஉவதுஇதெல்லாம்  நன்றாகத்தான் செய்வாள்அதில் ஒரு குறையுமே சொல்ல முடியாது.அதற்குமேல் எதுசெய்யச் சொன்னாலும் அதற்கான காசை  கறாராக கேட்டு வாங்கிக்கொள்வாள்விறகுக் கடையிலிருந்து விறகு வாங்கிவர  சொன்னால் அவளுக்கு அதற்கு  இரண்டணாக் கொடுக்கவேண்டும்கோதுமை அரைத்துவரஅரையனவாவது கொடுக்க வேண்டும்

பாவம் அவள் உழைத்தால்தானே அவள் குழந்தைகளின் வயிறும் நிறையும்.இப்படி  பல வீடுகளில் உழைத்துக் கொண்டிருப்பதால்எனக்கு அவசரத்தேவை எனும்போது   அவளால் வரமுடியாமல் போய்விடும்.


என் கணவரோ அவருடைய கம்பெனியில் வேலை செய்பவர்களை  வீட்டு வேலைக்கு நான் கூப்படவே கூடாது என்று உத்தரவுபோட்டுவிட்டார்.


இந்த நிலையில் எனக்கு உதவுவது சொக்கநாயகிதான்.


சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும்போது ஒருநாள், "என்  புருஷர் பொன் வெள்ளி வேலையை அவருடைய அப்பாவிடமிருந்துகற்றுக் கொள்ளவேயில்லை.அவருடைய அப்பா  அவரைப் பள்ளிக்கூடத்தில் படிக்கவைத்தார்அப்போதிலிருந்தே அவருக்குத் அந்ததொழில் மறந்தே போச்சு.

படிப்போடகூடவே அந்தத் தொழிலும்  பழகி இருந்தால்.இந்நேரம் இரண்டு விதமாக சம்பாதித்துக் கொண்டிருக்கலாமேனு  வேதனைபடறார்." என்றாள் சொக்கநாயகி


தினமும் வரும் அந்தச் சொக்கநாயகி இன்று ஏனோ வரவில்லை


மரப் பெட்டியைக் கீழே கூடத்துக்குக் கஷ்டபட்டு நகர்த்திக் கொண்டுவந்து வெளிச்சத்தில் வைத்துத்  திறந்து பார்த்தேன்


அதற்குள் எங்கேயோ வைத்துவிட்டேனே என்று தேடியும் கிடைக்காமல் கவலைப் பிட்டுக்கொண்டிருத்த ஜடைபில்லையைபார்த்துவிட்டேன்..

அதை எங்கெங்கோ தேடினேனே இதோ இருக்கிறதே இந்தப் பெட்டியை மட்டும் திறந்து பார்க்காமல் விட்டு விட்டேனே  என்றுதோன்றியது.


எத்தனை அன்பாக அம்மா அதை எனக்குக் கொடுத்தாள்


"சுந்தரி,

இந்த ஜடைபில்லை ஆகி வந்ததுஇதை ஜாக்கிரதையாக வெச்சுக்கோஇந்தச் சிவப்புக் கல்எங்கும் கிடைக்காதுஇதை நான்தலையில் வைத்துக்கொண்டு நவராத்திரி கொலுவிற்கு போனேன்அங்கேதான் உன் அப்பா என்னைக் பார்த்தர்அப்புறம் உடனேகல்யாணம் ஆச்சு


கல் நன்னா இருக்கேனு பிரித்து மோதிரம்கடுக்கன்னு பண்ணிடாத.இதைப் பிரிக்காமயே  வெச்சின்டிருஉன் மூத்த பெண்ணுக்குஇதைச் வச்சு அழகு பார்அவளுக்கே கொடுத்து விடு..." என்றாள்.

மூத்த பெண்ணாஎனக்கு ஒரே ஒரு பெண்தான் பிறந்தாள்அம்மாவுக்கும் அது தெரியும்ஆனால் அந்த பெண் குழந்தை  உலகைவிட்டே போய்விட்டாளே்


அப்புறந்தான் எத்தனையோ தவம் பண்ணிச் சிவகுமாரன் -பிறந்தான்.

இன்று வரை ஒருபிள்ளை தானே.


அம்மாவுக்கு மட்டும் ஜோசியம் தெரிந்திருந்தால் அப்படி எல்லாம் சொல்லியிருக்க மாட்டாளோ என்னவோஇந்தஜடைபில்லையைப்பற்றிச் சொல்லும் போது அவள் எவ்வளவு மகிழ்ந்துபோனாள்?

அம்மா சொன்னா.


சேந்தமங்கலத்தில  இந்த ஜடைபில்லையை  செய்தவர்  ஒரு வரப்பிரசாதியாம்தெய்வங்களுக்குத் திருவாபரணங்கள் செய்யர்துல  ரொம்ப  கெட்டிக்காரனாம்

அவனிடம் மனுஷாளுக்கு  நகை பண்ணித்  தரும்படி கேட்கவே எல்லாரும் பயப்படுவாளாம்.

யாருடைய இஷ்டத்துக்கும் வளைய மாட்டானாம்எப்போவாவது தானே விரும்பி யாருக்காவது தன் கையால ஏதாவது ஆபரணம்செய்துகொடுத்தால் அவா  அமோகமாக வாழ்வார்களாம்!அம்மா வக்கணையாகத்தான் சொன்னாள்


ஆனால் அம்மாவுக்கு இது ராசி இல்லாம தானே போச்சு.அப்பா போனப்புறம் அம்மா ஒண்ணும் சுகப்படலயே.


ஆனாலும் ஆசையா அம்மா குடுத்ததை  வாங்கி தலைல அணிந்துகொண்டேன்ஜடைபில்லை என்னவோ அழகானவேலைப்பாடோடதான் இருந்துதுஅன்னம் தன்னோட மூக்கில் ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டிருக்கிறது மாதிரி  உள்ளே ஒருசிற்பம்எந்த வீட்டுக்குப் போனாலும் அந்த வீட்டு அம்மாள் என்னை நிறுத்தி என் ஜடை பில்லைய பார்ப்பாள்அப்போதெல்லாம்எனக்கும் பெருமை தாங்காது.


ஹூம்அதெல்லாம் பழைய கதைநான் புக்ககத்துலயும் அதை அணிந்துகொண்டேன்நாளடைவில் சிவப்புக்கு மதிப்புக் குறைந்ததுவைரம் ஜொலிக்க  ஆரம்பிச்சிடுத்து.


நான் எப்போதாவது இதைத் தலையில் வைத்துக் கொள்வேன்எனக்கு பெண் பிறந்த பிறகு அவளுக்கு வைத்தேன். "என்ன அம்மா இதுகர்நாடகம்அப்படீனு  அவள் சொல்வாள்ஆனாலும் எனக்காக வெச்சிப்பாஆமாம்நான் சொன்னால் அது அவளுக்கு வேதவாக்குஎதற்கெடுத்தாலும்அம்மா அதைச் செய்யட்டுமா’, ‘அம்மா அதை வாங்கட்டுமா', 'அம்மா எனக்கு அது வாங்கித்தாஇப்படியே ஒருநாளைக்கு நூறு தரம் அம்மாவைக் கூப்பிட்டு விடுவாள்அவள் அழகும் சூட்டிகையும் அறிவும் என்மேல  இருந்த அன்பும் - எதைக்கண்டாலும் ஆசைஎதற்காகத்தான் அப்படி ஆசைப்பட்டாளோஎனக்கு அப்போது ஒன்றும் புரியல.


சரியாகப் பதினெட்டு வருஷங்கள் ஓடிப்போச்சுஇதைப் பார்த்தால் அம்மா ஞாபகம் அதோடு பெண்ணின்  நினைவும் வந்துடும்...

என்னை மறந்து பெட்டியைத் திறந்து வைத்தபடியே உட்கார்ந்து கொண்டிருக்தேன்


'அம்மாஎன்று கூப்பிட்டபடியே சொக்கநாயகி வந்தாள். "ஏன் இன்றைக்கு இவ்வளவு நேரம்?' என்று கேட்டேன். . - .

"அவர் சாப்பிட்டுவிட்டு உடனே போகிறவர்கொஞ்ச நாழிகை தங்கிப் என் மகள் மீனாட்சியின் கல்யாணத்தைப்பற்றிப்பேசிக்கொண்டிருந்தார்இப்போதான் கடைக்குப் போனர்என்றாள்.

எத்தனை தரம் நான் கம்பெனி னு  சொல்லித் தந்தாலும் அவள் கடை என்றுதான் சொல்கிறாள்அது புத்தகக் கடைதானே? -


"வரன் வந்திருக்கிறதா?” என்று புன்னகை பூத்தபடியே கேட்டேன்.

"யாரோ தூரத்து உறவில் சேலம் ஜில்லாவில் சேந்தமங்கலம் என்ற ஊரில் ஒரு பையன் இருக்கிறானாம்அவன் தொழிலில்கெட்டிக்காரனாம்இப்போதுதான் என் கணவருக்கு  பொன் வெள்ளி தொழிலில் ஒரு பிடிப்பு  வந்திருக்கிறதேபையனும் பெரியகுடும்பத்தைச் சேர்ந்தவனாம்அவனுக்கே மீனாட்சியைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிடலாம்னு சொன்னார்.


"ஓஹோ கல்யாணம் கூடுகிறதுநல்லதுசுவாமி நல்லபடியாகக் இந்தக் கல்யாணத்தை  நடத்தவேண்டும்” என்றேன்

'இதென்னபெட்டியைத் திறந்து போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே!” என்று சொக்கநாயகி கேட்டாள். -

"நீ வரலபோரடிச்சிது அதான் இதில் எதையோ தேடுவதற்காக எடுத்து வைத்துக்கொண்டேன்;“

"எதைத் தேடினீர்கள்?"

பழைய கதையை அவளுக்குச் சொல்லாமல் மனதை அடக்கிக்கொண்டேன்அவள் கல்யாணச் செய்தியைச் சுபமாக வந்துசொல்கிறாள்இந்தச் சமயத்தில் நாம் நம் அழுகையைச் சொல்வதாவது! .

ஆனாலும் அந்த ஜடை பில்லையை எடுத்து அவளுக்குக் காட்டினேன்அதை அவள் கையில் வாங்கிப் பார்த்தாள்நான் பெட்டியை மூடிஉள்ளே வைத்துவிட்டு வந்தேன்.

ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறதேஎன்றாள் அவள்.


எங்கள் அம்மா குடுத்ததுஒன்றரைப் பவுன் தங்கம் போட்டுச் செய்ததாம்இதை அழிக்கக்கூடாதென்று வைத்திருக்கிறேன்...ஆமாம் ... அந்தப் பிள்ளையாண்டான் எந்த ஊர்க்காரன் என்று சொன்னாய்? ”

"சேந்தமங்கலமாம்.”

“'அடேஅதே ஊர்தான் போல் இருக்கிறது!"”என்றான் 

"என்ன அம்மா சொல்கிறீர்கள்உங்களுக்கு அந்த ஊர் தெரியுமா?" என்றாள் அவள்.


நான் யோசித்தேன். “'சேந்தமங்கலந்தானேஇந்த ஜடைபில்லையைக்கூட அந்தச் சேந்தமங்கலத்தில்தான் யாரோபண்ணினார்களாம்'” என்றேன்.


"அப்படியாஆச்சரியமாக இருக்கிறதேஅம்மாஇது நல்ல சகுனமாகக்கூடத் தெரிகிறதுநான் சேந்தமங்கலத்துப்பிள்ளையைப்பற்றிச் சொல்லவந்தேன்நீங்கள் சேந்தமங்கலத்து ஐடைபில்லையைக் காட்டுகிறீர்கள்!” அவள் காணாததைக்கண்டதுபோல ஆச்சரியத்தில் மூழ்கிப் போனாள்.

ஐயோ பாவம்இந்த ஜடைபில்லையின்  பூர்வ கதை அவளுக்கு தெரியாதுஅவளுக்கு எதற்கு அது தெரியவேணும்அவள் அடைகிறசந்தோஷத்தை நாம் கெடுப்பானேன்?

2

ரு வாரம் கழித்துச் சொக்கநாயகி வந்தாள்ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள்சீக்கிரம் செய்து விட்டு வீட்டுக்குப்போகவேண்டும்என்றாள்.

'ஏன் இந்த அவசரம்?" என்று கேட்டேன்.


நாளைக்கு அந்தப் பிள்ளை வருகிறார்பெண்ணைப் பார்க்க வேண்டுமாம்மீனட்சியைப் பார்த்துவிட்டு வேண்டாமென்றுசொலவார்களா என்னவருகிறவர்களுக்கு உபசாரம் செய்ய வேண்டும்அது சம்பந்தமான வேலை இருக்கிறதுஅதோடு...”' என்றுஅவள் இழுத்தாள்.

“"என்ன தயங்குகிறாய்?” சொல்” என்றேன்

'அவர்கள் வரும்போது இவளுக்கு அலங்காரம் பண்ணிக் காட்ட வேண்டாமாஅதற்கு ஏதாவது நகை இருந்தால் கொடுங்கள்பிறகுதிருப்பித் தந்துவிடுகிறேன்முக்கியமாக அந்த ஜடை பில்லையை..." என்று இழுத்தாள்.


"அது எதுக்கு பழைய நகை?” என்றேன்மனம் படபடத்தது.

அதன் கதை தெரிந்தால் அவள் அதை கேட்பாளா?

இல்லைஅம்மாஅது ரொம்ப அழகாக இருக்கிறதம்மாஇவளுக்குப் புதுச் சிவப்பில் அப்படி ஒன்று பண்னிப் போடவேண்டுமென்றுஆசையாக இருக்கிறதுஎங்கள் வீடுகளில்  ஜடைபில்லையென்றால் ரொம்ப மதிப்பம்மா”” என்று கெஞ்சினாள்.

கடவுளேமுருகாநீதான் காப்பாற்றவேண்டும்இந்த ஜடைபில்லையினால் எந்த தீங்கும் நேராமல் நீ துணையிருக்க வேண்டும்.

அவ்வளவு ஆசையாகக் அவள் கேட்கும்போது மறுக்க முடியவில்லைமுருகனை மனதில் நினைத்துக்கொண்டு

'“உனக்கு இல்லாமல் எதற்கு வைத்திருக்கிறேன்ஏதோ இருக்கிற நகைகளைக் கொடுக்கிறேன்ஆண்டவன் அருளால் மீனாட்சிக்குநல்ல இடம் கிடைத்துச் செளக்கியமாக வாழட்டும்.” என்று வாழ்த்தி கொடுத்தேன்.


நல்லதம்மாநாளைக்குக் காலையில் வந்து வாங்கிக் கொள்கிறேன்”' என்று சொல்லி அவள் போய்விட்டாள்மறுநாள் ஒர் ஒற்றைவடம்சங்கிலிஒரு ஜோடி வளைஅந்த ஜடை பில்லைஒரு மோதிரம்எல்லாம் வாங்கிக் கொண்டு போனாள்அதற்கு மறுநாளே பத்திரமாகஎல்லாவற்றையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டாள்.


"“என்னடி சமாசாரம்”? மாப்பிள்ளை எப்படி இருக்கிறான்அவனுக்குப் பெண் பிடித்திருக்கிறதாகல்யாணம் எப்போது எங்கேநடக்கிறது?’ என்று கேட்டேன்.

'பிள்ளை தங்கமானவர்நிறம் கொஞ்சம் மாநிறந்தான்ஆனால் மூக்கும் முழியுமாக இருக்கிறார்அநேகமாகக் கல்யாணம்முடிந்துவிடும்.” என்று அவள் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள்.

அவள் போய்விட்டாள்ஜடை பில்லை அணிந்த நேரம் நல்லவிதமாக கல்யாணம் சுபமாக முடிய வேண்டுமே என்று நான் ஆண்டவனைப்பிரார்த்தித்துக் கொண்டேன்.


நான் வேண்டியபடியே கல்யாணம் நிச்சயமாகிவிட்டதுஇந்தத் தையிலேயே நடத்திவிடுவதாகத் தீர்மானம் செய்தார்கள்எங்கள் கணவர்அவர்களுக்கு  வேண்டிய உதவிகள் செய்வதாக வாக்குகொடுத்தார்கல்யாணத்தைப் பெண் வீட்டிலே செய்வதாக ஏற்பாடு


ஆகையால் நாகநாதருக்குப் பொறுப்பு அதிக மாயிற்றுசொக்கநாயகி விழுந்து விழுந்து வேலை செய்தாள்அடிக்கு ஒரு தரம், “நீங்கள்நகை கொடுத்த நேரம் இந்தக் கல்யாணம் நடக்கிறது'” என்று சொன்னாள் அவள். '“கல்யாணம் நிறைவேறட்டும்”” என்று நான்சொன்னேன்கல்யாணத்துக்கும் நகைகளை நான் இரவல் தந்தேன்

அவர்களும் புதிய நகைகளும்  செய்திருந்தார்கள்

முக்கியமாகப் புதிய சிவப்பில் ஒரு ஜடையில்லை செய்து போட்டிருந்தார்கள்ஆகையால் இந்த ஜடைபில்லையைக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்றுநல்ல வேளைஎன்று எனக்கு  ஆறுதலாக இருந்ததுகுறிப்பிட்ட சுப முகூர்த்தத்தில்மீனாட்சிக்கும் சேந்தமங்கலம் வரதப்பனுக்கும் கல்யாணம் நடைபெற்றது

கல்யாணத்தின்போது குடும்மத்தோடு நாகநாதன் வீட்டில்தான்  இருந்தோம்.


ஏதாவது வேணுமானால் சொல்லியனுப்பு” என்று சொக்கநாயகியிடம் சொல்லிவிட்டு முகூர்த்தம் முடிந்தவுடன் நான் தாம்பூலம் வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். . -


சாயங்காலம் ஆறு மணி இருக்கும்சுவாமிக்கு முன் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்தேன்சொக்க நாயகி வெகு வேகமாகவந்தாள்படபடப்புடன் வந்து கையைப் பிசைந்துகொண்டே, “'அம்மாஅம்மாநீங்கள் தாம் காப்பாற்ற வேண்டும்'” என்றுகவலையோடு  சொன்னாள். -

என்ன வந்துவிட்டது?’ என்று கேட்டேன்.

"அம்மா நான் எதைச் சொல்லட்டும்நீங்கள் முன்பு கொடுத்திர்களேஅந்த ஜடைபில்லை வேண்டும்எங்களுக்கே வேண்டும்அதன்விலை எவ்வளவு ஆனாலும் தங்துவிடுகிறேன்.” என்றாள்.


எனக்கு புரியாமல் விழித்தேன்.

என் வயிறு பகீரென்றது.

“"என்ன சொல்கிறாய்நிதானமாகச் சொல்லேன்”' என்றேன்

அவள் சொன்னாள்.

கல்யாணம் எல்லாம் ஆனபிறகு மாப்பிள்ளை வரதப்பன் இவர்களிடம் '“அந்த ஜடைபில்லை எங்கே?'” என்று கேட்டானாம்.


நாகநாதருக்கு ஒன்றும் புரியவில்லை . மறைவில் இருந்தபடியே கவனித்த சொக்கநாயகி அங்கிருந்தபடியே பதில் சொன்னளாம். 'அதுஐயா வீட்டது” என்றாளாம்


மாப்பிள்ளை எப்படியாவது அது வேண்டும் என்றானாம். “அது கிடைக்கும் என்றுதான் உங்கள் பெண்ணைக் கல்யாணம்பண்ணிக்கொள்ள ஒப்புக் கொண்டேன்” என்றானாம்


இப்படியும் உண்டோ?

இதை அவள் சொல்லி அழாக் குறையாகக் கெஞ்சினாள்“‘'அம்மா..என்ன விலையானாலும் கொடுத்துவிடச் சொல்கிறேன்”” என்றுசொல்லும்போது அழுகையே வந்து விட்டது..

'என்ன இதுஅசடேஅழாதேஇது என்ன பிரமாதம் என்னிடம் இல்லாததைக் கேட்காமல் இருக்கிறதைக் கேட்டானேஅதற்குச்சந்தோஷப்படுஆமாம் இதைப் போய் எதற்காக அவ்வளவு ஆசையாகக் கேட்கிறான்?" : என்றேன்.

"அவர் கல் வேலையில் கெட்டிக்காரராம்அது நன்றாக இருக்கிறதாம்..." அவளால் பேச முடியவில்லை.

நான் சிறிது யோசித்தேன்ஒரு தீர்மானத்துக்கு வந்தேன்விறுவிறுவென்று உள்ளே போனேன்


அந்த ஜடை பில்லயைக் கொண்டு வந்து முருகன் சந்நிதானத்தில் வைத்து நமஸ்காரம் செய்தேன். '“இந்தா சொக்கு நீயும் நமஸ்காரம்பண்ணிட்டு  இதை எடுத்துக்கொள்”” என்றேன்.

அவள் நமஸ்காரம் செய்துவிட்டு, "நீங்களே உங்கள் கையால் குடுங்கம்மா” என்றாள்.

நான் முருகனைத் தியானித்துக்கொண்டே அதை எடுத்தேன்;

 "சொக்குஆண்டவன்தான் இப்படி ஒரு திருவிளையாடலைச் செய்திருக்கிறான்இந்த ஜடைபில்லையை மீனாட்சிக்குக் கல்யாணச்சீதனமாக நான் கொடுக்கிறேன்அவள் என் பெண்இது  என்னுடைய அம்மா தந்ததுஇதுஎன் அம்மா  பேரும் மீனாட்சிதான் . தன்பேரையுடைய பேத்திக்கு இது உரிமையாவதில் என் அம்மாவின்  ஆத்மா சாந்தி அடையும்எடுத்துப் போய் மீனாட்சிக்குக் கொடுஅவள்மகராஜியாய் வாழட்டும்." நான் மனதார வாழ்த்தினேன்.

என்ன அம்மா இதுவிலைக்கு வாங்கிக்கொள்ளத் தான்.....” அவளை முடிக்கவிடாமல்

அதைப்பற்றிப் பேசாதேபோய் முதலில் காரியத் தைக் கவனி.” என்றேன்.


கல்யாணம் முடிந்துவிட்டது.


சில மாதங்களில் மீனாட்சி கருவுற்றிருந்தாள்அவளை கணவன் வரதப்பன் அழைத்துக்கொண்டு வந்திருந்தான்.


 '“அம்மாஉங்கள் பெண் நாளைக்கு உங்கள் மருமகப் பிள்ளையோடு வரப் போகிறாள்”” என்று முதல் நாளே சொக்கநாயகிசொன்னாள்

இரண்டு நாட்கள் கழித்து என் பெண் மீனாட்சியும் மருமகன் வரதப்பனும் என் வீட்டிற்கு வந்தார்கள்.

வரதப்பனுடன் பேசிப் பார்த்தேன்நல்ல பிள்ளைசாமர்த்தியசாலி.


ஒருநாள் வீட்டுக்கு வந்திருந்தான்பேசிக்கொண்டிருந்தான்


"ஏன் அப்பாஅந்த ஜடை பில்லயை ஜாக்கிரதையாக வைத்திருக்கிறாயாஎன்றேன்.

“'ஜாக்கிரதையான இடத்தில் இருக்கிறது”” என்றான்.

“"ஆமாம்அதைக் கொண்டுவந்து கொடுத்தால்தான் மறு காரியம் என்று  ஒரே தடபுடல் பண்ணிவிட்டாயாமேஅப்படிச் செய்யலாமாஎன்று கேட்டேன்.”

"செய்யக் கூடாதுதான்ஆனால் நான் அதற்கு ஆசைப் பட்டதற்குக் காரணம் உண்டுஅது ஒரு கதை.

என்று அவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.


சேந்தமங்கலம் வரதப்ப ஆசாரியார் பொற்கொல்லர்களில் சிறந்தவர்சாஸ்திரம் தெரிந்தவர்ஆலயங்களுக்கு வேண்டிய நகைகளைச்செய்கிறவர்அவருடைய பேரன்தான் இந்த வரதப்பன்வரதப்ப ஆசாரியார் ஒரு சமயம் அந்த ஊர் வரதராஜஸ்வாமி கோயில் தாயாருக்குஒரு ஜடை பில்லை செய்தார்ஒரு ஜமீன்தாருடைய பிரார்த்தனை அதுஅவர் நல்ல சிவப்புக் கல்லாக வாங்கிக் கொடுத்தார்உறுதியானகட்டடமாக இருக்க வேண்டுமென்றுசொன்னார்


ஒன்றரைப் பவுனுக்கு மேலே தங்கம் போட்டு மிகவும் நன்றாக அன்னமும் கொடியுமாகச் சிற்பம் அமைத்துச் செய்தார்அதைக்பார்க்கும்போது அவருக்கே அதில் ஆசை விழுந்ததுஅப்போது அவர் புதிதாகக் கல்யாணம் செய்துகொண்டிருந்தார்


தம் மனைவிக்கும் அப்படி அதே அச்சில் ஒன்று செய்து கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கோயிலுக்கு நகையைச் செய்துகொடுத்துவிட்டார்சில வருஷங்களாகக் கல் சேர்த்துத் தம் மனைவிக்கும் அதே அச்சில் ஒன்று செய்து அவளிடம் கொடுத்தார்ஆனால்அதை அணிந்தமறுவருஷமே அவர் மனைவி காலமாகி விட்டாள்தாயாருக்குச் செய்த நகையில் ஆசை வைத்ததற்குத் தண்டனைகிடைத்துவிட்டதோ என்று  எண்ணி அவர் மனம் வருந்தினார்


இரண்டு குழந்தைகள் இருந்தமையாலும் வயசு நாற்பத்தைந்து ஆகிவிட்டபடியாலும் அவர் வேறு கல்யாணம் செய்துகொள்ளவில்லைஅதுமுதல் ஒரு விரதம் எடுத்துக்கொண்டார்இனிமேல் நகை செய்வதானால் ஆலயங்களுக்குத்தான் செய்வது என்று  அவர்தீர்மானித்தார்


அவருக்கு கோயிலுக்குச் செய்யவேண்டிய நிறைய வேலைகள் வந்துகொண்டே இருந்தன.

தம் மனைவி அணிந்திருந்த ஜடை பில்லையை அவர் யாருக்கோ விற்றுவிட்டார்

அதைக் கண்டாலே அவருக்குப் பிடிக்கவில்லை.


'இந்தக் கதையை என்னுடைய அப்பா  தான் எனக்குச் சொன்னார்அப்பா  சின்ன வயசுல அவரோட அம்மாவோட  ஜடை பில்லையைப்பார்த்திருக்கிறாராம்கோயிலில் தாயாருடைய ஜடை பில்லை எப்படியோ அப்படியே இருக்கும்என்ன அற்புதமான வேலைப்பாடுஎன்றுஎன்னோட அப்பா அடிக்கடி சொல்வார்

உற்சவ காலங்களில்தான் அலங்காரம் பண்ணுவார்கள்அப்போதெல்லாம் நான் தாயாருக்குப் பின்னாலே போய் ஜடை பில்லையைப்பார்ப்பேன்


எங்கள் தாத்தா பண்ணின இரண்டு ஜடை பில்லைகளில்

ஒன்று மனிதரை அடைந்ததுமற்றொன்று தெய்வத்தை அடைந்ததுதெய்வத்தை அடைந்த இது நித்திய அழகோடு எவ்வளவு சிறப்பாகஇருக்கிறதுமற்றொன்று யார் தலையில் ஏறியதோஎப்படி இருக்கிறதோஇந்தக் காலத்தில் போய்  அதை யார் அணியப்போகிறார்கள்பிரித்துக் குலைத்திருப்பார்கள்என்றெல்லாம் கவலைப்படுவேன்.


'அன்று தை வெள்ளிக்கிழமைபாவி நான் கண் போட்டதனாலோ என்னவோ தாயார் கோயிலுக்குள் எழுந்தருளியபோது சுவற்றில்சட்டென்று விக்ரகம் பின்பக்கம் சாய்ந்து விழுந்துவிட்டது நல்லவேளை விக்ரகத்திற்கு ஒன்றும் ஆகவில்லை  ஜடை பில்லை சிதறிப்போயிற்று


அந்த ஐடை பில்லையின் முழு உருவமும் அப்படியே என் அகக்கண்ணில் நின்றது.மனவேதனையில் நான் இருந்தேன்.


"இந்த வேதனையைப் போக்கியது உங்கள் ஜடை பில்லைஅதே அச்சுநிச்சயம் இது பழைய ஜடை பில்லைதான் என்றுதெரிந்துகொண்டேன்எனக்குக் கல் கோட்டம் தெரியும் அல்லவா?” - -

'“இது உன் தாத்தா செய்ததுதான் என்று எப்படித் தெரியும்?”” என்று கேட்டேன்.

தொழிலாளிக்கு அடையாளம் நன்றாகத் தெரியும் அம்மாஇதைக் பார்த்தவுடன்  மீனாட்சியைக் கல்யாணம் செய்து  கொள்வதென்றுதீர்மானம் செய்துவிட்டேன்.”

"அப்படியானல்மீனாட்சியை நீ பார்த்துப் பிரியப் படவில்லைஇந்த ஜடை பில்லைக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டாய்என்று சொல்.”

"அப்படி இல்லையம்மாஇவள்தான் என்னை முதலில் கவர்ந்தாள்

பிறகு சீர்செனத்தி என்ற  பேச்சுக்கே இடமில்லாமல் இந்த ஜடைபில்லை செய்து விட்டது.” .

“"அப்புறம்?’”

"அப்புறம் என்னகல்யாணத்தன்று பார்த்தால் இவள் தலையில் காகிதப்பூ மாதிரி புதுக் கல் ஜடைபில்லை ஒன்று உட்கார்ந்திருந்ததுஎனக்குப் பெரிய ஏமாற்றமாகி விட்டதுஎப்படியாவது அதை அடைய வேண்டுமென்ற ஆத்திரத்தில் தடபுடல் படுத்திவிட்டேன்நீங்கள்மனசு வைத்தீர்கள்.

'அம்மாகல்யாணம் ஆனவுடன் நேரே வரதராஜப் பெருமாள் கோயிலுக்குப் போனேன்நகையை அழுக்கெடுத்துச் சுத்தம் பண்ணிமெருகேற்றி தாயாருக்கே அதைச் சமர்ப்பித்துவிட்டேன்

தாயார் இழந்த ஜடைபில்லை மறுபடியும் கிடைத்துவிட்டதுபோல எல்லோருமே  மகிழ்ந்தார்கள்

அது இனித் தெய்விக நகை ஆகிவிட்டதுஅம்மாபுண்ணியமெல்லாம் உங்களைச் சேர்ந்தது.”

அவன் இதைச் சொன்னதும் என்னிடமும் நிம்மதியும் இனம்புரியாத சந்தோஷமும் எழுந்தது..