Friday, July 29, 2022

நித்யபாலன்


1978ல் இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது.

தற்போது ட்ரெயினில் போய்க்கொண்டிருக்கிறாரே அவர் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பே கல்லூரி படிப்பை முடித்தார்உடனேஅவருக்கு  டில்லியில் வேலை கிடைத்துவிட்டது.

அம்மா டில்லியா வேண்டவே வேண்டாம் என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.அம்மாவிற்கு அந்த ஊரைத் தவிர வேறு எங்கும் போய்  ப்பழக்கமே இல்லைஆனால் அப்பாவோ “மாதா மாதம் பணம் அனுப்புஎன்று உபதேசித்தார்இப்படிப்பட்ட சூழலில் கடித்த்தை தவிரவேறு எந்த பெரிய கம்யீனிகேஷனும் இல்லாத அந்த காலகட்டத்தில்  சொந்த ஊரைவிட்டு பிரிய  மனமில்லாமல் தான்    நம் கதாநாயகர்டில்லிக்கு போனார்.


அங்கு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை   ஒவ்வொன்றாக   நினைத்துக்கொண்டே 

இப்போது  அதவது பத்து வருடங்களுக்குப் பிறகு …மீண்டும் டில்லிக்கு ட்ரெயினில்  ஏறிவிட்டார்

பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த ரமேஷை இப்போது மீண்டும் சந்திக்கப் போகிற மகிழ்ச்சியில்  ட்ரெயன் எப்போதான் கிளம்புமோஎன்று தவித்துக் கொண்டிருக்கிறார்.


அவருக்கு டில்லியுல்  திங்கள் கிழமை தான் கான்பரன்ஸ்.

ஆனால் ரமேஷை பார்த்து அவனுடன் சற்று நேரம் செலவழிப்பதற்காகவே   திட்டம்போட்டு முன்கூட்டியே  தமிழ்நாடு எக்ஸ்பிரஸி்ல் first class  டிக்கட் பதிவு செய்து கொண்டு கிளம்பிவிட்டார்


அவருக்கு முன்பு டில்லியிலிருந்த ஒவ்வொரு நாளுமே வாழ்வில மறக்கவே முடியாத  ஞாபகங்களாய் பதிந்து  மீண்டும் மீண்டும்வாசிக்கத்தூண்டும் இனிமையான கதைப் புத்தகம் போல் தோன்றினாலும்இந்த பத்து வருடங்களில் ரமேஷைப் பற்றி நினைப்பதும்பேசுவதும் ஒரு தனி சுகமாகவே இருந்தது அவருக்கு.


அவருடைய மூளையிலும்அதிலிருந்து புறப்பட்டமுதுகுத் தண்டிலும், 'உட்செல்', 'வெளிச்செல்நரம்புகளிலும் இதயத்தின்'ஆரிக்களிலும்’ வென்டிரிக்களிலும்ஒரே ஒரு பையன் மட்டுமே விசுவரூபமாக வியாபித்திருந்தான்மறுநாள் டெல்லிக்குச் சென்றதும்பத்தாண்டு வரை பார்க்கத் துடித்தும்பார்க்க முடியாமல் போனஅவரது  மருமான் ரமேஷைப் பார்க்க வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார் இந்தக் கதையின் கதாநாயகர்.


அவருக்கு அந்த ஸ்டேஷனில் இருந்த  எதுவுமே கண்களில் பதியவில்லை.அவர் மனம் எப்போதோ டெல்லிக்கே போய்விட்டது.


அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களிலேயே அவரை கதறி அழ வைத்த சம்பவத்தை ப் பற்றிதான் அவர் மனம்  அசைந்தாடும் ட்ரெயினில்அசை போட்டுக் கொண்டிருந்தது மனதளவில் கடந்தகாலத்துக்கு போய்விட்டார்சுமார்  பத்து வருடங்களுக்கு முன்பு நடந்ததைகண்மூடி யோசிக்கிறார் அது ஒரு நெகிழ்ச்சியான தருணம்.


அவர் ஒருவழியாக டில்லி வாசம் முடிந்து  ட்ரான்ஸ்பர் ஆகி  மீண்டும்  சென்னைக்கு திரும்ப ரயில்வே ஸ்டேஷனில் இருந்த போது  நடந்தநிகழ்ச்சிதான் அது.

 அவரைவழியனுப்ப வதற்காக பலர் வந்திருந்தனர்.

அலுவலக நண்பர்கள்டில்லி வாசியான    ரமேஷ்அவனுடைய  பெற்றோர் அவனுடைய  அக்காள்எல்லோரும்ரயில்வே ஸ்டேஷனுக்கு  வந்திருந்தார்கள்.


இவரை வழியனுப்ப வந்திருந்தவர்களில் ரமேஷைத் தவிர மற்ற எல்லோருமே ஏதோ சம்பிரதாயத்துக்காக  வந்திருந்தார்களே தவிரஆத்மார்த்தமாக வந்திருந்தது ரமேஷ் மட்டுமே.


ரமேஷ் சிறுவனாக இருந்தாலும் இவருக்கும் அவனுக்கும் ஏற்பட்டிருந்த பாசம் காரணமாக

அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் விட ரமேஷ் பிடித்தமானவனாக இருந்தான்.


அவனுக்கு அப்போது பத்து வயதுதான்.அவர் மடியில் உட்கார்ந்து கொண்டு பிரிவுத்துயர் தாங்க முடியாமல் கதறி கதறி அழுதுகொண்டிருந்தான்.அவர் முகத்தை ஏக்கமாக பார்த்துக் கொண்டே

எப்போ மாமா வருவீங்க.இல்லனா வரவே மாட்டீங்களாஎன்று அவன்கேட்டதும்  அவரே அழ ஆரம்பித்துவிட்டார்.


கண்களை துடைத்துக் கொண்டார்.சிறுவனின் அழுகையை நிறுத்துவதற்காக 

ஆக்ராவுக்கு தான் போறேன் உடனே திரும்பிடுவேன்

என்று பொய் சொல்லி அவனை சமாதானப்படுத்திவிட்டார்.அதைக்கேட்டு விட்டு அவன் லேசாகசிரித்தான்.


ஆனால் உண்மை என்ன என்பது அவருக்கு தெரியுமே.

அவனுடைய அழுது அழுது சிவந்த விழிகளில் தெரிந்த வெகுளித் தனம்.

அவர் சொன்ன பொய்யை  நம்பியும் நம்பாலும் பார்த்த அவன் முகத்தின் வேதனையான குழந்தைத்தனம்.

இது எல்லாவற்றையும் இன்னும் கொஞ்ச நேரத்தில் பிரியப் போகிறோமே என்ற ஏக்கம் அவரை பலமாக அவரைத் தாக்கியது.

அதனால்  தன்னுடைய மனதை சமாதானப்படுத்த முடியாமல் கண்ணீர் பெருக உட்கார்ந்திருந்தார்.


அதுவரை  சென்னையிலிருக்கும் உறவுக்கார்ர்களுக்கு இதைக் கொடுங்கள் அதைக் கொடுங்கள் என்று நிறைய பார்சல்களை இவர்தலையில் கட்டிவிட்டு ..அந்த ரயில்வே ஸ்டேஷனில் தங்களுக்குள் அரட்டை அடித்துக் கொண்டிருந்த நண்பர்கள்     ரயில் கிளம்பப்போகிற சமயத்தில்   

வேகமாக  இவர் பக்கத்தில் வந்து சம்பிரதாயமாக  ஒவ்வொருவரும் வந்து   கைகுலுக்கிவிட்டு

வருஷத்துக்கு ஒரு தடவயாவது வந்துட்டுப் போங்கோ “ என்று சற்று உரக்கவே சொல்லிவிட்டார்கள்.


அவ்வளவுதான்மாமா நம்மிடம் ஆக்ரா போறேன்னு பொய் சொல்லி இருக்கிறார் என்று ரமேஷ் புரிந்து கொண்டுவிட்டான்.

உடனே அவன் 

“ நானும் மாமா கூடதான் போவேன்” என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டான்.


ரயில் நகர ஆரம்பித்ததும் ரமேஷின் அப்பா அவனை தரதரவென்று  இழுத்துக்கொண்டு  ரயிலிலிருந்து இறங்கினார்.


அவன் “ மாமா மாமா” என்று கத்திக் கொண்டே ரயிலுடன் ஓடி வரப்பார்த்தான்.

அவன் முதுகில் படாரென்று படாரென்று இரண்டு மூன்று முறை அறைந்தார் அவனுடைய அப்பா.


அந்த காட்சியைப் பார்த்ததும்  ரயிலில் படிக்கட்டில் நின்று கொண்டு கையசைத்துக் கொண்டிருந்த  இவருக்கு  கண்களில் கண்ணீர்பெருகியது.


ரமேஷ் “மாமா   மாமா “ என்று கதறிக் கொண்டேயிருந்தது    ரயில்   சற்று தொலைவு  செல்லும்  வரை நன்றாக கேட்டது.


சென்னையை அடைந்த பிறகும்  கூட அவர் கண்கள்  கண்ணீரை வடித்துக் கொண்டே இருந்தன.

இப்போதும்  அதை நினைத்ததும் மனம்   கவலையில்  துடித்ததுரமேஷ் இதோமாமா உன்னை பாக்கத்தான் வரேன் என்று  மனதிலேயேஉரக்க சொன்னார்.


 ரமேஷை முதன்முதலாக எங்கே எப்படி சந்தித்தார் என்ற யோசிக்க ஆரம்பித்தார்.


 அவர் டில்லிக்கு வந்த புதிதில கரோல் பாக்கில் நிறைய தமிழர்களை சந்தித்தார்.

நட்பு கொள்ள இவர் மிகவும் ஆசைப்பட்டார் ஆனால் அவர்களோ இவரிடம்  பேசக் கூட முடியாத அளவுக்கு 'பிஸியாக இருந்தார்கள்.


அப்போதெல்லாம்  வாரத்துக்கு இரண்டு நாட்கள் "ரைஸ் லெஸ் டேஸ்அதாவது அரிசி பயன்படுத்தத் தடை செய்யப்பட்ட நாட்கள்


வேகாத சப்பாத்திஅழுகிப் போன பூசணிக்காய் சப்ஜியோடு சாப்பிட்டு வெறுத்துப் போய்விட்டார்யாராவது வீட்டுக்குச் சாப்பிடக்கூப்பிட மாட்டார்களா என்று ஏங்கி இளைத்தே போய்விட்டார்.தினமும் அரிசி சோறு ஒருவேளையாவது சாப்பிட வேண்டும் என்றுஅவருக்கு ஆசையாக இருந்தது.

அந்த சமயத்தில் தான்  ஆர் கே புரத்து நண்பர் ஒருவர் அவருக்கு பழக்கமானார்

ஏதோ அவர் வாழ்க்கையில் எதிர்பாராமல் அதிர்ஷ்டம் அடித்துவிட்டது என்று மகிழ்ச்சியடைந்தார்.

எப்படியாவது அவருடைய வீட்டிற்குப் போய் அரிசி சோறு சாப்பிட்டுவிட வேண்டும் என்று துடித்தார்.

அதனால் அந்த நண்பர்   சில சமயம் இவரை பாராமுகமாக நடந்து கொண்டாலும் வலிய போய்ப் பேசினார்.


அந்த நண்பரைமிகவும்  வற்புறுத்தி  அவருடைய முகவரியை வாங்கிக் கொண்டார்.


முகவரியை பூஜை அலமாரியில் வைத்து பூஜிக்காத குறையாக பத்திரப்படுத்தி வைத்தார்.

உடனே போனால் நன்றாக இருக்காதே என்று சில நாட்கள் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தார்.

ஆனால் அவரால் பொறுக்கமுடியவில்லை.

யதேச்சையாக இந்தப் பக்கம்  வந்தேன்.உங்கள் முகவரி ஞாபகம் வந்தது அதுதான் பார்க்கலாம் என்று வந்தேன் என்று சொல்லிசமாளித்துவிடலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டு 

அந்த நண்பர் வீட்டைக் குறி வைத்துபஸ் ஏறினார்முகவரியை தேடி . அலைந்து வீட்டை  கண்டுபிடித்தும் விட்டார்.


ஆனால்…   இவர் போன சமயத்தில் அவர்கள் வீட்டில்  யாருமே இல்லை.வீடு பூட்டியிருந்தது.

அதுமட்டுமில்லாமல் ஒருவேளை யாராவது அவர்களை தேடிவந்தால் அவர்கள் வர பல நாட்களாகும் என்று சொல்லும்படி அக்கம்பக்கத்தில்  இருப்பவர்களிடம்  வேறு சொல்லி விட்டு போயிருந்தார்கள்.


பசி காதை அடைத்தது.சப்பாத்தியை நினைத்தாலே வெறுப்பாக இருந்தது.


என்ன செய்வதென்று புரியாமல்கால் போன போக்கில் நடந்தார்.சப்பாத்தியை பார்த்தாலே வெறுப்பாகிவிட்டது.


நம் மனிதர்கள் யாராவது கண்ணில் பட்டால் பசிக்கிறது என்று உதவி கேட்டுவிடலாம் என்று தீர்மானித்து அரிசிச்சோறுக்காகதெருத்தெருவாக அலைந்தார்.

அப்படியே   தன்னிச்சையாக   நடந்து  கொண் டிருந்தவர்

நடந்து  ராமகிருஷ்ண புரத்தில் உள்ளஉத்திர சுவாமிமலைக் கோவில் அடிவாரத்துக்கு வந்துவிட்டார்.

45ம் நம்பர் பஸ்ஸைப் பிடித்துகரோல்பாக் போக நினைத்த அவர்.

அங்கிருந்த மலையேறிகோவிலுக்குப் போகலாம் என்று தீர்மானித்தார்.

காரணம் பக்தி மட்டும் காரணமல்லபிரசாதம் கிடைக்கலாம்அதாவது அரிசிப் பிரசாதம் என்ற எண்ணம் தோன்றியது.அன்றுவெள்ளிக்கிழமை வேறு ஒரே கூட்டம்.


பசிகிள்ளிய வயிற்றைப்பிடித்துக் கொண்டுபடியேறினார்.

 "அப்பனே ஆறுமுகாஅரிசிச்சோறு கிட்டாதா

சப்பாத்தி தட்டிவிட்டு சாம்பார் சாதம் தந்தாக்கால் 

சுப்பனேகுப்பனே! - இந்த சுப்பிரமணியன் உன்னடிமை

என்று பாதி தமாஷாகவும்பாதி சிரியசாகவும்

மனத்துக்குள்ளேயே பாடிசன்னிதி உள்ளே போனார்.. 


அனைவரும் கண்ணை மூடி ஏதேதோ வேண்டிக் கொண்டிருந்தார்கள்.ஆனால் 

இவர் மட்டும் சாம்பார்ரசம் சாதம் என்று பிச்சை கேட்டுகைகளைப் பண்டாரம் போல் நீட்டிக் கொண்டிருந்தார்.அந்த நேரத்தில ்அங்கே இருந்த சிறுவன் ரமேஷ் இவருடைய செய்கைகளைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான்.


இவரோ தரிசனத்தை முடித்துவிட்டு பசிவேகத்தில் பிரசாதமும் கிடைக்காத விரக்தியில்    வெளி மண்டபத்தில் வந்து சோகமாக  உட்கார்ந்து  கொண்டிருந்தார்.


வெளியில் வந்த ரமேஷ் இவரை மீண்டும் கிண்டல் செய்தான்.


அவன் அப்பா "பெரியவங்களஅப்படி சொல்லப்படாதுஎன்று சொல்லிக்கொண்டேஇவரைப் பார்த்துச்   அன்பாக சிரித்தார்


அந்த சிரிப்பில் பசியோடிருந்த இவருக்கு அரிசிச்சோற்றின் மணம் வீசியது

அந்த அம்மா வீசிய புன்னகையில்நெய் வாடை நெருடியதுஉடனே சாப்பிட அரிசிச் சோறு   கிடைக்குமோ என்ற நப்பாசையில் இவர்எழுந்து அவர்களிடம்  போனார்.


ரமேஷ் நேரடியாகவே கேட்டான். "மாமாநீங்கஒரே கறுப்பா இருக்கேளேஏன்?" என்றான்.

அப்பா இடைமறித்தார். "அடிச்சிடுவேன் படுவாமாமாவ... அப்படில்லாம் பேசப்படாதுஸார்எக்ஸ்கியூஸ் மீதப்பா எடுத்துக்காதீங்கோடேய் மாமாவுக்கு ஸாரி சொல்லு." என்றார்.

சிறுவன் மேலும் கிண்டல் செய்தான்.. 


அவனுடைய அப்பா  ரமேஷை அதட்டஅக்கா அவன் காதைப் பிடித்துத் திருகினாள்.

அவனுடைய அம்மா அதாவது  மாமிசிரித்துக் கொண்டேபையனின் புத்திசாலி தனத்தைப் பார்த்து பெருமிதப்பட்டாள்.


இவரோவெள்ளை வெளேரென்ற தும்பைப்பூ நிறத்தாலான அரிசிச் சாதத்தை  மட்டுமே மனதில் நினைத்துக் கொண்டு  ரமேஷ்சொன்னது தன்னை பாதிக்காத்து போல  சிரிப்பதுபோல  பாவனை செய்து கொண்டிருந்தார்.


அதனால் அந்த குடும்பம் இவருடன் சகஜமாக பேச ஆரம்பித்தது

பேச ஆரம்பித்ததும் தான் தெரிந்தது அந்த ரமேஷின் அப்பா வெங்கடராமன் இவருடைய   சித்தப்பாவின் உயிர்  நண்பர் என்றவிவரமெல்லாம்.

இதைக் கேள்விப்பட்டதும் பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி ஆகிவிட்டது இவருக்கு.


அந்த வெங்கட்ராமனும் உரிமையோடு  இவரை டா போட்டு பேச ஆரம்பித்தார்

நமக்கு சோறுதாணே முக்கியம் என்று இவரும்  எதையும் கண்டுகொள்ளாமல்  அந்த க்குடும்பத்துடன் ஒன்றிவிட்டார்இவர்பொறுமைக்கு பரிசாக அன்று வத்தல் குழம்போடுநெய்யரிசிச் சோறும்உருளைக்கிழங்கு பொரியலும்தந்தார்  அந்த உத்தமர்வெங்கடராமன்.


ரமேஷ் கிண்டல் செய்ததால் தானே அறிமுகம் கிடைத்ததுஅந்த விளையாட்டு சிறுவனை இவர் பசி போக்க  வேல்முருகன்அனுப்புயிருக்கிறான் என்று  நினைத்து  மனம் குளிர்ந்து போய்விட்டார்.


அரிசி சோற்றுக்காக இவர் அடிக்கடி அங்கே போக ஆரம்பித்துவிட்டார்.

அடிக்கடி போவதால்  ரமேஷ் இவரிடம் ஒட்டிக் கொண்டான்.

பிறகு  இவர்  சும்மா இருக்காமல் அடுத்தகட்டமாக  நடவடிக்கை எடுத்தார்.

அதாவது தன் சித்தப்பாவிடம்   தன் சோறில்லா  நிலையை சொல்லி  பெரிய கடிதம் எழுதினார்.   அதில்  டில்லியிலிருக்கும்  சித்தப்பாவின் உயிர்   நண்பரைப்பற்றியும் நிறைய எழுதினார்.


அவர் எதிர்பார்த்துபோலவே இவருடைய கடிதத்தை படித்ததும் 

சித்தப்பா மனம் இரங்கியதுதன்  உயிர்  நண்பருக்கு பல வருடங்கள் கழித்து விசாரித்து கடிதம் எழுதினார் அதில் மறக்காமல்  தன்அண்ணன் மகனை  நன்றாக   பார்த்துக் கொள்ளும்படி  கோரிக்கை வைத்தார்.


இதனால் ரமேஷ் குடும்பத்தின் ஆதரவு இவருக்கு பெருகியதுஇவரும் ஒருவழியாக

ஏதேதோ சாக்கு சொல்லி கரோல் பாக்கிலிருந்துஆர்.கே.புரத்துக்கு ரமேஷ் இருந்த குவார்ட்டர்ஸ்-க்கே போய் விட்டார்.


இருநஃதாலும் இவருக்கு வயிறோடு மானமும் இருந்ததால்நிரந்தரமாகச் அவர்கள் வீட்டிலேயே  சாப்பிட்டுக் கொண்டிருக்காமல் ஏதோவிசேஷமான நாட்களில் மட்டும்ரமேஷ் வீட்டில் சாப்பிட்டார்.


ஆனால் இங்கு ஒரு ஆச்சர்யமான விஷயம் இருந்தது

அதவது,

வெங்கட்ராமன் தம்பதி யினர் மிக ஆச்சாரமான இந்துக்கள்

ஆகையால்ஒவ்வொரு மாதத்திலும்விசேஷ நாட்களின் எண்ணிக்கை அதிகமாகவும்

விசேஷமில்லாத நாட்களின் எண்ணிக்கையை குறைவாகவும் இருந்தது


அதனால் இவருக்கு மெஸ் பில் குறைந்ததுஇருந்தாலும் ரமேஷுக்கு சாப்பிட  அடிக்கடி பிஸ்கட் விளையாட பேட் பால் என்று எதாவதுவாங்கிக் கொடுப்பதன் மூலம்  தன் செஞ்சொற்றுக் கடனில் 

சிறிதளவு தீர்த்துக் கொண்டார்.மேலும் ரமேஷை பள்ளிக்கு அழைத்துப் போவது அவனுக்கு கதை சொல்லி சாப்பிட வைப்பது எல்லாமேசெய்தார்.அவருடைய வயிற்றுப்ரச்னை ஒருவாறு தீர்ந்தது என்று சற்று நிம்மதியாக இருந்தார்.எல்லாவற்றிற்கும் ரமேஷே காரணம் என்றுஅவன் மீது அன்பு நாளுக்கு நாள் அதிகரித்தது அவருக்கு.அவனுடன் அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்தார.


ஆனால்ஒரு நாள் ரமேஷ் இவரிடம் அழுது கொண்டே வந்தான்.


 "எங்க மம்மிநீங்கசாப்பிட்ட தட்டைக் கழுவலேன்னு டாடிக்கிட்ட சொல்லி திட்டறாங்க என்றுஅவனாகவே வந்துசொன்னான்.அவன் குரலில் அம்மாவின் மேல் கோபம் தெரிந்தது.


அவருக்கு தர்மசங்கடம்.

ஆனால் ரமேஷிடம் நன்கு பழகிவிட்டதால்  அவனைபிரிய மனமில்லாமல்அவன் அம்மாவின் குணத்தை  பொறுத்துக் கொண்டார்சாப்பிட்ட தட்டையும்ஒரு முறைக்கு  இருமுறை கழுவினார்.


தன்னுயிரக மாறிவிட்ட செல்ல ரமேஷின்எச்சில் வாயையும்எந்தவிதப் பலனையும் எதிர்பார்க்காமல் கழுவிவிட்டார.

இன்னொரு நாளும்ரமேஷ் இன்னொரு புதுப் பிரச்சினையைக் கொண்டு வந்தான்

இவர் அறைக்குள் வந்தவன் "மாமாஇந்த புக்க அக்காகிட்ட கொடுக்கப் போனேனாமம்மிஇதை நன்னாப் பிரிச்சுப் பார்த்துட்டுசெக்பண்ணினா.அப்புறம் தான் அக்காகிட்ட   குடுத்தாஎன்று வெகுளித்தனமாகச் சொன்னான்.


மாமியின் செயலைப் யோசித்துப் பார்த்தார் அவர்மாமிசந்தேகப்படுகிறாள்

ஒரு அம்மா  என்ற முறையில்அதைக் குறை கூற அவர் விரும்பவில்லை

அதே சமயத்தில்ரமேஷின் அக்காபி.ஹானர்ஸை முடித்துவிட்டு.சி.ஆர்..யில் ரிசர்ச் செய்கிறாள்.

அவளோடுஇவர் அதிகம் பேசியது கூடக் கிடையாது.

ஆனால்அடிக்கடிதமிழ் வார பத்திரிகைகளை அவளிடம்அவள் கேட்காத போது கூடரமேஷ் மூலம் கொடுப்பார்இந்தக் கொடுக்கல்வாங்கல் தவிரவேறு எந்தவித 'வில்லங்கமும் இல்லைஅவர் நல்லவர் தான்.

இன்னும் சொல்லப் போனால்,அவருக்கு ரமேஷின் அக்காவைவிட ரொம்ப அழகான ஒரு அத்தை மகள்  ஊரில் காத்திருந்தாள்.


ஆனால் மாமி சந்தேகப்படுகிறாள் என்றால் அது கஷ்டமான விஷயம்அவருக்குஅந்த வீட்டில் இருக்கவேபிடிக்கவில்லைரமேஷ்காக , அதையும் பொறுத்துக் கொண்டார்.

ஒரு நாள் ரமேஷிடம் , 'அக்கா கிட்ட..... மாமா. ... ஏதாவது    சொல்லச் சொன்னானாடா... சமத்துக்கண்ணுசொல்லுடா ரமேஷ்"என்றேமாமி கேட்டுவிட்டாளாம்


ரமேஷ்இதையும்மறைக்காமல்  அவரிடம் வந்து சொன்னான்அவ்வளவுதான் இதற்கு மேல்  அங்கு இருப்பது அநாகரிகம் இங்குநம்மால் பிரச்சினை வேண்டாம் என்று நினைத்து விட்டார்.

ஆபிஸில் எப்படியோ போராடி சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிவிட்டார் இவர்.


சென்னை வந்ததும் ரமேஷுக்காக கடிதம் போட்டால் கூட ஒருவேளை அதில் எதோ கோட் வேர்ட் இருக்கும்  என்று மாமிசந்தேகப்படுவாள் என்று நினைத்து பத்து வருடங்களாக ஒரு கடிதம் கூட போடவில்லை  இவர்.


ஆனால் ரமேஷை மறக்கவே யில்லை


தற்போது திருமணம் முடிந்து   இவருக்கு பிள்ளைகள் கூட இருக்கிறார்கள்.…  இன்றும் கூட அவருடைய  மூத்த மகன், “அப்பாஒங்களுக்குரமேஷ்தான் ஒசத்திநான் உனக்கு  வேணாமாம்அப்படின்னு  அம்மா அடிக்கடி சொல்றாளேப்பா அப்படியாப்பா?“ என்றுஅவரிடம் வந்து குறைப்பட்டுக் கொள்ளும் போது  வருத்தம் அடையாமல் சந்தோஷப்படுவார்..ரமேஷ் தான் அவருக்கு ஒசத்தி.


ரயில் பயணம் முழுக்க ரமேஷின் ஞாபகங்களால் மிக இனிமையாகவும்  விரைவாகவும்  சென்றுவிட்டது போல அவருக்குத்தோன்றியது.ஒரு வழியாக டெல்லி வந்துவிட்டதுபரபரவென்று வண்டியை விட்டு இறங்கினார் .ரமேஷைத்தேடி  ஆர்.கே.புரம்போனார்.நல்லவேளை அவர்கள் முகவரி மாறவில்லை.


மாமி வரவேற்றாள்.இவர் எதிர்பார்த்ததைவிட அன்போடு பேசினாள்

அதற்குக் காரணம் மாமியின்  மகளான அந்த ஆராய்ச்சிக் காரிக்குஇவர் எதிர்பார்த்தது போலவே கல்யாணம் முடிந்துகுழந்தைகளும்பிறந்து விட்டதாம்ரொம்ப நல்லது என்று நினைத்தார்.

இப்போதுமாமி எந்த தடையும் இல்லாமல் இவரிடம் மிகுந்த அன்புடன் பேசினாள்.

ஆனால் இவர் மனமோ  ரமேஷை தேடியதுஎன் ரமேஷ்எங்கே.என்று அலைந்தது.


'மாமிரமேஷ்நன்னா இருக்கானாகாணமே ? எங்க போயிருக்கான்?"என்று  மாமியிடம் ஆர்வத்துடன் கேட்டார்.


 "டென்னிஸ் ஆடப் போயிருக்கான்.இப்ப வருவான்” என்றாள் மாமி.

அவருக்கு  சுடச்சுட பலகாரம் செய்து கொடுத்தாள்.


ரமேஷைப் பார்க்கப் போகிறோம்என்ற எதிர்பார்ப்பு நொடிக்கு நொடி எதோ மர்ம நாவல் படிப்பது போல விறுவிறுப்பாகபோய்க்கொண்டிருந்தது


க்ளைமேக்ஸ் காட்சி போல ரமேஷ் வந்தான்ரமேஷா இது.

பத்து வயதில்இவரைப் பார்த்ததும் “மாமா….” என்று உள்ளமும்  முகமும் மலர 

ஓடி வந்து அணைத்துக் கொள்வானே அந்த ரமேஷா இவன்?


ரமேஷ் வளர்ந்திருப்பான் என்று எதிர்பார்த்தார்.ஆனால் இப்படியா?

அவர் எதிர்பார்க்கவில்லையே


பாகவதர் கிராப்தொளதொள பேண்ட்லூஸ் சட்டைகையில் ஒரு சர்தார் ஜி காப்புஆஜானுபாகுவான தோற்றம்குறுந்தாடிதொங்குமீசை.


ரோமங்களும் தாடி மீசைகளுக்குமிடையே இருந்த ரமேஷின் முகத்தைஅடையாளம் கூட  கண்டு பிடிக்க முடியவில்லைசிகரெட்குடிக்கிறானோ?

கறுத்துப் போயிருந்தன அவன் உதடுகள்.இவரைப் பார்த்தான்.

அவன் முகத்தில் ஒரு சிறுபுன்னகை கூட இல்லை.

இவன் என் ரமேஷ் இல்லை.

அவர் மனம் ஏமாற்றத்தில் உரக்க கத்தியது.இத்தனை வருடங்களாக அவருடைய  இதயத்தில் தேக்கி வைத்திருந்த அந்த பிம்பம் சுக்குநூறாக உடைந்தது.

இங்கு வந்து அவனைப் பார்க்காமலே இருந்திருக்கலாமோ?

விலை மதிப்பற்ற பொருளை தவற விட்டதுபோல தவித்தார்.


இருந்தாலும்அவரைப் பாசம் விடவில்லைஅவனைப் பழைய ரமேஷாகப் கற்பனை செய்து கொண்டார்.

ரமேஷ்என்று சொல்லிக் கொண்டேகண்ணiர் மல்ககட்டியணைக்க எழுந்தார்


ரமேஷ் நகர்ந்து நின்று கொண்டான்

"இது யாரு மம்மி?” என்றான்


மம்மியான மாமி விளக்கினாள்: 'நான் அடிக்கடி சொல்வேனே..... அங்கிள்... சுப்ரமணியன்அது இவர்தாண்டா

ஒன்னை தூக்கி வளர்த்தவராச்சே . அவரையே  உனக்கு  அடையாளம் தெரியலையா   மறந்துட்டியான்ன உனக்கு அவருன்னாஉயிராச்சேடா”  மாமியே ஆச்சர்யப்பட்டாள்.


ரமேஷ்சிறிது யோசித்தான்பின்னர், "யெஸ்குட் ரிகலெக்ட்எதோ  ஷேடோ மாதிரி தெரியுதுஹெள டுயூடு அங்கிள்என்றுசொல்லிக் கொண்டேசம்பிரதாயமாக  அவர்  கையைப் பிடித்துக் குலுக்கினான்


பிறகு, "மம்மிநான் லைப்ரரி வரைக்கும் போயிட்டு வரேன்ஒரு நாவல் வாங்கிட்டு வரணும்.கேஅங்கிள்பைபைஎன்று சொல்லிக்கொண்டே ஒட்டுதலே இல்லாமல்  போய்விட்டான்.இவர் மனம் கலங்கியது.கண்ணீர் கூட எட்டிப் பார்த்ததுஅவனை பிரிந்துவிட்டஏமாற்றத்தில் தவித்தது.

அவருடைய  ரமேஷ் - காணாமல் போய்விட்டான்நிஜமாகவே நிழலாகி விட்டான்

அந்தக்குழந்தை பெரியவனாகி விட்டது நியாயம்ஆனால் பெரியவரான இவர் குழந்தையானதுதான் தப்பு.


இனி ஒரு நொடி கூட அங்கிருக்க ப்பிடிக்காதவராய்  மாமியிடம் சொல்லிவிட்டு அந்த வீட்டைவிட்டு  வேகவேகமாகவெளியேறினார்.மனம் பாரமாக இருந்தது.

முன்பு அரிசிச் சோற்றுக்காகஎந்த வேகத்தில் நடந்தாரோஅதே  வேகத்தில் மனம் முழுக்க  சோகத்துடன் நடந்துகொண்டிருந்தார்.


நடந்து நடந்துமீண்டும் அதே கோவிலுக்குள் போனார்.


அங்கே முருகன்  பத்து வருடத்திற்கு முன் வணங்கிய போது இருந்த மதிரியே  அழகான சிறுபாலகனாகவே காட்சியளித்தார்

பலமுறை இந்த கோயிலுக்கு வந்து  இந்த   அழகிய  திருஉருவத்தை நம் மனதில் நன்கு  பதிய வைத்துக் கொண்டாலே போதுமே…நாம்எங்கிருந்தாலும் மானசீகமாக வணங்கி கொண்டாடலாமே…

பிறகு மீண்டும் எத்தனை வருடங்கள் கழித்து தரிசனம் செய்ய நாம் நேரில் வந்தாலும் அதே பாலனின் அழகுடன்  தன் தோற்றமும்தன்னுடைய மனம்கவரும் புன்னகையும் மாறாமல் முருகன் காட்சி கொடுப்பது மனதிற்கு எவ்வளவுஇதமாக இருக்கிறது


அவர் கண்கள் மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தின.மனதிலிருந்த பாரத்தை  மறைய வைத்த அந்த நித்யபாலனை மனதார போற்றினார்.


தன்னை மறந்த அந்த சிறுவனைப்பற்றி நினைத்தார் அவருக்கு மனம் சற்று லேசானது.


முன்பெல்லாம்  ரமேஷுடன் அடிக்கடி இந்த கோவிலுக்கு வரும்போதெல்லாம் ரமேஷ்  இவரிடம் நிறைய கேள்விகள்கேட்பான்.முடிந்தமட்டும் பதில்சொல்வார்.


அப்படித்தான் ஒருமுறை கேட்டான் 

 “மாமா…. உலகம் உருவாகர்துக்கு  முன்னாடிலேந்தே இந்த முருகன்  இருக்கான்னு சொல்றேளேஅது உண்மையா இருந்தாஅவனுக்கு மட்டும் வயசே ஆகாதா?அப்புறம் 

அவன் ஏன் இந்த கோவில்ல   இன்னும்  பெரியவனாகாமல்… எப்பபாத்தாலும்  சின்னவனாவே  இருக்கான் மாமா?" என்றான்.  

அப்போது அவருக்கு பதில் சொல்லத்தெரியவில்லைஇந்த ச்சிறுவன் எப்படி யெல்லாம்  புத்திசாலித்தனமாக கேள்விகேட்கிறான் என்று  பெருமையாகமட்டும்  நினைத்தார்.ஆனால் இப்போது அவன் மேலிருந்த புத்திசாலி என்ற கருத்து மாறிவிட்டது.ஏனென்றால்  அந்த கேள்விக்குத்தான் இவருக்கு பதில் கிடைத்துவிட்டதே.






















































102









108












சுசமுத்திரம் 115 பிடிக்குதுகுவார்ட்டர்ஸ் பெரிசானதாலஎனக்குத் தலையும் புரியல... வாலும் புரியல... உங்களுக்குத் தெரியாதா, "ஸ்மால் இஸ் பியூட்டிபுள்." அன்று முழுக்கஅங்கேயே இருக்க நினைத்த நான்மாமியின் அன்பான வற்புறுத்தலையும்பொருட்படுத்தாதுஏதோ சாக்கு போக்குச் சொல்லிவெளியே வந்தேன்முன்பு அரிசிச் சோற்றுக்காகஎந்த வேகத்தில் எந்தஆற்றாமையில் நடந்தேனோஅதே வேகத்தில் அதே ஆற்றாமையில் நடந்தேன்ஆனால் இப்போது ஏமாற்றம் என் கால்களுக்குநங்கூரம் பாய்ச்சுவது போலிருந்ததுஇந்த ஏமாற்றம் தாளமுடியாமல் முறையிடுவதற்கோ அல்லது முட்டிக்கொள்வதற்கோஉத்திரசுவாமி மலைக்கு வேகமாகப் போனேன்ஒருவித உரிமைக் கோபத்தோடு படியேறினேன்பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தஅதே அதர விரிப்புடன்அந்தச் சிரிப்பின் சக்தியுடன்சித்தி காட்டும் முக்தியுடன்முத்தி காட்டும் மோனத்துடன் முருகன் சிலை காட்சிதருகிறது. “முருகன்உலகம் வரதுக்கு முன்னேயேஇருக்கான்னு சொல்றேளேஅப்படின்னா.... அவன் ஏன் பெரியவனாகாமல்அப்படியே இருக்கான் மாமா?" என்று அன்று ஒர் ஊனக்குழந்தை கேட்ட கேள்விக்குஇன்று விடை கிடைத்த ஞானப்பரவசத்தால்கும்பிடக்கூட மறந்தவனாய்நிற்கிறேன்தீபாவளி மலர்கல்கி-1978