Sunday, September 28, 2025

அழகான ஆரம்பம்…


சங்கருக்கும் ல்லிதாவுக்கும் ல்லிதாவின்  கிராமத்துக் கோயிலில் கல்யாணம் நல்லபடியாக முடிந்தது. மணமக்கள் இருவரும் ஓரிரு நாட்களில் அங்கிருந்த சில உறவினர்களின் வீட்டு விருந்துகளை முடித்துவிட்டு சென்னை செல்ல தயாராகினர்.


ஏழைகளான ல்லிதாவின் அப்பாவும் அம்மாவும் அவர்களது வசதிக்கு தகுந்தபடி ஓரளவு  நல்ல புடவைகள் கண்ணாடி வளையல்கள் பழங்கள் புது சீப்பு கண்ணாடி தலையணை பாய் போன்ற பொருட்களை பைகளில் அடைத்து  மணமக்களிடம் ஒப்படைதஃதனர்.


ல்லிதாவின் கணவன் புதுமாப்பிள்ளை சங்கர் அவர்களுக்கு கூடமாட உதவினான்.

பெரிய மனதுடன் சங்கரின்  முதலாளி சில நாட்கள் பயன்படுத்திக்கொள்ள அவனுக்கு தன்னுடைய காரை கொடுத்திருந்தார். எல்லாம் நல்லபடியாக முடிந்ததும் அந்தக்காரில் பக்கத்தில் புது மனைவி ல்லிதாவை உட்கார வைத்துக்கொண்டு மனதில் மகிழ்ச்சி பொங்க மெதுவாக ஓட்டிக்கொண்டு வந்தான்,சங்கர். களைப்பில் காரில் தூங்கிக்கொண்டே வந்தாள் ல்லிதா.


மதியத்தை நெருங்கிய ஙேளையில் சங்கரையும் ல்லிதாவையும் சுமந்து வந்த கார் சென்னையில் சரியாக  ஒரு வீட்டின் படிக்கட்டுகளுக்கு  முன் நேராக வந்து நின்றது.தூக்கம் கலைந்து கண் திறந்து பார்ததாள் ல்லிதா. புதுமணப்பென் ல்லிதாவின்  விழிகளில் எதோ ஒன்று தெரிந்தது.அது ஏமாற்றமா அல்லது பயமா என்று இனம் காண முடியாத ஒரு உணர்வு.


அது ஒரு பழையகாலத்து வீடு.பழைய காலத்து வீடு மட்டுமல்ல.கொஞ்சம் இடிபாடுகளுடனும் இருந்த வீடுதான். ஏழ்மையில் தவித்த  ல்லிதாவின் கிராமத்து வீடே இதை விட நன்றாகவே இருக்கும்.


ல்லிதாவும் சங்கரும் உறவுமுறைதான்.ல்லிதாவின் அம்மாவிற்கு சொந்த சித்தியின் மகன் தான் மாப்பிள்ளை சங்கர்.சித்தி சித்தப்பா இருவருமே இப்போது உயிருடன் இல்லை.

தாயின் தம்பி முறை என்பதால் ல்லிதாவிற்கு தாய் மாமன் தானே.


சங்கர் சிறுவயதிலிருந்தே சென்னையிலேயே வளர்ந்தான்.படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான்.ல்லிதா உறவினர் குடும்பத்தில் நடந்த ஒன்றிரண்டு குடும்ப  திருமண விழாக்களுக்கு சங்கரின் அம்மா தன் இரட்டை பிறவிகளான மகள்களுடன் மட்டுமே வந்திருக்கிறாள்.அதனால் மாமன் முறை தான் என்றாலும்  திருமணத்திற்கு முன்புவரை ல்லிதாவை  சங்கர் பார்த்தது கூட இல்லை. 


ல்லிதா படிப்பில் ரொம்பவும் சுமார்.அதனால் பத்தாவது முடிக்கவே பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது. பிறகு வரவே வராத படிப்பை அப்படியே நிறுத்திவிட்டு தையல் கலை கற்றுக்கொண்டாள்.அதுமட்டுமல்ல சமையல் கலையிலும் கொடிகட்டிப்பறந்தாள்.

செட்டும் சீருமாக குடும்பம் நடத்தும் திறனும் சலிக்காமல் உடலை வருத்தி உழைக்கும் குணமும்  அவளை உறவினர் மத்தியில் உயர்த்தவே செய்தன.ஒரே மகளான ல்லிதாவை  நல்ல மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுக்கவேண்டும்  என கூலி வேலை செய்யும் பெற்றோர் தங்கள் உறவினர்களின் உதவியுடன் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தனர்.



சென்னையில் ஒரு மேட்ரிமோனியல் நிறுவனத்தில் வேலை செய்யும் சங்கர் ப்லஸ்டூ வரை படித்திருக்கிறான்.அவன் நன்றாகப் படிப்பான்.

ஆனால்,அவன் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதுதான் அவனுடைய தந்தை அவருடைய அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மரணம் அடைந்தார்.சங்கரின்  அப்பா வேலை செய்த தனியார் நிறுவனம் கொடுத்த நிவாரணத்தொகையை வைத்து அதிகம் படிக்காத குடும்பத்தலைவியான சங்கரின் அம்மாவால்  எவ்வளவு முயன்றும் மூன்று வருடங்கள் மட்டுமே குடும்ப செலவுகளை சமாளிக்க  முடிந்தது.அப்படியும் சில வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து கொண்டுதானிருந்தாள்.

ஆனால்,தன் குடும்பநிலையை பற்றி வெளியே யாரிடமும் அம்மா சொன்னதில்லை.குழந்தைகளும் இருப்பதைக்கொண்டு நிறைவாக வாழும் கலையை அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டன.


குடும்ப சூழ்நிலை அறிந்த சங்கர்  ப்லஸ்டு முடித்து விட்டு நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருந்தும்  மேற்கொண்டு படிக்கும் எண்ணத்தையே கைவிட்டு வேலை தேடி பல இடங்களில் அலைந்தான். பிறகு செய்தித்தாளில் வந்த வேலைவாய்ப்பு விளம்பரத்தால் கிடைத்த இந்த வேலையில் சேர்ந்து  பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.இந்த வேலை கிடைத்த ஒரு வருடத்திலேயே அம்மாவை வேலைக்குப் போகாமல் தடுத்தான்.ஆனால்,அம்மாவோ குடும்பச்செலவுக்கு ஆகும் என்று வேலை செய்துகொண்டுதானிருந்தாள்.


சங்கர் இந்த ஒரே நிறுவனத்தில் தொடர்நது  வேலை பார்த்துக்கொண்டிருப்பதற்கு  பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முதலும் முக்கியமான காரணம் இரட்டைப் பிறவிகளான சங்கரின் தங்கைகள் தான்.அவர்களின் ப்லஸ்டூ வரையிலான படிப்புசெலவு.   பிறகு திருமண செலவு  இப்படி அடுக்கடுக்கான செலவுகளுக்காக  அவன் வாங்கியிருந்த  கடன்களை கொஞ்சம் கொஞ்சமாக அடைப்பதற்காகவும் குடும்ப செலவுகளை சமாளிக்கவும்  இந்த நிறுவன முதலாளி  அவ்வப்போது சம்பளத்திற்கு மேல் பணம் கொடுத்து உதவி செய்ததுதான். 


தன்னுடைய கடமைகளை நிறைவேற்ற உதவும் அந்த நிறுவனத்தில்  அலுவலக உதவியாளராக இருந்தாலும் சங்கர் பல சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர்களுக்கு தேநீர் கூட தயாரித்து கொடுத்திருக்கிறான். மேலும் அந்த நிறுவன முதலாளி, சங்கருக்கு கார் டிரைவிங் கற்றுக் கொடுத்து லைசென்சு வாங்கவும் உதவினார். 

முதலாளியின் கார் டிரைவர் லீவில் போகும்போதெல்லாம் அவருக்கு இவனே டிரைவராகிவிடுவான்.அதற்காகத் தனியாக பணமும் அவனுக்கு கொடுத்துவிடுவார் முலாளி.

இப்படியாக அந்த நிறுவனத்தில்  இன்னதென்று பிரித்துசொல்லமுடியாதபடி பல வேலைகளை செய்து வந்தான் சங்கர்.


சங்கர்  யாரிடமும் அதிகம் பேச மாட்டான். அவனுக்கு அம்மா தான் உலகம்.அப்பாவின அகால மரணம் அம்மாவையும் இழந்துவிடக்கூடாதென்ற தவிப்பை அவனுள் உண்டாக்கியிருந்தது.

வறுமையிலும் கௌரவமாக குடும்பம் நடத்தும் அம்மாவின் மேல் அளவுகடந்த மரியாதை சங்கருக்கு உண்டு. அதேசமயம் சிறு வயதிலேயே குடும்ப பாரம் சுமக்கும்  சங்கர் மீது அளவுகடந்த பாசம் கொண்டிருந்தாள் அம்மா. அதனால் சங்கரின் தேவைகளை முடிந்தவரை பார்த்து பார்த்து செய்தாள். சங்கர் சம்பளத்தை அப்படியே அம்மாவிடம் தான் கொடுப்பான்.

வீட்டின் வரவு செலவு எதிலும் அவன் தலையிடுவதில்லை எல்லாமே அம்மாதான்.

அம்மா ஆலோசணை சொல்லும்போதெல்லா்ம்  ஏன் எதற்கு என்று கேள்வியே கேட்கமாட்டான். “சரிம்மா. செய்யலாம்மா”என்று மட்டும்தான் சொல்வான்.


இந்நிலையில் திடீரென சங்கரின் அம்மா சாதாரண தலைவலி என்று ஆரம்பித்து, 

மூளையில் கட்டி என்று தெரிந்ததும் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்தபோது, இரவில் ஹார்ட் அட்டாக் வந்து தூக்கத்திலேயே இறந்து போனார்.சங்கர் ஸ்தம்பித்துப் போனான்.


அம்மாவின் காரியங்கள் முடித்து உறவினர்கள் போன பிறகு தனிமையில் வாழ  சங்கரால் முடியவில்லை. தாயை இழந்து செய்வதறியாமல் தவித்த  சங்கரை உறவினர்கள் ஆலோசனை சொல்லி ல்லிதவை திருமணம் செய்து வைத்தனர்.


சங்கரின் திருமணத்திற்கு அவனுடைய முதலாளி வந்தார்.வீட்டு உபயோகப்பொருட்கள் அத்தனையும் வாங்கிக் கொடுத்தார்.

ஆனால் அதை வைக்கும் அளவிற்கு ஓரளவு பாதுகாப்பான பெரிய வீடு சங்கருக்கு அதுவரை இல்லை.

அதனால்தான் இந்த வீட்டை குத்தகைக்கு எடுத்திருந்தான் சங்கர்.

சென்னையில்  அவன் பட்ஜெட்டுக்கு இந்த  வீடு கிடைத்ததே பெரிய விஷயம்.


அந்த பகுதியில் இருந்த மிகப்பழமையான கோயிலுக்கு சொந்தமான அந்த 

வீடும் கோயிலை விட மிகப்பழமையாகவே இருந்தது. அங்கு ஏற்கனவே இரண்டு குடும்பங்கள் குடித்தனம் இருந்தன. காரிலிருந்து இறங்கி சுற்றிவந்து  ல்லிதாவிற்காக கதவைத்திறந்துவிட்டான் சங்கர்.

கீழே இறங்கிய ல்லிதா அந்த வீட்டின் நான்கு படிகளையும் ஏறி நிலைவாசல் வரை சென்றவள் நின்றுவிட்டாள். திறந்திருந்த  இரட்டை மரக்கதவுகளின் வழியாக அந்த வீட்டிற்குள் பார்த்தாள்..


அந்த வீட்டின் வாசலும் ,வீட்டின் மேலே சில இடங்களில் உடைந்து போன ஓடுகளால் வேயந்தகூரையும்  அந்த   சதுரவடிவிலிருந்த வீட்டின் உள்ளே  நடுவில் தெரிந்த சிறிய முற்றமும்.அந்த முற்றத்தைச் சுற்றி மரத்தாலான வண்ணங்கள் போய்விட்ட தூண்களும், தூண்களில் அங்கங்கே கரையான்கள் அரித்திருந்ததை சுத்தம் செய்திருந்த அடையாளங்களும் அந்த முற்றத்தின்  கம்பியில் தோரணங்களாக அங்கே  குடியிருந்தவர்களின் ஏழ்மையை உணர்த்தும் நிறம் வெளுத்திருந்த  பழைய  துணிகளுமாக இருந்த அந்த வீட்டுக்குள் நுழையவே  ஏனோ ல்லிதாவுக்கு தயக்கமாக இருந்தது.ஆனால்,சங்கருக்கு இதைவிட்டால் வேறு வழியில்லையே.யோசனையுடன் நின்ற ல்லிதாவிடம் வந்த சங்கர்

“உள்ளே போனதும் இடது பக்கம் திரும்பனா முதல் வீடுதான் நம்ம வீடு ல்லிதா, வீட்ட திறந்து,உள்ள போ நல்லா ஓய்வெடுத்துட்டு இரு.நான் டிக்கில இருக்க சாமான்களை கொணாந்து வச்சிட்டு  பழைய வீட்டுக்குப்போய் நம்ம முதலாளி குடுத்த புது சாமான்களை கொண்டுட்டு வரேன்.” என்று சொல்லி பாண்ட் பேக்கட்டிலிருந்த சாவியை   ல்லிதாவின்  கைகளில் திணித்தான் சங்கர். பிறகு காரின் பின்பக்கம் ஓடினான்.


ல்லிதா மறக்காமல் முதலில்  வலது காலை எடுத்து வைத்து நிலைவாசல்படியை தாண்டி வீட்டிற்குள் போனாள். உள்ளே சென்றபோது  வலது பக்க போர்ஷனில் திறந்திருந்த கதவுகளுக்கு முன் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் திருமணக்கோலத்தில் இருந்த  லலிதாவை ஆரவமாகப் பார்த்தார்கள்.அவ்களுக்கு பின்னால் நின்றிருந்த அவர்களின் அம்மா ல்லிதாவுப் பார்த்து புன்னகை செய்தாள். ல்லிதாவும்  பதிலுக்கு மகிழ்ச்சியுடன் சிரித்தாள். ஆனால் அவர்கள் வேறு எதுவுமே பேசவில்லை அவளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


இதனால் ல்லிதா கொஞ்சம் சங்கோஜத்துடன நெளிந்தாள்.பிறகு தலையை குனிந்து கொண்டு தன் கணவன் சொல்லியிருந்த இடது பக்க வீட்டை நோக்கி மெதுவாக நடந்து சென்று தன் வீட்டுக்கதவின் பூட்டினை கதவைத் திறந்தாள்.இரட்டை மறக்கதவுகளை மெதுவாகத்திறந்தாள்.


சரியாக அந்த நேரத்தில்  சங்கர் தன் கைகளில் கார் டிக்கியிலிருந்து எடுத்து வந்திருந்த ல்லிதாவின் வீட்டில் கொடுத்திருந்த  பைகளை தடாலென்று உள்ளே வைத்தான். பிறகு காருக்கு மீண்டும் ஓடினான்.

ல்லிதா கவனமாக வலது காலை எடுத்து தன் வீட்டின் உள்ளே வைத்தாள்.

காலில் சுருக்கென்று எதோ குத்தியது.இருந்தாலும் வலியை பொறுத்துக்கொண்டு முன்னேறினாள்.

கதவை அகலத்திறந்து வெளிச்சம் வரவைத்து பார்த்தாள்.அந்த அறை  குப்பைக்கூளமாக இருந்தது. கிழிந்த பாய்கள்.பழைய காகிதங்கள்.மக்கிய கந்தல் துணிகள்.ஏன் ஓரத்தில் பிய்ந்துகிடந்த தென்னந்துடைப்பம் கூட அவளை வரவேற்றது.

சுற்றிப்பார்த்தாள்.அது ஒரு விசாலமான அறைதான்.அதற்கு இடது பக்கம் மற்றொரு அறை.அதுவும் பழைய இரட்டை  மரக்கதவால் வெறுமனே மூடியிருந்தது.அந்த  அறையை திறந்தாள். அதுவும் கொஞ்சம் விசாலமான அறைதான்.ஆனால் தரை பெயர்ந்து செங்கல்கள் உடைந்து மண் துகளும் எலிப்புழுக்கை  நாற்றமும்   மேலே ஒட்டடைகளுமாக வெளிச்சம் இல்லாமல் பார்க்க பயமாக இருந்தது. ல்லிதாவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது.


மீண்டும் கைகளில் பைகளுடன் உள்ளே வந்த சங்கர் அந்த அறைகளின் நிலையை பார்த்தான்.

அவனுக்கு திக்கென்று இருந்தது.

“மன்னிச்சிக்கோ ல்லிதா,அவசரத்தில இந்த வீடுதான் கிடைச்சிது. ஏற்கனவே நாங்க குடிஇருந்த  பழைய வீடு இத விட நல்லா தான் இருக்கும். ஆனா ரொம்ப சின்னது.

திடீர்னு முதலாளி வேற நிறைய பொருள் வாங்கிக் குடுத்துட்டாரா. அவ்ளோ பொருள்களை  வைக்க அந்த வீடு போதாது ல்லிதா.பெரிய வீடு பாக்க நிறைய இடம் போனேன். என் படஜெட்டும் இடிச்சிது.அதான்,

ப்ரோக்கர் என் பட்ஜெட்ல ரெண்டு ரூம் வீடு இருக்குனு சொன்னாரு . கல்யாண தேதி நெருங்கிடுச்சா. தனியா அலய முடியல ல்லிதா. எங்க இது கிடைக்காம போயிடுமோனு யோசிக்காம அட்வான்ஸ் பணத்தை உடனே குடுத்துட்டேன். இதுவரை நான் இந்த வீட்டை திறந்து கூட பாக்கல. பெரிய தப்பு பண்ணிட்டேன். ” தயக்கத்துடன் கையைப் பிசைந்தான் சங்கர்.

அதேசமயம, ல்லிதாவின் முகம் வாடி இருப்பதைப் பார்த்தான்.அதனால்,

“ல்லிதா, இன்னிக்கே முதலாளிகிட்ட காரை வேற ஒப்படைக்கனும் ல்லிதா.  நான் போயிட்டு ஒரு நாலு மணி நேரத்துல வந்திடறேன்.வந்து நானே சுத்தம் பண்றேன். நீ எதுவும் செய்யாத” கெஞ்சுகிற குரலில் சொல்லிவிட்டு போய்விட்டான் சங்கர்.சங்கர் போனதும்

என்ன செய்வது என்று புரியாமல் யோசனையோடு அந்த வீட்டை சுற்றிப் பார்த்தாள் ல்லிதா.அங்கே கொஞ்சநேரம்  உட்காரக்கூட தூய்மையான இடமில்லாமல் இருந்தது. உடல் களைப்போடும்  மனவேதனையோடும் சுவற்றில் சாய்ந்து  நின்றுகொண்டே இருந்தாள் ல்லிதா. 


அப்போது

“அக்கா,நீங்கதான் இந்த வீட்டுக்கு வந்திருக்கிற புதுப்பொண்ணா? எங்கம்மா சொல்லிக்கிட்டே இருந்திச்சி.” என்று குரல் கேட்டு வாசலைப் பார்த்தாள் ல்லிதா. அங்கே பனிரெண்டு வயது நிரம்பிய ஒரு சிறுமி , அவள்  நீல நிறத்தில் மஞ்சள் பூக்கள் போட்ட பழைய சுடிதார் அணிந்திருந்தாள்.தலைமுடியை அழுந்தவாரி பின்னாமல் ரப்பர்பேண்ட் போட்டிருந்தாள்.காதுகளில் ப்லாஸ்டிக்கில் தோடுகள் அவள் மாநிறத்திற்கு பளிச்சிட்டது.

அவளது குழந்தைபோன்ற சிரிப்பு , வரிசை சரியில்லாத பற்களை காட்டிக் கொடுத்தது. சிரிக்கும்போது கன்னக்குழிகளும்  மெல்லிய உதடுகளும் இயற்கையாகவே வளைந்த புருவமும் அழகாகவே இருந்தாள். அவள் தோளில் சில துவைக்கவேண்டிய அழுக்குத்துணிகள் இருந்தன.அவள் வலது கையில் பக்கெட்டும் அதில் சோப்பு டப்பாவும் ப்லாஸ்டிக் ப்ரஷும் இருந்தது.

ல்லிதா அந்த சிறுமிய ஆச்சர்யமாகப் பார்த்தாள்.


“ஆமாம் இந்த வீட்டுக்குதான் வந்திருக்கோம்.நீ யாருமா.உன் பேரென்ன?” என்று ல்லிதா தன் மன வருத்தத்தை மறந்து சகஜமாக பேசினாள்.


“என் பேரு ரேகா,நானும்  இந்த வீடுதான்  அக்கா.என் அம்மா வீட்டு வேல பண்றாங்க.நானும் தம்பியும் ஸ்கூல் போறோம்.என் அக்கா புடவ கடைல வேல பாக்கறா.அப்பா மெக்கானிக் கடைல வேல பாக்கறாரு.இதுதான் எங்க வீடு” என்று ல்லிதா கேட்காமலே கடகடவென்று விவரங்களை சொல்லிய ரேகா,மூன்றாவதாக இருந்த வீட்டைக் காட்டினாள்.அந்த வீடுமட்டும் சற்று சிறியதாக இருந்தது.

ல்லிதாவிற்கு அந்த சிறுமியை பார்த்ததுமே மிகவும் பிடித்துவிட்டது.


“ஓ இதுதான் உங்க வீடா?.நல்லதா போச்சு.ரேகா,இங்க எங்களுக்கான குளிக்கும் அறை எங்க இருக்குமா” என்று  கேட்டாள் ல்லிதா.

 ரேகா ல்லிதாவை அழைத்துப்போய் முற்றத்தின் மறுபுறம்  இருந்த ல்லிதாவின்  போர்ஷனுக்கான பாத்ருமைக் காட்டினாள்.

மூன்று பக்கம்  சுவர் மேலே கூறையில்லை கதவு ம் ஆணிகள் பெயர்நது  தொங்கிக் கொண்டிருந்தது.என்ன இப்படியிருக்கு என்று ல்லிதா யோசித்தாள்.

ரேகா என்கிற அந்த சிறுமி அமைதியாக நின்ற  ல்லிதாவை வீட்டின்  பின்புறம் அழைத்துப் போனாள். 


அங்கே  கிணறு இருந்தது.எட்டிப்பார்த்தாள் ல்லிதா.நிறைய தண்ணீர் இருந்தது. ஆனால் கயிறு இராட்டினம் எதுவுமே இல்லை.பக்கத்தில் துணிதுவைக்கும் கல் இருந்தது.

“அக்கா, நாங்கலாம் அவங்கவங்க வீட்டுக்கு தனித்தனி தாம்பு கயிறு,இராட்டினம்னு தான்  வச்சிப்போம் “ரேகாவே  விளக்கிக் கொண்டிருந்தாள்.

திரும்பிப்பார்த்தாள் ல்லிதா.அங்கே  கிணற்றுக்கு எதிர்பக்கம் மதில் சுவரோரமாக  மூன்று டாய்லெட்கள் இருந்தன .

இரண்டு டாய்லெட்களிலும்   பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்ததை கவனித்தாள் ல்லிதா.

அதைப் பார்த்ததும் அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

மூன்றாவது டாய்லெட் மட்டும் திறந்துகிடந்தது. அது சுத்தமாக இருப்பதையும் பார்த்தாள் ல்லிதா.

திறந்திருந்த டாய்லெட் தான் தன் போர்ஷனுக்கானது என்று  ரேகா சொல்லாமலே ல்லிதாவிற்குப் நன்றாகவே புரிந்தது.இருவரும் மீண்டும் ல்லிதாவின் போர்ஷனுக்கு வந்தனர்.

தனக்கு துணி துவைக்கும் வேலை இருப்பதாகவும் பிறகு பேச வருவதாக ரேகா சொன்னதும்

 அந்த சிறுமிக்கு நன்றி சொல்லிய ல்லிதா  தன் வீட்டிருந்து கொண்டு வந்த கல்யாண தாம்பூலப்பைகளில் ஒன்றை ரேகாவிடம் கொடுத்தாள்.

“ரேகா,ஒரு நாள் இங்க சாப்பிட வரணும்” என்று ரேகாவின் தலையை பாசத்துடன் தடவிச் சொன்னாள் ல்லிதா. சந்தோஷமாக தலையாட்டினாள் ரேகா.


ரேகா போனதும் தன் அறைக்குள்  வந்த ல்லிதாவுக்கு இப்போது  தண்ணி தாகமாக இருந்தது. இப்படி எந்த வசதியும் செய்து கொடுக்காமல் தன்னை இங்கு அழைத்துவந்த கணவனை நினைத்ததும்  மீண்டும் அவளுக்கு வருத்தமாக இருந்தது.


ல்லிதாவிற்கு  தன் பிறந்த வீட்டில் வேலைகள் செய்து கொண்டே இருக்கும்போது பசியே தெரியாது.  தனக்குப் பசிக்கிறது என்று ஒருநாளும்  அம்மாவிடம் சொன்னதேயில்லை.  ஆனால், அக்கறையுடன் அம்மாவே வற்புறுத்தி இவளை சாப்பிட வைப்பாள். இரண்டு வாய் சாப்பிட்ட பிறகுதான் ல்லிதாவிற்கு தன் பசியே புரியும். 

இவள் பசியை எப்படித்தான் அறிந்து கொள்வாளோ  அம்மா என்று ஆச்சர்யப்படுவாள் ல்லிதா.

இப்போது தன் அம்மாவின்  ஞாபகம் வந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. தன் அப்பா அம்மாவைப் இப்போதே பார்தது  இங்கே தனியாக தண்ணி கூட இல்லாமல் நின்றுகொண்டே தான் தவிப்பதை சொல்லி அழவேண்டும் போல இருந்தது.தன் வாழ்க்கையின் ஆரம்பமே இப்படியா?  என்று  நினைத்ததும் சுயபச்சாதாபத்தில் ல்லிதாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துவிட்டது.வாசக்கதவுக்கு பின்புறம் யாரும் பார்க்காத இடத்தில் சுவரில் சாய்ந்து சத்தம் வெளியே வராதபடி  புடவை முந்தானையால் வாயை பொத்திக்கொண்டு  “அம்மா” என்று கேவிகேவி அழுதாள் ல்லிதா…


அந்த சமயத்தில்,

“அண்ணி” என்று அழைக்கும் குரல் அவளை மேலும் அழவிடாமல் தடுத்தது.முந்தாணையால் கண்களை துடைத்துவிட்டு கதவிற்கு பின்னாலிருந்து வெளியே வந்தாள் ல்லிதா.

அவள் வீட்டு வாசலில்ல் கையில் பையுடன் ஒரு  சிறுவன் நின்றிருந்தான்.


“சங்கர் அண்ணன் வீடுதான?” என்றான்.


“ஆமாம், அவங்க வீடுதான்.ஆமாம்.நீயாருப்பா?” ல்லிதாவின் குரலில் சற்று வெறுப்பு தெரிந்தது.


“அக்கா ,என் பேரு சேகர் .நான் இந்த வீட்டிலேந்து மூணாவது வீட்டுல இருக்க “கந்தன் மெஸ்லேந்து” வரேன்.கொஞ்சம் முன்னாடி சங்கர் அண்ணன் அங்க வந்தாங்க.இதெல்லாம்  ஆர்டர் பண்ணாங்க.

ஆனா,அவங்க  அவசர வேலயா  வெளில போறாங்களாம்.,அதனால,உங்க  வீட்டைக்காட்டி இடது பக்கம் முதல் வீடு.அங்க கொண்டு போய் அண்ணிகிட்ட குடுக்க முடியுமானு கேட்டாங்க.ஏற்கனவே பணமும் குடுத்துட்டாங்க.அப்புறம் உங்களுக்கு எதாவது உதவி தேவைப்படுமானு  கேட்டு உதவி செய்ய சொன்னாங்க.” என்று சொல்லிக் கொண்டே ப்லாஸ்டிக் பையை நீட்டினான்.

பையை  வாங்கிய ல்லிதா 

“தம்பி ,உதவி தேவைப்பட்டா கண்டிப்பாக நானே உங்க கடைக்கு வந்து சேகர்னு கூப்பிடறேன்பா.சரியா?” என்று புன்னகையுடன் சொல்லி அவனை அனுப்பிவைத்தாள். சிறுவன் சேகர் தலையாட்டிவிட்டுப் போனதும் தன் வீட்டுக்கதவை சாத்தினாள் ல்லிதா.


பிறகு அந்த பையைத் திறந்து பார்த்தாள்.

வாழை இலையில் சுற்றியிருந்த  கமகமவென்று மணக்கும் மசால் தோசையும் ,சட்னி சாம்பார் பொட்டலங்களும் ஒரு மூடிபோட்ட காகித கப்பில்   சூடான டீயும் பெரிய வாட்டர் பாட்டிலும் இருந்தது.ல்லிதாவின் முகம் மலர்ந்தது.


வாட்டர் பாட்டிலை சாய்த்து சிறிது தண்ணீரில் வீட்டிற்குள்ளேயே ஒரு ஓரமாக கைகளை அலம்பினாள்.

குப்பை அதிகம் இல்லாத இடமாக பார்தது  சுவர் பக்கமாக  திரும்பி உட்கார்ந்து கொண்டு பொட்டலங்களை பிரித்து மடியில் வைத்துக்கொண்டாள்.துளியும் சிந்தாமல்  விரல் நுனிகளை மட்டும் பயன்படுத்தி நிதானமாக சூடான மசால் தோசையை பிய்த்து சாம்பார்  மற்றும் சட்னியில் தோய்த்துச்  சாப்பிட்டாள். மிக ருசியாக இருந்தது.

அப்போது “பாவம்  நெடுந்தூரம் தூங்காமல் கார் ஓட்டி வந்தாரே அவர் சாப்பிட்டாரோ இல்லையோ “ என்று சங்கரை நினைத்து ரொம்பவும் கவலைப்பட்டாள்.

பிறகு, மீண்டும் வாட்டர் பாட்டிலிலுந்து சிறிதளவு தண்ணீர்  சாய்த்து சாப்பிட்ட கைகளை கழுவிவிட்டு மீதி தண்ணீரை பத்திரப்படுத்தினாள். கடைசியில் சூடான டீயை ரசித்து குடித்தாள். 

பசியும் தாகமும் அடங்கியது. பொறுப்பும் அக்கறையும் கொண்ட கணவனின் அன்பு நிறைந்த முகம் அவள் மனதில் இப்போது தோன்றியது.இப்போதே தன் கணவனைப் பார்க்க வேண்டும் போல ஏக்கமாக இருந்தது.தன் கணவனைப் பற்றி தவறாக நினைத்ததற்காக வருத்தப்பட்டாள்.


யோசித்தவள் சட்டென்று எழுந்தாள் அறைக்குள் இருந்த தன் வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த அவளுடைய உடைமகள்  நிறைந்த பைகளை   வீட்டிற்கு வெளியே கொஞ்சம் பாதுகாப்பான ஒரு இடத்தில் பத்திரமாக வைத்தாள். மீண்டும் வீட்டிற்குள் வந்து அங்கே  கீழே பிரிந்து கலைந்து கிடந்த துடைப்பத்தை எடுத்து  ஒன்றாகச் சேர்த்து மூலையில் கிடந்த கயிற்றினால் கட்டினாள். பிறகு தன்  புதுப்புடவையைத் தூக்கிச் சொருகினாள். விறுவிறுவென்று இரண்டு அறைகளையும் ஒட்டடை அடித்துப்  சுத்தமாகப்பெருக்கினாள்.


குப்பைகளை அங்கேயே கிடந்த ப்லாஸடிக் பைகளில் அடைத்து வாசலில்  இருந்த குப்பைத் தொட்டிக்குள் வீசினாள். சற்றும்  யோசிக்காமல் சிறுமி ரேகாவின்  வீட்டுக்  கதவைதட்டினாள்.


ரேகாவிடம் இராட்டினமும் கயிறும் வாளியும்  கடன் வாங்கி கிணற்றிலுந்து நீர் இறைத்து இரண்டு அறைகளின்  சுவரையும் தரையையும், குளியலறையையும் தண்ணீர் ஊற்றி சுத்தமாக  நன்கு தேய்த்து அலம்பினாள்.


அந்த தண்ணீர் அங்கிருந்த வாசல் படியின் கீழே இருந்த சிறிய துளை வழியாக முற்றம் நோக்கி வேகமாக பாய்ந்து ஓடியது.


மீண்டும் சிறுமி ரேகாவிடம் கோலமாவு கடன் வாங்கி தன் வீட்டு வாசல் படியிலும் வாசலுக்கு சற்று வெளியேயும் அழகாக கோலம் போட்டாள்.


வீடு குளுகுளு வென்று தூய்மையாகவும் ஈரமாகவும்  இருந்தது. ஆனால்,கசகசவென்று வியர்வையில் நனைந்திருந்தாள்  ல்லிதா. 


மீண்டும் கிணற்றில் நீர் இறைத்து பக்கட்டை குளியறையில் வைத்தாள்.

தன் வீட்டின் வெளியே ஓரமாக வைத்திருந்த பைகளில்இருந்து எடுத்த  இரண்டு புடவைகளுடனும் புது குளியல் சோப்புகட்டியுடனும் குளியலறைக்குள் சென்றாள்.ல்லிதா.


ஆணி துருப்பிடித்து உடைந்ததால்  தொங்கிக்கொண்டிருந்த  பாத்ரூம் கதவில் இரண்டு சுவர்களுக்கு குறுக்கே ஒரு புடவையை நான்கு மடிப்பாக்கி மறைப்பாக தொங்கவிட்டாள்.

ஏற்கனவே கட்டியிருந்த புடவையை வெறும் தண்ணீலில் அலசி ஒட்டப் பிழிந்து குளியலறையின்  ஒரு மூலையில் வைத்தாள். குளிர்நத கிணற்று  நீரில் களைப்பு தீரக் குளித்தாள்.


பைகளைகுடைந்து உள்ளே இருந்த சீப்பை தேடி எடுத்து  தலைவாரி பொட்டு வைத்து தன்னை களைப்பு தெரியாதபடி அழகாக அலங்கரித்துக் கொண்டாள். 


அதற்குள் வீட்டின் தரையில் ஈரம் முக்கால்வாசி காய்ந்திருந்தது. சுவரோரத்தில் மட்டும் கொஞ்சம் ஈரம் இருந்தது.காய்ந்திருந்த இடத்தில் உட்கார்ந்த ல்லிதா சங்கருக்காக ஆசையுடன் காத்திருந்தாள்.

ஈரம் முற்றிலும் காய்ந்தபிறகுதான்  சங்கர் பெரிய அட்டைப்பெட்டிகளுடன் மினிலாரியில் வந்தான்.மிகவும் களைப்பாக இருந்தான்.ல்லிதாவை நினைத்து அவனுக்கு கவலையாக இருந்தது.

அவர்களுக்கு தேவையான இரவு உணவும் தண்ணீரும் வாங்கி வந்திருந்தான் சங்கர்.

வண்டியைவிட்டு வேகமாக இறங்கி வீட்டிற்குள் சென்றவன் முதலில் அந்த உணவுப்பொட்டலங்களை ல்லிதாவிடம் கொடுத்தான்.

அப்போது,தூய்மையான வீட்டையும் குளித்துமுடித்து  தூய்மையான ஆடையில் பளிச்சென்றிருந்த தன் மனைவியையும் பார்த்ததும்  அவனுக்கு இருந்த களைப்பெல்லாம் பறந்து புது உற்சாகம் பிறந்தது.

  “ஏம்மா,நீயேவா எல்லாம் செஞ்ச?  உனக்கு ரொம்ப களைப்பாக இருக்குமே.” என்று அக்கறையுடன் சொன்னான்.

“நம்ம வீட்டுக்கு நான் செய்யாம வேற யார் செய்வாங்க?” என்று சொல்லிக்கொண்டே  

“ முதல்ல தண்ணிய குடிங்க” அக்கறையுடன்

சங்கருக்கு வாட்டர் பாட்டிலில் மீதம் இருந்த தண்ணீரைக் குடிக்கக் கொடுத்தாள் ல்லிதா.

தண்ணீர் குடித்ததும் அவளன்பில் அவனுடைய மனமும் குளிர்ந்தது.


ஓட்டுநர் உதவியுடன்  பொருள்களை வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்தான் சங்கர்.

ஓட்டுநருக்கு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு வந்தான்.

ல்லிதாஅவனிடம்  பாத்ரூமில் பக்கட்டில் இருந்த குளிர்ந்த நீரீல் குளிக்கச்சொன்னாள்.

குளித்து முடித்து சங்கர் வந்ததும்.இருவரும் பேசிக்கொண்டே இரவு உணவு  சாப்பிட்டனர்.


பிறகு பொருள்களை பிரித்து அடுக்க ஆரம்பித்த ல்லிதாவிற்கு கூடமாட ஒத்தாசை செய்தான் சங்கர்.


அந்த சமயத்தில்

“மாமா,இப்போ நம்ம குடும்பம் நடத்தத் தேவையான எல்லா பொருளுமே நம்ம வீட்ல இருக்கு.இருந்தாலும் நாளைக்கு காலைல  கடைக்குப் போய் சமைக்க அரிசி,காய்கறிகள், முக்கியமா கிணத்துலேர்ந்து தண்ணி இறைக்க இராட்டினம்,  தாம்புக்கயிறு ,வாளி,பாத்ரூம் கதவுக்கு  நாலு ஆணி,அப்புறம் கூடவே  மறஇன்னொரு பூட்டு சாவியும் வாங்கனும்”  என்றாள் ல்லிதா.


“சரிம்மா. செய்யலாம்மா” என்றான் சங்கர் மனநிறைவுடன்.

No comments:

Post a Comment