"ராம் ...எங்கம்மாக்கு உடம்பு சரியில்ல..நான் அம்மா வீட்டுக்கு போய் ஒரு வாரம் தங்கி அவங்களை கவனிக்கனும் ராம்... குழந்தைகளை ... நீங்க பாத்துக்கறீங்களா ?"
ஷோபனாவின் கெஞ்சும் குரல் கணவன் ராமிற்கு எரிச்சல் ஊட்டினாலும்,
"சாரி டார்லிங், எனக்கு முக்கியமாக முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்குடா செல்லம்.... சாரி டா... குழந்தைகளையும் கூட்டிட்டு போயேன் ப்ளீஸ்
எங்கம்மாவாலயும் நம்ப வாலு பிள்ளைகளை சமாளிக்க முடியாதுடா... செல்லம்..".
கொஞ்சுவது போல பேசினான்.
"ஓகே ராம்.... குழந்தைகளை ஸ்கூல் லீவு போட வைக்க வேண்டாம்...நான் என் அம்மாவை இங்கயே வரச்சொல்லவா?" அரைகுறை மனதுடன் சரி என்றான் ராம்.
இவளுடைய சொந்த பெற்றோரை அழைக்க அவளுக்கே உரிமையின்றி என்னுடைய அனுமதி தேவைப்படுகிறது என்ற எண்ணம் மனதில் சிறிது மகிழ்ச்சியளித்தது .
மாமியார் விஜயம் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பதை சூசகமாக அவ்வப்போது அவளுக்குக் காண்பிக்கவே செய்தான்... மாமியார் கிளம்பும் வரை.
சில மாதங்களுக்கு பிறகு.... வெளிநாட்டுக்கு வேலை மாற்றலாகிவிட,
குதூகலமாய் தன் பெற்றோர் மற்றும் ஷோபனாவின் பெற்றோர்
ஏக்கத்துடன் விடை கொடுக்க, குடும்பத்துடன் வெளிநாட்டில் காலடி வைத்தான் ராம்.
முதல் சில மாதங்கள் ஆச்சர்யத்தில் நொடிகள் போல பறக்க சீக்கிரமே பெற்றோர் மற்றும் உறவினரை சந்திக்க ஏங்கினான் ராம்.
அதற்கான வழிமுறைகளை தேடி அலைந்தபோதுதான் தெரிந்தது
நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே தன் சொந்தங்களை அழைக்கமுடியும் என்பதை...
அவனுக்கு தன பெற்றோரை அழைக்கக்கூட அங்கு உரிமையில்லை என்பதை
அறிந்த போது திகைத்து நின்றான் ராம்.